Thursday, March 2, 2017

மீத்தேனை இங்கு தோண்டி எடுப்பதில் எங்களுக்கு சம்மதமே

காவிரி தமிழர்களின் நதி மிகவும் சொற்பமான நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் நதி இப்போது தான் சமீபத்தில் 2000 ஆண்டுகளாக இருப்பதாக சாண்றுகள் கூறுகின்றன.

இந்த சொற்ப ஆற்றின் படுக்கைகளில் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகின்றது. வெறும் 2000 ஆண்டுகள் சொல்லப்படுகின்ற ஆற்றுப்படுகையில் கிடைக்கும் சொற்ப பணத்தை விட பல இலட்சம் கோடிகள் கிடைக்க கூடிய புன்னிய இடங்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கின்றது.

அவைகள் வேத காலத்தை சேர்ந்த நதிகள், வேத காலம் என்றாலே குறைந்தது 1 இலட்சம் ஆண்டுகளுக்கும் பழமையானவைகள் என்று நேற்றைய பிறந்த குழந்தைகளுக்கும் கூட தெரியும். அப்படியும் சந்தேகம் இருந்தால் வடக்கில் வசிக்கும் எவரையாவது பிடித்து கேட்டுப்பாருங்கள் உறுதிபடுத்துவார்கள்.

கங்கை, யமுனை, சரசுவதி என்று வடக்கில் பெரும் நிலப்பரப்பில் இன்னமும் தினமும் நீர் ஓடுக்கொண்டு இருக்கும் நதிகள் இவைகள். அப்படி வெளியில் கண்களுக்கு தெரியும் வண்ணம் நீர் இல்லை என்றாலும் அடியில் மீத்தேன் தோண்டும் தொலைவுக்கு அருகில் வெள்ளம் புறண்டு ஓடுவதாக வேத ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளில் வடக்கத்தைய பல்கலைகழகங்கள் நிறைய முனைவர் பட்டங்கள் கொடுத்துள்ளது படித்து தெரிந்து கொள்ளவும்.

இன்றைய உலகின் தேவை என்ன மாயமாக மந்திரமாக மேலே பட்டவுடன் நம்மீது இருக்கும் கலங்கங்களை எல்லாம் துடைத்து புனிதப்படுத்தும் ஒரு பொருளைத்தான் நாள் தோறும் மனிதனை வேதங்கள் இட்டு செல்கின்றது.

எத்தனை நாளைக்கு தான் யோகம், கோவில், நதிகள் என்று வீதி வீதியாக மனிதன் அலைவது. இந்த புன்னிய நதிகளின் படுக்கைகளில் கிடைக்கப்போகும் எரிவாயுகளுக்கு விளம்பரமே தேவை இருக்காது. அந்த வாயு வீட்டிலும் நாட்டிலும் உள்ள பாவங்களை கழுவக்கூடியது என்ற உண்மை தெரிந்ததும் மக்கள் ஒன்றுக்கு 10த்தாக வாங்கி குவித்து புன்னியம் தேடிக்கொள்ள மாட்டார்களா.

கங்கை, யமுனை, சரசுவதியின் புன்னிய எரிவாயு தான் இந்தியாவின் அவசியம் மட்டும் அல்ல உலகையே காக்கப்போகும் திட்டமாக இருக்கும் என்ற உண்மையை ஏன் மக்கள் மோடியிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். யாராவது மோடியிடம் சொல்லுங்கள்.

0 comments: