ஆயுத போராட்டம் நடக்கும் வரை இலங்கை இனவாத்திற்கு தீர்வுகள் பிறக்கப்போவதில்லை. அதனால் இலங்கையில் நடக்கும் உள் நாட்டு போரில் தலையிடுவதோ அல்லது இரு தரப்பில் எவருக்கேனும் ஆதரவாக வாதிடக்கூட முடியாது என்று ஒரு பிரிவு வாதிடுவதும், பதிவிடுவதையும் பார்த்து வருகிறோம். அவர்களது கொள்கைகளையும், அதன் அடிப்படைகளையும் ஆராயும் முகமாக இந்த பதிவு அமையும்.
இவர்களது முடிவுகளை ஆராய்வதற்கு முன், இலங்கை போராட்டம் எதற்காக நடக்கிறது. அவர்களது கோரிக்கைகள் தான் என்ன என்று பார்ப்போம்.
1) இலங்கையில் சிங்களம் மட்டுமே மொழி.
2) சிங்களர்களுக்கு மட்டும் தான் இலங்கை.
3) பௌத்தம் மட்டுமே மதம்.
மொத்தத்தில் ஒரு மொழி, ஒரு மக்கள், ஒரு மதம். இது வெறும் வாய் வார்த்தையாக சொன்னதல்ல மாறாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டமாக வடிவமைத்து அறிவித்தது சுதந்திர இலங்கை. அறிவித்த நாள் முதல் தொடங்கிய போராட்டம் இன்றளவும் உக்கிரம் குறையாமல் ஒரு நெடிய பாதையும் கடந்து நடந்து கொண்டிருக்கிறது.
கொலைக்கு கொலை தீர்வாகாது, கண்ணுக்கு கண் என்று போனால் பின்னாளில் உலகமே இருண்டு போகும் என்று உரைத்த காந்திய வழியில் போராடினால் என்ன என்று கேட்க்கும் நண்பர்கள் காந்திக்கு பிறகு நெல்சன் மண்டேலா தலைமையில் அறப்போராட்ட வழியில் தென் ஆப்ரிக்கா சுதந்திரம் பெறவில்லையா என்றும் கூட வாதாடுகிறார்கள்.
நண்பர்களே அமெரிக்கா, பிரான்சு, சக்காட்லாந்து என்று நீளும் பட்டியலில் கடைசியாக ஆயுத போராட்டம் மூலம் சுதந்திரம் பெற்ற தேசமான இசுரேலுடன் வந்துநிற்கும். இன்றைக்கு சுதந்திரம் பெற்ற பிறகு அந்த தேசங்கள் எல்லாம் என்ன வன்முறையால் ஆட்கொண்டு சிதைந்து அழிந்து சின்னா பின்னமாகி மனித அவலங்களை கொண்டா திகழ்கிறது?
இல்லையே, அமெரிக்கா உலகின் மிகப்பொரிய மக்களாட்சி நாடு. இன்றைக்கு உலக வன்முறையை அடக்கு நாடாகவும் அது திகழ்கிறது. பிரான்சோ இந்தியாவுக்கும் இன்னபிற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இராணுவ உதவி முதல் அறிவியல் சார்ந்த உதவிகளை வழங்கும் நாடாக திகழ்கிறது. இவ்வளவு ஏன், சுதந்திரதிற்கு பிறகு நிம்மதியாகவே உரங்காத நாடான இசுரேலும் கூட இராணுவத்திலும் சரி தொழில் நடத்துவதிலும் சரி முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது.
பிறகு எதை வைத்து ஆயுதப்போராட்டம் கூடாது என்று இவர்கள் மறுக்கிறார்கள். காந்தி தேசத்தில் பிறந்து விட்ட ஒரே காரணாத்தாலா. அல்லது ஆயுத போராட்டம் தீர்வை தராது என்று எப்போதும்மே நிறூபிக்கப்பட்டு விட்டதா.
காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டது 1917 ஆம் ஆண்டில். அதற்கு பிறகு படி படியாக முன்னேறி 1947 ஆம் ஆண்டு அதாவது 30 ஆண்டு கால போராட்டதிற்கு பிறகு சுதந்திரம் பெற முடிந்தது. ஒரு 30 ஆண்டு காலம் அந்த ஒரு தனி மனிதனால் போராட்டங்கள் அறிவுக்கப்பட்டும், நிகழ்த்தப்பட்டும், அதுவும் அறவழியில் மட்டுமே என்று போராடி சுதந்திரம் வாங்கவில்லை என்று நீங்கள் கேட்ப்பது காதில் விழுகிறது.
இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு, தீவிரமாக எழுதவும் போராட்டம் நடத்தவும் இருந்த காந்தியை பிரித்தானிய அரசு கொல்லாமல் அத்தணை ஆண்டுகளும் உயிருடன் விட்டு வைத்திருந்தது. அது மட்டும் அல்லாது போராட்டம் நடத்தும் தொண்டர்களை அடக்கு முறை கொண்டு தாக்கிய பிரித்தானியரின் படையணிகள் அருகே அவர்களுக்கு உதவியாக வந்து இருந்த அவர்களது மனைவியர்களை ஒன்றுமே செய்யவில்லையே.
காந்தியின் மனைவி மரணபடுக்கையில் இப்பவோ அப்பவோ என்று படுத்து இருக்கும் போது, காந்தி நான் வழக்கமாக நடை பயிற்சி கொள்ளும் நேரம் இது, இதோ வந்துவிடுகிறேன் என்று புறப்படும் வேளையில் அவரது கரங்களை பிடித்தபடியே கட்தூரிபாயின் உயிர் போகிறது. எத்தணையோ முறை காந்தியும் இன்ன பிற அரசியல் போராட்டகரர்கள் எல்லாம் சிறை பிடிக்க படுகிறார்கள் பிறகு விடு படுகிறார்கள். வீடு திரும்பும் போது அவர்களது வீடும் உறவுகளும் அவர்களை வரவேற்கிறது.
ஆனால் இலங்கை போராட்டம் யாரை எதிர்த்து நடக்கிறது, காந்தி போராடிய அன்னிய ஆட்சியை எதிர்த்தா நடக்கிறது. இல்லையே சுதந்திர இலங்கை என்று அறிவித்த பிறகு, இருக்கும் கிருட்துவ மக்களை அழித்தொழித்த பின்பு, பின்னாளில் கிருட்துவனாக மாறகூடிய சாத்தியம் உள்ள தமிழர்களை குறிவைத்து தாக்கி அழிக்க துவங்குகிறது. அதன் முதல் நடவடிக்கையாக இந்த ஒரு தேச சட்டம்.
அன்றைக்கு அறவழியில் தான் போராடினார்கள் இவர்களும். என்றைக்கு எல்லாம் போராட்டம் நடத்துகிறார்களோ அன்றை எல்லாம் கலவரம் வரும். அல்லது போராட்டம் முடித்து இவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு கலவரம் அவர்களது வீட்டு பகுதிகளில் வெடிக்கும். அஞ்சா நெஞ்சர்களாக காந்தியின் அறவழி போராளிகள் செய்ததைப்போல் இவர்களும் சிறைகளை நிறப்பினார்கள்.
நல்லுடலுடன் சிறைக்கு சென்றவர்கள் அங்கம் இழந்தவர்களாக வெளியில் வந்தார்கள். சிறைக்கு சென்ற காந்தியோ அல்லது அவர் வழி சென்ற அவரது அற போராளிகள் அங்கம் குறைவாக வீடு திரும்பவில்லையே. போராட்டதில் தலையில் அடிபட்டு இறந்த கொஞ்ச மக்களை தவிற, மற்ற அனைவரும் சுதந்திரம் மலருவதை மூவர்ண்ண கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.
அப்படி நலிந்த உடலுடன் வீட்டிற்கு திரும்பியவர்களுக்கு வீடு இல்லை. வெறும் குட்டி சுவரும், அது விட்டு சென்ற சோகக்கதைகளும் மட்டுமே வெறுமையை கொண்டு அவர்களை வரவேற்றது.
அது மட்டுமா, அவர்களது செந்த பந்தங்கள் இறந்த இறப்பை கேட்டால் எவனாக இருந்தாலும் கோபம் வரும். அப்படி ஒரு இழிச்செயலை எந்த வித கூச்சமும் இன்றி சிங்களம் இன்றைக்கும் செய்துவருகிறது.
இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்கள் கட்டுக்கு அடங்காமல் போகும் போதெல்லாம் காந்தி உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று மக்களை மிரட்டி பணிய வைத்தார். ஆனால் திலீபனின் உயிர் பிரியும் வரை பார்த்துக்கொண்டு இருந்த சிங்களமோ, அவரது மறைவிற்கு பிறகு தனது கோர பற்கள் தெரிய சிரித்து காட்டியது.
பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்ங்கள் ஒவ்வோன்றிலும் தனது கோரிக்கைகளை காந்தியால் வென்று வர முடிந்தது. பஞ்சு வாங்காமல் விவசாயிகளை அலையவிட்ட பிரித்தானிய அரசாங்கம் பிறகு விவசாயிகளிடம் கருணையோடு நடந்து கொள்கிறோம் என்று எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து அந்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது. இப்படி படி படியா போய் கடைசியில் 30 ஆண்டுகளில் அவர் கேட்ட சுதந்திரதையும் கொடுத்துவிட்டு சென்றது.
இன்றைக்கும் இலங்கையில் அறவழியில் போராடும் போராட்டகாரர்கள் இருக்கிறார்கள். எப்படி, அதே அரசாங்கம் நடத்தும் தேர்தல்களில் பங்கு பெற்று அரசாங்கத்தில் இடம் பெற்றும். மற்ற அமைதி நடவடிக்கைகளில் இலங்கையின் சார்பாக தமிழ் மக்களின் நிலைமைகளை அனைதுலக மக்களுக்கு எடுத்துரைக்கவும், அரசியல் முன்னேறங்களையும் பெற்று தரும் பொருட்டு செயல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் மேலே சொன்ன கோரிக்கைகளில் ஒன்றாவது அவர்களால் வெற்றி கொள்ள முடிந்ததா. அட வெற்றி எல்லாம் பெரிய வார்த்தைகள், அது பற்றி பரீசீலிகவாது பட்டதா என்றால் இல்லை. எப்போது அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் ஐ நாவின் வழிகாட்டுதல் பின் பற்ற படுகிறது என்று செல்ல மட்டுமே கூட்டம் நடந்ததாக தான் இருக்கிறதே தவிற முடிவிகளை நோக்கி என்றைகாவது பேசவேனும் முற்பட்டதுண்டா அரசு. அல்லது அரசை பேசவைக்க இந்த அறவழி போராட்டகாரர்கள் என்ன தான் செய்து இருகிறார்கள்.
பொதுவாக சொன்னால் இந்த அறவழி போராட்டகாரகளை விட தமிழர்களது சுதந்திரம் பற்றி இரனில் அதிகமாக பேசியிருக்க கூடும். அவர் வெறும் அரசியலுக்காகவாது அதை செய்தார். ஆனால் போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆயிரம் ஆயிரம் இதயங்களில் நம்பிகையை தூவி தனது அதிகார பசிக்கு தீனி போடும் இவர்களை நம்பி எப்படி மீதம் இருக்கின்ற மக்கள் அறவழியில் போராட வருவார்கள்.
கிட்டத்தட்ட ஒரு 40 ஆண்டுகாலம் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் ஏதாவது ஒரு தீர்வையாவது சிங்களம் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. போராட்டத்தை அடக்கு முறை கொண்டு அழிக்க மட்டுமே அரசு முயல்கிறது. சிங்களம் சொல்லும் தீர்வு எல்லாம், தலை இருந்தால் தானே தலைவலி. தலையே இல்லை என்றால் தலைவலி எப்படி வரும் என்று. வாதத்திற்கு கூட ஒத்து வராத ஒரு முடிவை எட்ட சிங்களம் நினைக்கவும் செயல்படுத்தவும் போது மக்கள் எங்கே ஐயா அறவழியில் போராடுவது.
30 ஆண்டு காலம் அறவழியில் போராடிய காந்தியை பிரிதானிய அரசாங்கம் கொல்ல நினைக்க கூட இல்லை. ஆனால் கையால் ஆகாத இனவாதம் அவரது உயிரை 3 தோட்டாக்கள் கொண்டு பிரித்ததை அனைவரும் அறிவோம். பிரித்தானியர்கள் நினைத்து இருந்தால் இதை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி காந்தி என்று ஒருவர் இருந்தார் என்றே இல்லாமல் செய்திருக்க முடியுமே. ஆனால் பிரித்தானியர்கள் சட்டத்திற்கு கட்டு பட்டு, அதை மீறி எதுவும் செய்யவில்லை. ஆனால் சிங்களமோ, அவர்களது சட்டம் என்ன ஐ நாவின் சட்டத்தை கூட மலிவாக மீறுகிறது. அரசாங்கம் என்ற பெயரில் ஒரு வன்முறை கும்பல் மன நோயாளியாக தமிழர்களை கொன்று குவிக்கின்றது. நீங்கள் அந்த மன நோயாளியிடம் கழுத்தை காட்டுங்கள் என்று சொல்கிறீர்கள், ஏன் அது உங்களது கழுத்து இல்லை அதனாலா.................................
கண்விழித்து கொள்ளுங்கள் நண்பர்களே, கனவு காண்பதை விடுத்து கள நிலைமைகளை நோக்குங்கள் உண்மை விளங்கும்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago