Sunday, November 4, 2007

வீரவணக்கம் தமிழ்ச்செல்வனுக்கும் மற்ற அனைத்து வீரர்களுக்கும்.




வீரர்கள் செயலால் அடிக்கும் அடிக்கு உனது சொல்லால் அங்கிகாராம் வாங்கித் தந்தவனே, ஈழத்திற்கும் ஐ நாவிக்கும் நடையாய் நடந்தவனே. எத்தனை சோகமான செய்திகளாக இருந்தாலும் சரி, எத்தனை வெருப்பான கேள்விகளாக இருந்தாலும் சரி மலர்ந்த முகம் மாறாமல் சொல்லுரைப்பவனே. ஈழம் மலர்ந்து அதன் வெளியுரவு அமைச்சராக ஐ நா வில் உனது குரல் ஒலிக்கும் என்று மனதில் கொண்டிருந்தோம் அனைவரும், அதற்குள் வீரமரணம் எய்தினாய். உனது வீரமரணத்திற்கும் உடன் இறந்த அனைத்து வீரர்களுக்கும் எங்க்களது வீரவணக்கம். மற்ற வீரர்களது பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு தான் செய்தி வெளியிட விரும்புகிறேன் ஆனால் எங்களுக்கு தான் எத்தனை பெயரை தெரியும், அப்படி தெரிந்த பெயர்களை எல்லாம் பட்டியல் இட்டால் வலைகொள்ளாத பட்டியலாக அல்லவா அது இருக்கும். ஆகவே அவர்களது அரசியல் முகமாக எங்களுக்கு தெரிந்த உனது பெயரை குறிபிட்டு அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். சென்று வா வீரனே......

2 comments:

')) said...

தமிழ்ச்செல்வனின் மரணம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு பேரிழப்பு. அவரின் மரணத்திற்கு எமது வீர வணக்கங்கள். போராளிகள் மண்ணில் வீழ்வது மரமாக அல்ல விதையாக என்பதை காலம் அவர்களக்கு உணர்த்தும்.

இதுபோன்ற படுகொலைகளால் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யலாம் என்பது வெறும் கனவு என்பதை காலம் உணர்த்தும்.

')) said...

வாங்க ஜமாலன், வருகைக்கும் வணக்கங்களுக்கும் நன்றி. புலிகளுக்கு இது ஒரு பேரிழப்பு தான், இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் அவர்கள் விதைக்கத்தான் பட்டிருக்கிறார்கள்.