Wednesday, February 22, 2017

அதிமுக தலைவராக வைகோ வர வேண்டும்

தலைமை இல்லாமல் தவிக்கும் அதிமுகவை நல்வழிப்படுத்தி தழைக்க வைத்து மீண்டும் ஒரு பலம் பொருந்திய கட்சியாக ஆக்க வைகோவால் தான் முடியும்.

திமுகவை பலப்படுத்தி இன்னும் பெரிதாக கொண்டு வரவேண்டும் என்று வைகோ நினைத்து செயல்பட்ட காலத்தில் அவருக்கு எதிராக கட்சிக்குள்ளே துரோகம் இழைக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கும் செயலுக்கு ஆளானார்.

அன்றையில் இருந்து இன்றைக்கு வரை திமுகவின் தலைமைக்கு ஒரு முடிவு வந்ததும் தான் தான் அந்த பதவிக்கு தகுதியானவர் என்று அழைத்து பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள் என்று அவரை நம்பவைத்தார்கள் அவரது ஆதரவாளர்கள். திமுகவின் செயல் தலைவர் பதவி வந்ததும் திமுகவையும் அதன் செயல் தலைவரையும் ஒருமையில் விளிக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டார் வைகோ.

தமிழகத்தில் புதிதாக முளைத்த சின்ன சின்ன இயக்கங்களை எல்லாம் பொதுவுடைமை கட்சியின் குடைக்கீழ் ஒன்றாக திரட்டி திராவிட கழகங்களுக்கு மாற்றான இயக்கங்களாக உருவெடுக்க வெகுவாக பாடுபட்டவர் என்ற தகுதியின் அடிப்படையில் அதிமுகவினர்கள் வைகோவை அவர்களை தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலையும் தமிழகத்தின் எதிர்காலத்தையும் துல்லியமாக கணிக்ககூடிய ஆற்றல் வைகோவிற்கு இருந்தமையால் தான் 5வர் கூட்டணி 6வர் கூட்டணி என்று கூட்டி அடுத்த முதல்வர் யார் என்று அறிவிக்கும் தலையை அவருக்கு கொடுத்தார்கள் எதிர் அணியினர்.

என்ன தான் நாஞ்சில் சம்பத்து கூவாய் கூவினாலும் கட்சி தலைவர் பதவி எல்லாம் அவருக்கு கொடுக்கமுடியாது. ஆனால் வைகோவோ ஒரு தீர்க தரிசி, தான் சேரும் இயக்கத்தின் எதிர்காலத்தை அழகாக அமைத்துக்கொடுக்கும் தலைமை பண்பு கொண்டவர். ஆகையால் அவரது திறமை விரயமாகாமல் இருக்க அவரது அன்பு சகோதரியின் கொள்கைகளை காக்க வைகோ அதிமுகவின் தலைமையை ஏற்று அதிமுகவை செழிக்க செய்ய வேண்டுவோம்.......

1 comments:

')) said...

இது என்ன நிஜமாலுமே கோரிக்கையா? அல்லது காமெடியா?
கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பதை பார்த்திருக்கிறோம்,இது என்ன கட்சியா கம்பெனியா புதிய சி இ ஓ வை தேர்ந்தெடுக்க?