Tuesday, November 6, 2007

பெரியாரின் கனவு நினைவானது

இது தான் தந்தை பெரியாரின் கனவு, இராமயணத்தையும் கீதையும் கொளுத்தும் காலம் வரவேண்டும் என்று தனது வாழ் நாளின் இறுதி வரை போராடினார். இன்றைக்கு அவருக்கு சாதகமான முறையில் இவைகள் கொளுத்தப்படவில்லை என்றாலும், இது ஒரு துவக்கம். இராம் இராம் என்று சொல்லி கொண்டிருந்தவர்கள் எண்ணத்தில் இதன் மூலம் பெரியாரின் பெயரை பதித்தவர்களுக்கு நன்றி. இனியாவது மதத்தின் பெயரால் வடக்கில் நடக்கும் கொடுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்போமாக.

படம்: நன்றி தினமலர்

5 comments:

')) said...

தினமலர் படத்தைப் போட்டே பெரியார் கருத்தைச் சொல்லி விட்டீர்கள்.இதுவேதான் நட்ந்திருக்கிறது.உண்மை ராமாயணம் என்று பெரியார் வால்மீஹியில் சொன்னதைத்தான் முழுவதும் எடுத்துக் காட்டுடன் தான் வெளியிட்டுள்ளார்.இது முதலிலேயே உச்ச நீதி மன்றம் சென்று தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளிக்கப் பட்டுவிட்டது!

அட ராமா!உன்னைப் பற்றி உன் பக்தன் சொன்னதை உன் பக்தர்களாலேயே பொறுத்துக் கொள்ள முடிய வில்லையே!அப்புறம் ஏன் எங்கள் சேதுக் கால்வாய் திட்டத்தில் உன்னைக் கொண்டு வந்து அவமான்ப் படுத்துகிறார்கள்?

')) said...

வாங்க தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, எப்படியே அடி எடுத்து கொடுத்தவர்களுகு தான் அத்தனை பாராட்டுகளும்.

')) said...

வாங்க அனானி ஐயா, தினமலர் மேல உள்ள கோபத்தை என்னிடம் காட்டுகிறீர்கள் போலும். கருத்தாடலில் காழ்ப்பு ஏனோ....தமிழகத்திலும் இன்னமும் சொல்லப்போனால் தென்னகத்திலே மதக்கலவரம் பெரிதும் வெடிக்காமல் இருப்பதற்கு காரணம் அந்த பெரியவரின் அயராத சேவையை தவிற வேறு என்னவாக இருக்க முடியும். வடக்கும் இப்படி அறிவு பெறவேண்டும் சிறுபிள்ளை தனமாக இருந்தது போதும், விடலை செய்கைவிடுத்து வளரவும். கருத்தாடலில் சந்திப்போம்.

')) said...

"போர்டுகளில் இருக்கும் இந்தியை அழிக்கிறீர்களே; ரூபாய் நோட்டிலும் இந்தி இருக்கிறதே, அதை அழிப்பீர்களா?" என்று உயர்சாதி ஆதிக்க சக்திகள் திராவிட இந்தி ஒழிப்புப் போராட்டத்தைப் பார்த்துக் கிண்டல் அடித்தன (புத்திசாலித் தனமாகக் கேள்வி கேட்பதாக எண்ணிக்கொண்டு).

அதற்கு தரப்பட்ட பதில்: "குழந்தையின் கையில் பூச்சி உட்கார்ந்திருந்தால் அதை அப்படியே குழந்தையோடு சேர்த்து அடிப்பதில்லை; பூச்சியைக் கீழே தட்டி விட்டுப் பிறகு அதை நசுக்குவோம்"

இது திராவிடத் தலைமையின் சிந்தனைத் தெளிவுக்கு அடையாளம்.

பெரியார் எழுதிய புத்தகத்தை எரிக்கும் மடையர்களுக்கு அந்தப் புத்தகத்தில் ராமாயணக் கதையை எரிக்கிறோம் என்கிற சிந்தை கூட இல்லை பாருங்கள்.

அது இருந்தால் ஏன் இன்னும் ராமாயணத்தைத் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்கிறீர்களா?

')) said...

வாங்க இரத்தனேசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இது பெரியாரை எதிர்கவோ எரிக்கவோ அல்ல. குசராத்து பற்றி தெகல்கா தெரிவித்தவைகளை நீர்த்துத்து போக வைக்கும் ஒரு தந்திரம். எப்படியோ அவரின் கனவு நினைவாகி இருக்கிறது.......