Wednesday, July 4, 2018

இளிச்சவாய் இந்தியன் இருக்கும் வரை இதுவும் சொல்வார் இன்னமும் சொல்வார் நிதின் கட்காரி

சாலைகள் வேண்டும் என்றால் சுங்கம் கட்டணுமாம், பிறகு எதுக்கையா வரி கட்டூரீங்க வைர மோடிக்கும் கிரிகெட்டு மோடிக்கும் கொடுக்கிறதுக்கா.

சுங்க சாலைகளை அமைத்துள்ள அமெரிக்க நாட்டில் சுங்கம் செலுத்தி செல்ல ஒரு சாலையும் அதே தரத்தில் சுங்கம் இல்லாமல் செல்ல சாலையும் உண்டு.

அதுவும் இங்கே இருப்பது போல் ஒவ்வொரு சுங்க சாவடியிலும் 20 முதல் 30 நிமிடம் வரை நிற்க தேவை இல்லை. சுங்கத்தை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் தொழில் நுட்பமும் அவர்களிடம் உண்டு.

சென்னை செல்லும் நேரத்தை பாதியாக குறைக்கத்தான் சுங்கவழி சாலைகள் என்று சொல்லிவிட்டு சுங்க சாவடிகளில் 2 மணி நேரம் நிற்க வைத்து அதே தாமதமான நேரத்தில் செல்ல ஆண்டுக்கு நாங்கள் எதற்கு 15,000 சுங்கம் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டும். இன்னும் நிறை மோடிகள் பணத்தை சுறுட்டிக்கொண்டு ஓட வசதியாக இருக்கும் என்றா.....

 நீதிமன்றத்தில் நாம் செலுத்திய வரியில் அமைத்த சுங்கம் இல்லா சாலைகள் எங்கே என்று கேட்டு வழக்கு தொடுக்க வேண்டும். அப்படி அரசு பதில் சொல்லாத பட்சத்தில் வீட்டில் ஒருவருக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் என்று கணக்கிட்டு அரசு வழங்கும்படி உத்தரவிட மக்கள் கேட்க வேண்டும்.

மக்களுக்கு அந்த சுங்கம் இல்லா சாலைகளை அமைக்கும் வரை சுங்க சாலைகளை பொது மக்களுக்கு திறந்துவிடவும் ஆனையிட நீதிமன்றத்தில் கேட்க வேண்டும்.

0 comments: