Tuesday, January 29, 2008

இது தான் இன்றைய இந்திய மதசர்பின்மையின் லட்சணம்.(குருமூர்த்தியும் அயோத்தி குப்பம் மோடியும்)

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080127133338&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist=

இது தான் இன்றைய இந்திய மதசர்பின்மையின் லட்சணம் என்று மிகவும் வேதனையோடும் வருத்தங்களோடும் குருமூர்த்தி தனது கட்டுரையை முடித்து இருக்கிறார்.

கட்டுரையின் நோக்கம் மோடியின் வெற்றிக்கு பிறகு அரசியல் விமர்சனம்
என்ற பெயரில் ஒருவர் எழுதிய கட்டுரையில் "மோடி நம்முடன் இருக்கும் (உயிருடன் என்று குருமூர்த்தி சேர்த்துகொண்டதாக படும் வகையில் இப்படி குறிப்பிட்டுடிருந்தார்) வரையில் குசராத்து அரசியலை மாற்றியமைப்பதை போல மாற்றிவிடுவார்" என்று குறிப்பிட்டதாகவும், இதன் மூலம் அந்த கட்டுரையாளர் மோடியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஆணித்தனமாக குறிப்பிடுகிறார் என்றும்.

தொடர்ந்து மத சார்பின்மையின் பல பரிணாம வளர்ச்சிகளை பட்டியலிட்டு, பல அரசியல் காலங்களையும், காங்கிரசு தலைவர்களையும் குறிப்பிட்டு அவர்களதும் அவர்களது கட்சிக்களையும் குறைகூறி இருக்கிறார்.

கட்டுரையை மேலோட்டமாக பார்த்தால், கோட்சே காந்தியை சுட்டு வீழ்த்திய போது அனைத்து இந்தியர்களுக்கும் மனதில் ஏற்பட்டதே ஒரு இனம் புரியாத வலி அதை போலவே இப்படியா எழுதுவான் ஒரு கட்டுரையாளன். என்ன கொடூரமான மனம் கொண்டவனாக அவன் இருக்க கூடும். இத்தனை கீழ்தரனாம எண்ணம் கொண்டவர்கள் தானா அந்த அரசியல் விமர்சகர்கள். மனதில் ஈவு இரக்கம் என்று எதுவும் இல்லமல் இருக்கும் அரக்கர்களா அவர்கள் என்று பொருள் படும் படி குருமூர்த்தி அருமையாகவே கட்டுரையை தீட்டியுள்ளார்.

ஆனால் இங்கு இபொழுது காந்தியும் கொல்லபடவில்லை, அல்லது காந்தியை போல் கொல்லாமை கொள்கையாக கொண்டவரை, அவரை காலில் விழிவது போல் நடித்து, ஆசிர்வதிக்க கையை தூக்கும் போது கொஞ்சமும் பிசக்காமல் நெஞ்சிலேயே துப்பாக்கியை கொண்டு கொன்று அந்த பழியை வேறு மதத்தினரது மேல் இட்டு நாடு தழுவிய கலவரம் வெடிக்க வைக்கவும் இல்லை. அதன் பிறகு நீதிமன்றத்தில் நான் பைதியம் இல்லை மேலும் அவரது சித்தாந்தங்கள் எனக்கு பிடிக்கவில்லை, இப்படியே விட்டால் என்னக்கு பிடிக்காதவைகளாகவே அவர் செயல் பட்டுக்குகொண்டு இருப்பார் அதனால் தான் கொன்றேன் என்றும் யாரும் சொல்லவும் இல்லை.

பிறகு அப்படி வருந்தும் அளவிற்கு என்ன தான் நடந்தது குருமூர்த்திக்கு, அதுவும் ஒரு 60 ஆண்டு கால அரசியலையே மொத்தமாக திட்டி வருந்தும் அளவிற்கு. அந்த கட்டுரையாளர், மோடி இருக்கும் வரை குசராத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வரமுடியாது அது போல தேசிய அரசியலும் ஆகிவிடப்போகிறது. அதனால் எப்படி செயல் பட்டால் அதை தவிற்கலாம் என்று ஒரு கருத்தை மொழிந்துள்ளார். அந்த கருத்து என்ன என்று குருமூர்த்தி குறிப்பிட்டு எழுதி இருக்கும் வசனங்கள் நிச்சயம் இருக்க வாய்ப்புகள் இல்லை.

காரணம் மோடி ஒன்றும் இராமன் ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்றும் சொல்லவில்லை, தவிற கட்டுரையாளரோ ஒன்று முற்றும் துறந்த துறவியும் இல்லை. மோடியின் தலையையும், நாவையும் கொய்து வா, உனது எடைக்கு எடை தங்கம் காசி துறவிகளின் கையால் கொடுத்து அப்படியே சுவர்கத்துக்கு நேரே ஒரு முதல் வகுப்பு சீட்டையும் தருகிறேன் என்றும் கூட அந்த கட்டுரையார் சொல்லி இருக்க முடியாது.

ஒரு மா நிலதின் முதல்வராக இருந்துகொண்டு, கிடைத்த வாய்பினை தவறவிடாமல் அயோத்தி குப்பம் இரவியை போல் ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு தனது மனதில் இருந்த வேறுப்பை கொட்டி, பாய்ந்தும் பயந்தும் ஓடும் மான் கூட்டத்தில் துரத்தி துரத்தி இரசித்து புசித்து வாழும் மிருகத்தை போல திருப்பி அடிக்க முடியாத வயதானவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்துவிட்டு. 3 நாட்களுக்குள் நிலைமையை கட்டுகுள் கொண்டுவர முடியவில்லை என்று வாய் கூசாமல் பதில்ளித்தது மட்டும் இல்லாமல். இது வரையில் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததிற்கு அவர்மட்டும் இல்லை, அந்த கட்சியினது கடை நிலை தொண்டன் கூட ஏன் வருத்த வேண்டும், வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று அல்லவா கேட்டுகொண்டு வருகிறார்கள்.

இவர்தான் இந்தியாவின் மிகவும் திறமை வாய்ந்த முதல்வராம், பிரதமராக வர தகுதியுள்ள ஒரே மனிதன் என்று திரு சோ இராமசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இராமச்சந்திரன் முதல்வராக இருக்கும் போது, தமிழகமே சாதிக்கலவரம் வெடித்து தீயாக பரவிக்கொண்டு இருந்த காலத்தில், சுமார் 3 மாத காலத்திற்கு ஆயுத படையணியினை ஊர் ஊருக்கு நிறுத்தி கலவரத்தில் அப்பாவி மக்கள் மடியாமல் பாதுகாத்தார் அந்த படிக்காத முதல்வர். அவரை நொடிக்கு ஒரு முறை கேளிசெய்து மகிழ்ந்த திரு சோ இராமசாமி, இந்த அயோதி குப்பம் மோடியை பிரதாமராக வேண்டும் என்று விழைகிறார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உங்களுக்காவது ஏதாவது விளங்குதா.

ஒரு முதல்வர் அவரது மா நிலத்தில் நடக்கும் கலவரத்தை அடக்கும் அருகதை இல்லை ( அப்படி சொல்லிகொள்கிறார்கள்). 3000 அப்பாவி மக்களை கொன்று குவித்தது குற்றமோ பாவமோ இல்லை, இப்படி பட்ட மனிதனை தேசிய அரசியலில் விட்டால் பிறகு நாடே சுடுகாடாக ஆகும் என்ற பொருளில் சொன்ன கட்டுரையாளரை என்னமோ காந்தியை சுட்டு கொன்றுவிட்டு நான் மன நோயாளி இல்லை என்று சொல்லிய கோட்சேவை சொல்வதை போல குறிபிட்டுள்ளார்.

மோடி கொன்றால் கூட குற்றம் இல்லை, ஆனால் இவரால் ஆபத்து வர இருக்கிறது என்று சொன்னாலே பாவம், ஒறுக்ககூடிய குற்றம் என்று சொல்ல குருமூர்த்திக்கு எப்படி தான் வாய் வார்த்தைகள் வருகின்றதோ...

குருமூர்த்தின் குடும்பத்தின் பெண்களையும், குழந்தைகளையும், வயதானவர்களையும் குருமூர்த்தியின் செய்கைக்காக அயோத்தி குப்பம் மோடியிடம் சொல்லி ஒரு 3 நாட்கள் நேரம் கொடுத்து குசராத்தில் நடத்தியது போல் நடத்தி, குறிப்பாக வயிறு பிள்ளையோடு இருக்கும் பெண்கள் இருந்தால் முதலில் அனுப்பசொல்லி அந்த அக்கிரமங்களின் வக்கிரங்களை வாய் மொழியாக சொல்ல சொல்லி காணொலியாக்கி குருமூர்த்திக்கு காண்பித்து. பிறகு இப்படி ஒரு கட்டுரை எழுத சொல்லி கேட்க்கவேண்டும் என்ன எழுதுகிறார் என்று பார்க்க வேண்டும். முடிந்தால் அவரது சித்தாந்த தோழர் திரு சோ இராமசாமியின் குடும்பத்தையும் அழைத்து செல்ல சொல்ல வேண்டும். துக்ளக் ஆண்டு விழாவில் என்ன சொல்கிறார் என்றும் பார்க்க வேண்டும் செய்வார்களா. எழுத்திலே இவ்வளவு நாராசமாக இருக்கிறதே, எப்படி தான் பொறுத்து கொண்டு இருகிறார்களோ அந்த குசராத்து மக்கள்.

16 comments:

Anonymous said...

கடேசி பாரா எக்ஸலண்ட்...செய்வோமா ?

')) said...

வாங்க செந்தழழ் இரவி, உங்களின் கோபம் புரிகின்றது. என்னவோ புத்தரை போல் அல்லவா எழுதியுள்ளார் குருமூர்த்தி. உங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

கரண் தாப்பரின் ஸடன் ரிமூவல் வெளியாகி ஒரு மாதமாகி விட்டது. இந்நாள் வரையிலும் ஒரு 'தீர்த்துக் கட்ட சதி'வழக்கோ 'கொலை முயற்சி வழக்கோ 'தூண்டுதல்'வழக்கோ அட் லீஸ்ட் ஒரு நியூஸென்ஸ் வழக்கோ அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்படாத மர்மம் என்ன?

கரண் தாப்பருக்கு எதிராக ஒரு பொதுநல வழக்குப் போட துப்பில்லை. இவர்களெல்லாம் பெரிய எழுத்தாளப் பருப்புகளாம்.

முழுதும் படிக்க:
காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்

தங்கள் பதிவுக்குப் பாராட்டுகள்!

')) said...

His Modi Mastan work will not take off in tamil nadu. Cho must understand first...

')) said...

இரவி நீங்கள் சொல்வது மிகவும் சரியே, தமிழகத்தில் பலிக்க வாய்ப்பே இல்லை. தமிழகம் போல் இன்ன பிற மா நிலமும் மாறினால் தான் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் விடிவு கிடைக்கும்.

')) said...

http://panimalar.blogspot.com/2007/12/blog-post_24.html

வாகாபி வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி, எனது பதிவிலும் இதையே தான் கேட்டுள்ளேன் படிக்கவும்.

')) said...

எப்படித்தான் இந்த குருமுர்த்திகளுக்கு மனசாட்சியை அடகு வைத்து விட்டு எழுத முடிகிறதோ.
அவர்களுக்கு 'மோடி நம்முடன் இருக்கும் வரையில்' என்பதை 'ஆட்சியிலிருக்கும் வரை' என்று படிக்க முடியாது.
ஆனால் மோடியைப் போன்ற கொடியவர்கள், சட்டத்தின் இறுகிய பிடியின் மூலம் அழிக்கப்பட தகுதியானவர்கள் என்பதே உண்மை.

')) said...

வாருங்கள் சமாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நமது மா நிலத்தின் முதல்வரின் தலையையும், நாவையும் கொய்து வர சொல்லி ஒரு துறவி ஏவி விட்டபோது அந்த அரசியல் நாகரிகத்தை பற்றி எதுவுமே சொல்லாத குருமூர்த்தியும் சோவும்.

இந்த தீபாவளியை மக்கள், கலைஞரையும், அவரது கட்சியையும் கரப்பான் பூச்சியை போல் தரையில் போட்டு அடித்து, தேய்த்து உரு தெரியாமல் அழித்து, அதைத்தான் தீபாவளியாக கொண்டாட போகிறார்கள் என்று சொன்ன செயலலிதா அம்மையாரின் அறிக்கையில் வெளிப்படையாகவே முதல்வரையும் அவரது கட்சியினையும் கொன்றழிக்க வேண்டும் என்று செயலலிதா சொன்ன போது இந்த குருமூர்த்திக்கும் சோவுக்கும் அது அரசியல் அனாகரீகமாகவும் வன்முறையாகவும் தெரியவில்லை.

இதே அயோத்தி குப்பம் மோடி 3000 உயிர்களை மிகவும் கொடூரமாக கொலை செய்ய விவாதிக்கும் போதும், செயல்படுத்தும் போதும் தெரியவில்லை. தமிழகத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத மனிதரை பற்றி ஒரு கருத்தை மட்டுமே தெரிவித்த போது அதும் தலையையும், நாவையும் கொய்து வா என்றோ அல்லது கரப்பான் பூச்சியை போல் மிதித்து தரையோடு தரையாக நசுக்கி கொல்லவேண்டும் என்றோ கூட சொல்லவில்லை. இருந்தும் இவைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இருந்துவிட்டு. தொடர்பே இல்லாத அந்த மனிதருக்காக நீலிகண்ணீர் வடித்து காட்ட்டுகிறார். கதை, வசனம், இயக்கம், நாடகமாக்கம் என்ன சோ இராமசாமியா....அதே நக்கல், நையாண்டி....

Anonymous said...

//His Modi Mastan work will not take off in tamil nadu. Cho must understand first...//

பாப்பார ஊட்டுக் குட்டியை டாவடித்து கண்ணாலமும் கட்டிக் கொண்ட செந்தழல் ரவி இப்படி பேசுவது முறையல்ல.

')) said...

வாங்க பால, வார்த்தைகளை கொஞ்சம் கண்ணியமாக உபயோகிக்க கூடாதா. செந்தழழ் இரவி உங்களுக்கு நல்ல பழக்கம் என்று சொல்லுங்கள் பால சயராமன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

ராசகோபாலாச்சாரியார் தமிழகம் தான் வாழ்வதற்குத் தகுதியில்லாமல் போய்விட்டது என்று ஒப்பாரி வைத்தார்.
இன்று அந்த ஓல்ந்தான் சோமாரி கூட்டத்திடம் ஒலிக்கின்றது.
மோடி புரத்திற்கு ஓடுங்களேன்.
தமிழிலே உஞ்ச விருத்தி செய்து கொண்டு பெரும் பான்மைத் தமிழரையும்,தமிழையும் இழிவாகப் பேசி,எழுதிக் கொண்டிருக்கிறீர்களே உங்களை விட்டு வைத்திருப்பதே தமிழர்களின் மனித நேய்ந்தான்.

இந்தச் சந்தடியில் பார்ப்பனப் பெண்களுக்கு வாழ்வு கொடுத்து மகிழும் தமிழர்களைக் கிண்டல் செய்திருக்கும் கூழைக் கும்பிடுப்
பார்ப்பனரின் நாகரீகம் அவாளுக்கே
உரித்தான மானங்கெட்டத்தனம்.

')) said...

வாங்க தமிழன், எனக்கும் புரியாத ஒன்று அது தான். தனக்கும் தனது வாழ்வாதாரத்திற்கும் எள்ளவும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் ஒரு மனிதருக்கு இவ்வளவு வக்காளத்து வாங்கும் இந்த குருமூர்த்தி. தான் வாழும் மா நிலத்தின் முதல்வரின் தலையையும், நாவையும் கொய்து வரவேண்டும் என்று தூண்டிவிட்ட போது இவர் பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்திருப்பார் போலும். உண்பதும், வாழ்வதும் ஒரு இடம், விசுவாசம் வேறிடமா. இதைத்தான் இவர்கள் இசுலாமிய சகோதரரை சொல்லும் வாசகம். இவர்களது அருகதையை பாருங்கள், இவர்கள் செய்வதைத்தான் அடுத்தவன் செய்வதாக சொல்லி பாசாங்கு செய்கிறார்கள் இந்த பொய்குஞ்சு கூட்டம். இவர்கள் இவர்களையே துறவி என்றும் அப்பாவி என்றும் சுய சான்றிதழ்களை வேறு கொடுத்து விழாவும் எடுப்பார்கள்.

')) said...

எல்லாம் மாயை னு இதுக்குத்தான் சொன்னாங்களோ?

')) said...

கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்ப்பதும் பொய், தீர விசாரிப்பதே மேல் என்றார்கள். உதாரணத்திற்கு நண்பர் பால செயராமனின் விவாதங்களை பார்த்தீர்கள் என்றால் புரியும். நாம் ஒன்று கேட்டால் அவர் புரியாதது போல் வேறு எதை எல்லாமோ சொல்லிக்கொண்டே போவார். அப்படியே அழுத்தமாக கேட்டால் எரிச்சலில் வெளியிடமுடியாத வார்த்தைகளால் சாடுவார்........பொய்குஞ்களின் காலம் இது.....

Anonymous said...

well said.pannimalar.

')) said...

இந்த பதிவில், அவர்கள், இவர்கள், இந்த கூட்டம், பொய்க்குஞ்சு கூட்டம் என்று எல்லாம் விளித்தது குருமூர்த்தியும் சோவையும் மட்டும் தான். எந்த சம்யத்தையும், இனத்தையும் குறித்து அல்ல. அப்படி கருத்து படும் படி எனது கட்டுரை அமைந்திருந்தால் மன்னிக்கவும்.