பொதுவாக செயலலிதாவின் நடவடிக்கைகளிலோ, அரசியல் அறிக்கைகளிலோ, அல்லது அரசியல் மற்றும் தனிபட்ட நடத்தைகளை கவனித்தோமானால் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான். அப்படியே ஏதோனும் நடவடிக்கை அல்லது அறிக்கையோ வந்தாலும், அது பொதுவாக அடுத்தவர் மேல் ஏவும் தனிப்பட்ட தாக்குதலாகத்தான் இருந்திருக்கிறது இன்றும் அப்படி தான் தொடர்ந்தும் கொண்டு இருக்கின்றது. இதை அம்மையாரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை கேட்டால் மறுக்காமல் ஆமாம் என்று தலையாட்டுவதை பொதுவாக காணமுடியும்.
பொய்யும் புனை சுருட்டுகளை அள்ளிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே. சென்றமுறை ஆட்சிக்கு வந்த உடனே பெட்டகத்தில் பொருளே இல்லை என்றும் அதனால் எந்த ஒரு திட்டத்தையும் திட்டமிடவோ அல்லது செயல்படுத்தவோ முடியாதது மட்டும் இல்லாமல், அரசு இயந்திரத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்ககூட பணம் இல்லை என்று சொன்னதோடு மட்டும் நிற்காமல். பணிவிடைபெறும் மக்களின் பணத்தையும் கொடுக்கமுடியாது என்று சொன்னவர்கள், பின்னாளில் வந்த எதிர்ப்புக்கு அஞ்சி தவணையாக கொடுப்பதாக செயற்படுத்தினார்கள்.
பணிவிடைபெறும் மனிதன் 58 ஆண்டுகால உழைப்பிற்கு பிறகு அவரது பணிக்காலம் முழுவதும் குருவியாக சேர்த்துவைத்த பொருளை அவரே எடுக்க முடியாது என்று சொன்னால் அந்த வயதான மனிதன் எங்கே போவான். அதுவும் இந்த நாள் முதல் அடுத்த முதல் தேதிகளில் இனிமேல் சம்பளம் என்று ஒன்று வராது என்று ஆன பிறகு இப்படி ஒரு இடியை அவரது தலையில் இறக்கினால் அந்த வயதான காலத்தில் அவரது மனதும் அவரது குடும்பத்தினரது மனதும் எப்படி இருக்கும். அடுத்த மாத உணவுக்கு என்ன செய்வோம் என்று வருந்திய மனங்கள் என்ன பாடு பட்டு இருக்கும்.
இவைகளுக்கு அம்மையார் சொன்ன ஒரே காரணம் பெட்டகத்தில் பொருள் இல்லை!!!!. எனக்கு தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த ஒரு காலத்திலும் நடக்காத ஒரு செயல் இது. எப்பேர் பட்ட நிலைவந்தாலும் பணிகொடை பணத்தில் கையை வைக்கூடாது. அப்படியே ஒருவர் எடுக்க நினைத்தாலும், தன்னுடைய பணத்திற்கு தானே வட்டி கொடுத்தான் எடுக்கவேண்டும் என்ற விதிகளையும் விதித்து, அந்த வட்டியையும் வாங்கி அவருகே கொடுத்துவந்த அமைப்பில், பணமே இல்லை என்று சொல்ல இவருக்கு என்ன தைரியம் இருந்திருக்கவேண்டும்.
இது போல் எத்தனையோ உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். அதைவிட சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அவர் முதல்வராக இருந்த 2 முறையும் அரசு இயங்காத அரசாகத்தான் இருந்தது. அப்படி இயங்கும் போதெல்லாம், அவரின் தனிபட்ட பழிவாங்கலுக்கும். அவரது உறவுகளும், ஒட்டு குழுவும் கொள்ளை அடிப்பதற்கு என்று தான் இயங்கியது. இல்லை என்று ஆதாரங்களோடு மறுக்க யாரால் முடியும். இப்படி செயல்படவே முடியாமலும் தெரியாமலும் அவதிபட்டதை பார்த்தமக்கள் அவரை சென்றமுறை பேசாமல் சென்று ஓய்வெடுங்கள் என்று வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அப்போது ஓடி ஒளிந்துகொண்டவர் தான், ஐதராபத்திலும், கொடையிலும், சிறுதாவூர் என்றும் இடம் மாறி மாறி ஓய்வெடுத்து வெறுத்து போனவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று அழையா விருந்தாளியாக பதவியேற்பு நிகழ்சிகளுக்கு போவது. போன கையோடு, நீங்கள் கூப்பிடாமல் நானே வந்தேனே அது போல் இல்லை என்றாலும் நான் கூப்பிடதாகவாது எங்கள் வீட்டுக்கு வந்து போங்கள் என்று சொல்லி மோடியின் தயவிலாவது தனக்கு விளம்பரம் கிடைக்கிறதா என்று தேடும் வேலை தான் இப்போது அம்மையாருக்கு. அப்படியும் விளம்பரம் கிடைக்கவில்லை என்றால். மோடி எங்களது வீட்டில் விருந்துக்காக அழைத்தபோது வந்தவர் என்னிடம் தவறாக நடக்கமுயற்சித்தார் என்றும் சொல்லுவார். அவர் எதிர்பார்த்த விளம்பரம் கிடைக்கவில்லை, தேர்தல் கூட்டணிகள் பாதகமாக அமைந்தால் அம்மையாரின் கண்ணிரையும் கம்பலையும் பார்க்கதானே போகிறோம். பாவம் மோடி, தலை உருளாமல் இருந்தால் சரிதான்.
இப்படி விளம்பரம் தேடவேண்டிய அவசியத்தில் இருக்கும் அவர்தான், ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு வந்தவர் பேராசிரியரை வம்புக்கு இழுத்திருக்கிறார். ஒரு மனிதன் ஆசானாக ஒரு நாள் பணியாற்றினாலும் சரி, 1, 2 வகுப்பு ஆசானாக இருந்தாலும் சரி. மாணவனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் வந்த பின்னும் கூட, எங்கேனும் ஆசானை பார்த்தால் அன்றைக்கு வகுப்பறையில் காட்டிய பணிவோடு ஐயா என்று கேட்க்கும் அதே பணிவோடு பேசுவது தான் வழமை. இது ஆசானுக்கு மனிதகுலம் வழங்கும் மரியாதை, அங்கிகாரம், பெருமை.
இதில் அம்மையாருக்கு என்ன உருத்தலோ தெரியவில்லை. முன்னாள், இன்னாள், உதவி பேராசிரியர் என்று என்ன என்னவெல்லாம் சொல்லி கேவலமாக பேசவேண்டுமோ அவை எல்லாம் பேசி சட்டசபையிலே குழப்பங்களை விளைவித்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியும் அதன் ஆசான்களும் தமிழுக்கும், தமிழர்களது உணர்வுகளுக்கும் என்ன என்ன செய்திருக்கிறார்கள் என்று மறுபடியும் ஒரு விளக்கம் சொல்லிதான் மக்களுக்கும் புரிய வைக்கவேண்டும் என்று இல்லை. சுருக்கமாக பச்சையப்பன் கல்லூரி படிக்கட்டு கூட பைந்தமிழ் பாடும் என்று சொல்லுவார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் காலம் தொட்டு அரசியலில் இருக்கும் அவர், இதுவரையில் ஆட்சியில் இருக்கும் காலம் வரையில் கல்வி அமைச்சராக இருந்து நிறைவாக பணியாற்றியவர். இந்த வயதிலும் ஓய்வு வேண்டும் என்று உடல் கெஞ்சும் காலத்திலும் அரசு பணிகளை ஏற்று பணியாற்றுவதை பார்த்தால், நின்றால் வலிக்குது, உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவிலை. மாடிப்படி ஏறமுடியவில்லை என்ற நிலைமையில் உள்ள்வர்களுக்கு கொஞ்சம் பொறாமை வருவது இயற்கைதான். அதற்காக இப்படியா ஒருவர் பேசுவது வகை தொகை இல்லாமல், வயது வித்தியாசம் கூட பார்க்காமல்.
2 முறை முதல்வராக இருந்தபோதும், முன்னாள் அரசு வைத்திருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது, வரவு செலவு திட்டங்களை ஈ அடித்தான் பிரதி எடுப்பது. இவைகளை பற்றி எல்லாம் எங்கே விவாதத்தில் சொல்லிவிடுவார்களோ என்று, ஆளுனரை ஆங்கிலத்தில் படிக்கவைத்து திசைதிருப்புவது என்று இருந்த அம்மையார் சொல்கிறார் இப்படி. இது எப்படி தெரியுமா இருக்கிறது, தெருவில் செல்லும் ஒருவரை கைகாட்டி அவருக்கு முற்றிலும் அறிமுகம் இல்லதவரிடம் அங்கே போகிறாரே அவர் கெட்டவர் என்று சொல்லுவார்களே அதை போல. இவரும் ஏன் என்று கேட்க்க மாட்டார், ஏன் என்றால் இவருக்கு அவரை தெரியாது, அதனால் அவசியம் இல்லை. ஆனால் பின்னாளில் வேறு எங்காவது பார்க்க நேர்ந்தால் அங்கே இவருக்கு தெரிந்தவரிடம் சொல்வார் அதே வசனங்களை இவருடைய நண்பர் சொன்னார் என்றும் அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்றும்.
பிறகு, ஈரை பேனாக்கி, பேனை பேயாக்கி அல்லவா செய்தி பரவும். அப்படி ஆகட்டும் என்று ஆதாரமே இல்லாமல், நடுவணரசுக்காக உரிமைகளை விட்டு கொடுக்கிறது என்றும். தமிழகம் வன்முறை பூமியாக மாறிவிட்டது என்றும். ஆட்சி நடத்தும் உரிமையை அரசு இழந்துவிட்டது என்றும், உடனே அரசை கலைக்கவேண்டும் என்று வயிற்று வலியில் இஞ்சி மறப்பா விற்பவனைபோல் கூவிவிட்டு சென்றுள்ளார். ஒரு வேளை மோடி தமிழகம் வந்து சென்றதை தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் தமிழகத்தில் நடைபெறுகின்றது என்று சொல்கிறாரோ என்னவோ.
வழி தெரியாமல் தடுமாறும் கப்பல் என்று தன்னையும் தன்னை சுற்றி திரியும் கூட்டத்தை தான் சுயவிமர்சணம் செய்துள்ளார் போலும் இலைமறை காய் போல். தன்னால் தான் எல்லாம் என்று சொல்லித்திரிந்த காலம் போய் இப்போது மோடியை காட்டிதான் விளம்பரம் பெறவேண்டும் என்ற நிலைக்கு அவர் வந்திருப்பதை பார்த்தல் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
36 comments:
அருமை, இந்த அம்மா ஒரு நாள் சட்டசபை வந்ததும் போது, அடித்த கூத்தும் போதும்.. இது வரலைனு யார் அழுதா?
//வழி தெரியாமல் தடுமாறும் கப்பல் என்று தன்னையும் தன்னை சுற்றி திரியும் கூட்டத்தை தான் சுயவிமர்சணம் செய்துள்ளார் போலும்//
அந்த கூட்டத்தின் அநாகரிக அடாவடி அரசியலுக்கு இந்த கோமாளித்தன பேச்சு ஒரு உற்சாக பானம்.வரும் காலங்களில் தனது இழப்பை ஈடு செய்ய இன்னொரு முறை திரொளபதி வேசம் கட்ட தயாராகி வருகிறார்.
ஏதோ அரசியல் பண்ணிட்டாங்களா..சட்டசபையில்...
சற்றுமுன்னில் கூடப் பார்த்தேன்...அதைப் பற்றிய விவரம்..
இல்லை..
ஆனால், நல்ல அலசல்...வாழ்த்துக்கள்..
வழி தெரியாமல் தடுமாறும் கப்பல்: செயலலிதா"
Nallah sonninga.
thinamum jaya vidum arikkaikalil irunthu therikierathu. avar kulambiyirukkirar endru.
//கூட்டத்திற்கு வந்தவர் பேராசிரியரை வம்புக்கு இழுத்திருக்கிறார்.?//
பனிமலர் அம்மா,
நல்லா கேள்வி கேட்டிருக்கீங்க.எனக்குக் கூட புரட்சி தலைவி பேராசிரியரைப் பற்றி இப்படி பேசியது வியப்பாக இருக்கிறது.
அண்ணதுரை அய்யாவை அறிஞர்,மஞ்சதுண்டுவை கலைஞர்,வன்முறை பேசிய தாடிக்காரனை பெரியார் என்று கூப்பாடு போடும் ஒரு கும்பல்,இந்த அன்பழகனை ஏதோ எம் ஐ டி ப்ரொஃபெஸர் ரேஞ்சுக்கு பேராசிரியர் என்று கொண்டாடுவது மட்டும்,எப்படி கேவலமாகும்?
பாலா
வாங்க பாலா செயராமன், 1 வது வகுப்பு பாடம் எடுத்தாலும் ஆசான் ஆசான் தான், ஆண்டார்டிக்கா மக்களுக்கு பாடம் எடுத்தாம் ஆசான் ஆசான் தான். இதெல்லாம் பள்ளி சென்று படித்தவர்களுக்கு தெரியும் புரியும். நீங்கள் எங்கே படித்தீர்கள் நண்பரே திண்ணையிலா....
//வது வகுப்பு பாடம் எடுத்தாலும் ஆசான் ஆசான் தான், ஆண்டார்டிக்கா மக்களுக்கு பாடம் எடுத்தாம் ஆசான் ஆசான் தான்.//
பனிமலர் அம்மா,
ஆ, நம்மா அன்பழகன் அய்யா ஒண்ணாம் வகுப்பு அன்டார்டிக்கா பசங்க்களுக்கு பாடம் எடுத்தாரா?என்னால நம்பவே முடியலயே?அப்பேற்பட்ட பேராசிரியரா அன்பழகன் அய்யா?அடேங்கப்பா!
அது சரி, பாசறை குஞ்சுகள் அன்டார்டிக்காவிலேயிருந்து வந்தேறியவங்களா?இது என்ன புது கதை?ஆப்ரிக்க சோமாலியாவிருந்து வந்தேறியதா சொல்றாங்களே?அது ரீலா?
பாலா
பால செயராமன், நீங்கள் ஏன் இப்படி சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறீர்கள். உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா. தேர்வில் என்ன கேள்வி கேட்டாலும் தனக்கு தெரிந்த பதிலை மட்டும் தான் எழுதுவார்கள் தேர்வுக்கு படிக்காதவர்கள் எழுதுவார்கள். நீங்களும் அவர்களை போல் தேர்வில் தெரியாத கேளிவிகளை கேட்டுவிட்ட மாணாக்கானை போல் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். அல்லது இரவில் ஏறியது இன்னமும் தெளியவில்லையா. தெளிந்த பிறகு படித்துவிட்டு எழுதுங்கள் நண்பரே.
விடுதலைப் புலிகளை விட்டால் அரசியல் செய்ய செயாவுக்கு வேறு வழியில்லை. தமிழ் நாட்டின் சாபக்கேடு ஜெயலலிதா.
கூழைக் கும்பிடுவின் பார்ப்பன வெறித்தனம் பரிதாபத்திற்குரியது!
அம்பிவாள் அறிவதற்காகச் சொல்கிறேன்.
அம்பி "அறிஞர்" என்று பட்டங் கொடுத்தது தமிழ் அறிந்த அனைவரும் மதிக்கும் கல்கி அவர்கள் தான்,நோக்கு ஏன் தெரியலையோ!
ஒரு முறை தமிழறிஞர்களை வைத்துச் சென்னையிலே பல தலைப்புகளிலே பேசக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார் கல்கி.பெரியவர்கள் யாரும் வரவில்லை.இளைஞர் அண்ணாதுரை மட்டுந்தான் வந்திருந்தார்.கோபத்திலும் ஏமாற்றத்திலும் துடித்த கல்கியையும்,ஆர்வத்துடன் வந்திருந்த
வர்களையும் பார்த்து விட்டு அண்ணாதுரை தங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால் நானே
அந்தத் தலைப்புகளிலும் பேசுகிறேன்
என்றாராம்.உடனே கல்கி உன்னால் முடியுமா என்றாராம்.
அண்ணா முயற்சி செய்கிறேன் என்றாராம்.அண்ணாவின் பேச்சைக் கேட்டு அதிசயித்துப் போன கல்கி
உணர்ச்சிப் பிழம்பாகி " நீ அண்ணாதுரை யல்ல.அறிஞர் அண்ணாதுரை" என்றாராம்.அம்பியைக்
கல்கி பற்றி கொஞ்சம் படிக்கச் சொல்ல வேண்டியது தான்.
லண்டனில் படித்த டாக்டர் மற்றும் பல
பெரிய பெண்மணிகள் பெண்கள் நடத்திய மாநாட்டிலே 1938 லே
கொடுத்த பட்டம்"பெரியார்".வன்முறைத் தாடிக் கிழவன் என்று அவரைச் சொல்லும்
இந்த சாந்த மூர்த்தி அம்பி அவ்ரால் எந்த தனிப்பட்ட மனிதருக்கோ,யாருடைய சொத்துக்கும்
இழப்போ வந்தது என்று சொல்ல முடியுமா?பிள்ளையாரை உடைத்த போதும் அவரவர் காசிலே பிள்ளையார்
சிலைகளை வாங்கி உடைக்க வேண்டும் என்று சொன்னவர்.அம்பி
அவர் வன்முறை நினைத்திருந்தால்
தமிழ்நாட்டிலே அக்கிரஹாரங்களே
இருந்திருக்காது,தெரியுமோன்னா?
சிவாஜி கணேசன் போன்ற பெரிய நடிகர்கள் ராதா அண்ணன் என்று
மரியாதையுடன் போற்றிய நடிகவேள்
எம்.ஆர்.ராதா அவர்கள் கொடுத்தது
கலைஞர்.
அம்பி,இவர்களில் யாரும் நடமாடுந் தெய்வம் ஜெகத்குரு சங்கராச்சாரிய
சுவாமிகள் போல் கொலைக் குற்றம்,அதுவும் அவரது பக்தராக இருந்தவரைப் பட்டப் பகலிலே கோவிலிலேயே தீர்த்திடச் சொல்லியவர்கள் இல்லை என்பதைப்
புரிந்து கொள்ளேண்டா!
மன்னிக்கவும் அம்மாவுக்கு நேற்று கொஞ்சம் அதிகம் ஆகி விட்டது!!! கோபம்.
வீ எம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் அந்த அம்மாவுக்கு வீட்டிலே உட்கார்ந்து இருந்தால் உடம்புக்கு ஆகாது என்று மருத்துவர் கூறி இருப்பார். எங்கே போவது என்று தெரிந்து இருக்காது. ஓருவேளை இங்கே வந்தாலாவது ஊடகத்தில் விளம்பரமும், தன்னை பார்த்து கேள்வியே கேட்க்கவே இல்லை என்றாலும் வலுக்கட்டாயமாகவாது யாரையாவது வைது விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்று வந்திருப்பார்.
//தேர்வில் என்ன கேள்வி கேட்டாலும் தனக்கு தெரிந்த பதிலை மட்டும் தான் எழுதுவார்கள் தேர்வுக்கு //
பனிமலர் அம்மா,
என்னம்மா இப்படி பின்னூட்டத்தை திசை திருப்பற மாறி எழுதறீங்க?நான் எங்கே பதில் சொல்லியிருக்கிறேன்?நான் கேள்விகளை அல்லாவா கேட்டு உங்களுக்கு டெஸ்ட் வைத்தேன்.உங்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் ஆசான்(அதான் 1 ஆம் கிளாஸ் பேராசிரியர் அய்யா)கிட்ட கேட்டு பதில் சொல்லிட்டுப் போங்களேன்.பின்னூட்டத்தை திரும்பவும் படிங்க. மொத்தம் ஆறு கேள்விகள் உள்ளன.
டெஸ்டில் பாஸாக வாழ்த்துக்கள்.
பாலா
வாங்க கோவை இரவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இதிகாச பெயர்களை எல்லாம் இவர்களுக்கு ஆக்கி ஏன் இதிகாசங்களை கொச்சை படுத்துவான் ஏன். இங்கே பாருங்கள், படித்து வாங்கி பெயர் பேராசிரியர், அதையே பால செயராமன் பாடாய் படுத்துகிறார். அரிதாரம்தரித்து ஆடிய முன்னால் நடிகையிடன் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் இரவி. விட்டுத்தள்ளுங்கள்.
வாங்க டிபிசிடி வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி, வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க யாழ் வணக்கம், வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வித்தியா வணக்கம், வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி. அந்தம்மா புலி என்று சொல்லுவதெல்லாம் வெறும் விளம்பரத்திற்காகத்தான். இந்த அம்மாவை அப்படியே விட்டு விடுங்கள் விரைவில் அரசியல் துறவு மேற்கொள்வார். இப்போதே அரசியல் அனாதையாத்தான் இருக்கிறார்.
வாங்க தமிழன் வணக்கம், வருக்கைக்கும் உங்களது நீண்ட விளக்கத்திற்கும் நன்றி. நாம் என்ன தான் சொன்னாலும் அந்த பொய்குஞ்சு கூட்டம் இப்படியே சம்பந்தமே இல்லாமல் ஏதாவது பிதற்றிக்கொண்டு தான் இருக்கும் பாருங்கள்.
வாழ்த்துகளுக்கு நன்றி பால செயராமன். தமிழ் செந்தங்கள் இட்டிருக்கும் பின்னூட்டங்களை படிக்கவும் அதில் உங்களது கேள்விகள் என்ன உங்களது தாத்தாவின் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. தேடுங்கள் கிடைக்கும். தெரியவில்லை என்றால் புரியாதது போல் மறுபடியும் பின்னூட்டம் இடவும்.
”பாழா”, பதில் தேடியா பின்னுட்டம் போடுறார்..
அவருக்கு ஒரு பிரச்சனை. அது அவருக்கு குறுக்கே ஓடுது. அதை கழட்டிட்டா எல்லாம் சரியாகிடும் என்று சொல்லி பல காலம் ஆயிற்று. அதை கழட்ட தேதி பார்த்து வரேன்னு சொல்லிட்டு ஓடி போயிடுவார்.
அதனால, நீங்க அவருக்கிட்டே கேட்க வேண்டியது, ” எப்போ..எங்கே..நூல் கழட்டும் வைபோவம்..என்று தான்...”
//அம்மையாருக்கு அப்படியும் விளம்பரம் கிடைக்கவில்லை என்றால். மோடி எங்களது வீட்டில் விருந்துக்காக அழைத்தபோது வந்தவர் என்னிடம் தவறாக நடக்கமுயற்சித்தார் என்றும் சொல்லுவார்.//
//மோடி தமிழகம் வந்து சென்றதை தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் தமிழகத்தில் நடைபெறுகின்றது என்று சொல்கிறாரோ என்னவோ//
நெத்தியடி.
பா செயராமனின் கேள்விகள் தற்குறித்தனமாக இருக்கின்றது. இவரின் நடிகை தலைவிக்கு என்ன அறிவுத்தகுதி இருக்கின்றது ஆட்சி பீடமேற என்று கேட்டு வையுங்கள்.
வடநாட்டுப்பனியாக்களின்/பார்ப்பனரின் ஆட்சியை தமிழன் தலைமேல் வைப்பதற்கு இந்த நடிகை முயற்சிப்பதை இந்த பாழ செய்யராமன் அறியவில்லையா?
ஈழ மண்ணில் இரத்தம் சிந்தி உயிருக்கும் போராடும் மக்களின் துயரத்தின் மேல் அரசியல் நடத்த முயலும் மனச்சாட்சியே அற்ற பெண்ணின் அடிவருடிகளிடம் இதை விட எதை எதிர்பார்க்க முடியும்.
தொடர்ந்தும் இப்படியான அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவாருங்கள். வாழ்த்துக்கள்
இந்த பாலா என்கிற லூசு, எல்லா இடத்திலேயும் வாந்தி எடுக்குது.. வயத்தெரிச்சல் பார்ட்டி..
லூசு தனமா ஒரு கேள்வி கேட்டுட்டு அதுல பெருமை வேற..
1 வது க்கு பாடம் எடுத்தாலும் . அன்டார்டிகாவில் பாடம் எடுத்தாலும், ஆசான் ஆசான் தான் என்று பனிமலர் தெளிவா சொன்ன பிறகும் தற்குறி தண்டசோறுக்கு அது புரியாம், இப்படி லூசுத்தணமா, குறுக்கு கயிரு தெனாவட்டுல 6 கேள்வி சம்பந்தமில்லாம கேட்டிருக்கு..
அதை விட்டு தள்ளுங்க.. அனைத்து வலைப்பதிவர்களும் ஒதுக்கி தள்ளவேண்டியவர் இந்த பாலா.
6 கேள்வி குறி போட்டுடா அது எல்லாம் கேள்வியா கேனைப்பயலே?
வணக்கம் டிபிசிடி,
சரியாக சொன்னீர்கள். முதலில் எனது கட்டுரையும் பதில்களும் தெளிவாக இல்லையோ என்று மறுபடியும் படித்து பார்த்தேன், பிறகு பால செயராமன் வம்புக்கு பேசுகிறார் என்று தெரிந்தது. கேள்வி கேட்டால் பதில் செல்ல வேண்டும். இல்லை என்றால் சும்மா இருந்துவிட்டு போகனும். ஆனால் பால செயராமன் முன்னே குறிப்பிட்டது போல் பசு மாடை பற்றி கட்டுரை எழுத சொன்னால், தென்னை மர கட்டுரையை எழுதி கடைசி வரியில் இதில் தான் எங்கள் வீட்டு பசு மாட்டை கட்டுவார்கள் என்று எழுதிய சுட்டி பையனை போல் விகடம் செய்கிறார். இதிலே அழுத்தமாக கேட்டால் என்னால் வெளியிட முடியாத வார்தைகளால் வசவு மழை பொழிகிறார்.........
வணக்கம் சுல்தான் வாங்க,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அனானி வணக்கம்,
தமிழும் தமிழர்களும் உருப்பட்டால் இந்த அம்மையாருக்கு ஏனோ உடம்பெல்லாம் தாங்கமுடியாத வலிவரும் போலும். பாருங்கள், இவரது நடத்தை பேச்சால் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று. இன்றைக்கு தமிழகம் தொழில் துறையில் ஆந்திரம், கர்னாடகத்துக்கு இனையாக முன்னேறம் கண்டு கொண்டு இருக்கிறது. அதிலே இந்த அம்மையாருக்கும் அதற்காக வரும் வலி வந்துவிட்டது போலும். அதனால் தான் உச்ச நீதிமன்றம் வரையில் சென்று மக்கள் உருப்படாமல் நித்திய பிச்சைகாரர்களாகவே இருக்கவேண்டும் என்று வழக்கு போட்டு, அதிலே கள்ளத்தனமாக பெற்ற வெற்றியை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று வாய் கூசாமல் கூறுகிறார். எந்த மக்களின் வெற்றி அது, தமிழர்களுக்கு எதிராக வந்திருக்கும் தீர்ப்பு எந்த மக்களின் வெற்றியாக இருக்கமுடியும். அம்மையார் தான் சொல்ல வேண்டும் எந்த மக்களின் வெற்றி என்று, சொல்வாரா............
தான் வாழும் தமிழகத்தையோ அல்லது, அவருக்கு ஓட்டளித்த அப்பாவி மக்களை பற்றியோ கவலையோ இல்லாத அம்மையார், எப்படி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நல்லது நினைபார். சிங்களம் கொஞ்சம் பொருளும் விளம்பரமும் தரும் என்று சொன்னால் அதற்காக தமிழகத்து மக்களை எல்லாம் மதத்தின் பெயரால் கொலை செய்ய திட்டமிட்டு நடத்தியும் காண்பார் இந்த சுடுகாட்ட் உனாயகி. ஒரே நாளில் 100 ஆயிரம்பேரை விட்டுக்கு அனுப்பியவர் ஆச்சே இந்த அம்மையார்.........கேளுங்கள் உடனே என்னை பெண் என்றும் பாராமல் என்று ஆங்கிலத்தில் கூட அலங்காரமாக பேசிகாட்டுவார்......
வாங்க இராசேந்திரன் வணக்கம், உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி. நண்பர் பால செயராமனை அனேகமாக யாரும் பெரிதாக எசுத்துக்கொள்ளுவது இல்லை தான். ஆனால் அவர் போகும் போது விதைத்து செல்லும் பெய்களுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால். அவர் சொன்னது உண்மை என்றாகிவிடும் அதனால் தான் மறுப்புகளை எழுதுகிறேன். மற்றபடி அவருடம் விவாதிக்க ஒன்றும் இல்லைதான் நீங்கள் குறிப்பிடுவதை போல். இவர் சமயத்தில் என்னையே தீவிரவாதி என்று விளிப்பதும் உண்டு, அதைவைத்து அப்படி சொல்கிறீரகள் என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் ஒரு மாத்திற்கு.
வாங்க இராசேந்திரன் வணக்கம், உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி. நண்பர் பால செயராமனை அனேகமாக யாரும் பெரிதாக எசுத்துக்கொள்ளுவது இல்லை தான். ஆனால் அவர் போகும் போது விதைத்து செல்லும் பெய்களுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால். அவர் சொன்னது உண்மை என்றாகிவிடும் அதனால் தான் மறுப்புகளை எழுதுகிறேன். மற்றபடி அவருடம் விவாதிக்க ஒன்றும் இல்லைதான் நீங்கள் குறிப்பிடுவதை போல். இவர் சமயத்தில் என்னையே தீவிரவாதி என்று விளிப்பதும் உண்டு, அதைவைத்து அப்படி சொல்கிறீரகள் என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் ஒரு மாத்திற்கு.
ஆகா என்ன அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் இன்ன்று அம்மையார், 50 வருடங்களுக்கு முன்பு இவர் பள்ளியில் பயின்று கொண்டு இருந்தாராம், ஏன் இன்னமும் 10 வருடங்களுக்கு முன்னால் பேசக்கூட தெரியாமல் பப்பு புப்பு கோக்கி கீக்கி என்று தான் பேசிக்கொண்டு இருந்தேன் என்று சொல்லவேண்டியது தானே அம்மையாரே அதில் கூட வெட்க்கப்பட என்ன இருக்கிறது. பேராசிரியரை இப்படி நீங்கள் பேசியதில் அவருக்கு எந்த கேவலமும் இல்லை, அத்தனையும் உங்களுக்கு தான். இனியாவது கூலிக்கு பாசம் காட்டும் கூட்டம் சொல்லுவதை எல்லாம் அறிக்கையாகவும் வசனமாகவும் பேசிக்காட்டுவதை நிறுத்துங்கள் முன்னால் மழலையே. முகத்தில் இருக்கும் கரியை துடைக்கவே இன்னமும் 7 பிறப்பு தேவைபடும் உங்களுக்கு இதிலே இப்படி எல்லாம் அறிக்கைவிட்டு ஏன் கரிகட்டையாக மாற்றம் பெற விழைகிறீர்கள். விளம்பர அடிமைத்தனம் உங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பாருங்கள். பொன்முடியை பார்த்து கேளுங்கள் உங்களுக்கு என்ன முடியெல்லாம் பொன்னாலா இருக்கிறது என்று. அங்கே அவரும் பேராசிரியர் தான், சும்மா இல்லை 2 ஆராய்ச்சிகளை முடித்து வாங்கிய பட்டம் அது. பணம் கொடுத்து பெறும் தங்க தாரகை விருதுகள் இல்லை அவைகள்.
//தமிழ் செந்தங்கள் இட்டிருக்கும் பின்னூட்டங்களை படிக்கவும்//
பனிமலர் அம்மா,
யாருங்க இந்த தமிழ் செந்தங்கள் என்னும் மூஞ்சிகள்?டிபிசிடி 0,1,2 மற்றும் திருவள்ளுர் ராஜேந்திரன் போன்ற மாமேதைகளா?அவங்களும் பேராசிரியர்களா?இருக்கும் இருக்கும்.
பாலா
எழுத்து பிழையை திருத்தி படிக்கக்கூட தெரியாதா பால செயராமன், உங்களை செயராமன் என்று விளிப்பதை கூட கண்டுக்கொள்ளாத நீங்கள், தமிழ் சொந்தங்களை சாடுவதில் ஆச்சரியம் இல்லை தான். தமிழ் பேசும் சொந்தங்கள் யாவரும் தமிழ்சொந்தங்களே உங்களையும் சேர்த்து தான் நண்பரே.....
//எழுத்து பிழையை திருத்தி படிக்கக்கூட தெரியாதா பால செயராமன், உங்களை செயராமன் என்று விளிப்பதை கூட கண்டுக்கொள்ளாத நீங்கள், தமிழ் சொந்தங்களை //
பனிமலர் அம்மா,
எழுத்துப் பிழை என்று தெரிந்தது ;ஆனால், என்ன பிழை என்று கொஞ்சம் குழம்பியது என்னமோ உண்மை.தமிழ் நெஞ்சங்களை சொல்றீங்களா அல்லது தமிழ் சொந்தங்களை சொல்றீங்களான்னு புரியாம கேட்கப் பட்ட கேள்வி அது.ஆனா, நீங்க சொன்னபடி எல்லா கேள்விகளூக்கும்,தாத்தா கேள்விகள் உட்பட,தமிழ் நெஞ்சங்கள்/சொந்தங்கள் பதில் சொல்லியுள்ளதால், எல்லா தமிழ் சொந்தங்களும் பேராசிரியர் தான் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு;புரட்சி தலைவி மட்டும் பேராசிரியை இல்லை;ஏன்னாக்க அவங்க, முதலில் தமிழ் சொந்தமோ,நெஞ்சமோ அல்ல;மேலும் ஒண்ணாம் கிளாஸ் அன்டார்டிக்கா கும்பலுக்கு கூட பாடம் எடுக்க அவங்களால் முடியாது.கரெக்டா, பேராசிரியை பனிமலர் அம்மா?
பாலா
பி கு:
ஆனால், இதுக்காக பொன்முடி அய்யாவை "தங்கத் தாரகை" என்று நீங்க சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.அது ரொம்பவே ஓவர்.
//உங்களை செயராமன் என்று விளிப்பதை கூட கண்டுக்கொள்ளாத நீங்கள்//
பனிமலர் அம்மா,
கண்டுகொண்டேன் அம்மா கண்டுகொண்டேன்.ஏதோ, கடுமையான வசவு சொல் சொல்லி நீங்கள் திட்ட நினைத்து அவ்வாறு சொல்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன்.ராமன் என்று சொன்னாலே அலர்ஜி வந்து அலறுவாங்க சில தமிழ் சொந்தங்கள்;என்ன செய்வது?அதுக்காகத் தானே, ராமய்யா கூட தன் பெயரை, சுருக்கமா, பேராசிரியர் அன்பழகன் என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
பாலா
பால செயராமன் உங்களுக்கு உண்மையில் என்ன தான் ஆனது ஏன் இப்படி கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறீர். அரைகுறை தமிழ் தெரிந்தவர்கள் கூட விளக்கம் சொன்னால் புரிந்து கொள்வார்கள், தமிழில் எழுத தெரிந்த உங்களுக்கு விளங்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. நீங்களும் செயலலிதா அம்மையார் போல் ஒரு விளம்பர அடிமையோ. ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் நான் சொல்லுவது தான் சரி என்று மழலை அடம் பிடிப்பது போல் அடம்பிடிக்கிறீர். பேசாமல் வேறு வேலை இருந்தால் பார்க்கவும். இருந்தாலும் ஒரு கருத்து வேறுபாட்டுக்காக இவ்வளவு காழ்ப்பு கூடாது நண்பரே. இராமையா அன்பழகனாக மாற்றம் பெற்றது காதுக்கு கேட்க்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா, பாரதி சொல்வானே இன்ப தேன்வந்து பாயுது காதினிலே என்று அப்படி. இனிமேல் உங்களிடம் இருந்து வரும் பொருளில்லா பின்னுட்டங்களை இட மாட்டேன். உங்களது வரவுக்கு நன்றி.
முன்பு குங்குமம் video பத்திரிகை வெளியிட்டு வந்தது அதேபோல ஏக்நாத் நிறுவனமும் வெளியிட்டு வந்தது, அந்த வீடியோவில் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சவ ஊர்வலத்தில் அவரின் சடலம் கிடத்தப்பட்டிருந்த ஊர்தியில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயற்சிப்பார். அவரை ஏற விடாமல் ஒருவர் ( திருநாவுக்கரசா தெரியவில்லை) உதைத்து வெளியே தள்ள முயற்சிப்பார். அப்போதெ சரியாக உதைத்திருந்தால் இப்போது சட்ட சபையில் உதைத்திருக்க மாட்டார்.
வாங்க கூத்த நல்லூரான், வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment