Thursday, May 14, 2015

நீதிமன்றம் என்றால் மக்கள் என்ன நினைகிறார்கள் - பாவம் புரியாதவர்கள்

படங்களில், கதைகளில் காப்பியங்களில், வரலாறு போன்றவைகளில் வருவது போல் தவறு நடந்ததா இல்லையா என்று கண்டுபிடித்தே தீர்பது தான் நீதிமன்றத்தின் வேலை என்று அப்பாவி தனமாக நம்புகிறார்கள் என்று சொத்து குவிப்பு வழக்கு தீர்பை விமர்சிக்கும் விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

நல்லவர்கள் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள், அவர்களுக்கு அந்த தேவையும் இருக்காது. பிறகு யாருக்கு தான் நீதிமன்றம் தேவைபடுகிறது, அடாவடியும் அநியாயம் செய்பவர்கள் தான் நீதிமன்றத்தை நாடுவார்கள்.

அடுத்தவரின் சொத்தை அபகரித்துக்கொண்டு பொய்யான ஆவணங்களை கொண்டு காட்டி இது என்னுடையது அவன் அநியாயமாக கேட்கிறான் என்று சொல்வார்கள்.

இந்த வகை வழக்குகள் தான் 98% வரை, மற்ற 2% மக்கள் பொருக்க முடியாமல் நீதிமன்றம் போவார்கள். அப்படி செல்பவரை கீழ் மன்றத்தில் இருந்து உச்ச மன்றம் வரை அழைகழித்து இனி எதுக்கும் நீதிமன்ற வாசல் ஏற மாட்டேன் என்று திரும்பும் படி செய்வார்கள் அடாவடி காரர்கள்.

அப்போ நீதிமன்றத்தின் வேலை தான் என்ன என்று உங்களுக்கு தோன்றும், வாதி பிரதிவாதியின் வாதங்களையும் சாட்சியங்களையும் வைத்து முன்னுதாரணம் இருந்தால் அவைகளையும் கணக்கில் கொண்டு யார் சொல்வது சரி என்று முடிவை அறிவித்து செயல்படுத்தும் படி ஆணையிடுவது மட்டுமே நீதிமன்றத்தின் வேலை.

நல்லவர்கள் சாட்சி இல்லாமல் வந்தால் அவர்களது பாடு அதோகதி தான். கெட்டவர்களுக்கு எப்படி நீதிமன்றதில் வெற்றிகொள்ள வேண்டும் என்று நன்றாக தெரியும்.

ஆகையால் எல்லா வகையான பொய்சாட்சிகளையும் பொய் ஆவணங்களையும் கைவசம் கொண்டு வந்து இருப்பார்கள். அப்படி நல்லவரின் பால் அக்கரை கொண்டு நீதிமன்றம் வந்தார்களேயானால் இந்த கொடியவர்கள் நீதிமன்ற வாசலிலே அவர்களை மடக்கி அப்படியே திரும்பி போக மிரட்டுவார்கள், இது அமெரிக்காவிலேயே நடக்கும் உண்மை நிகழ்வுகள், இந்தியாவில் எம்மாதிரம். அதுவும் அமெரிக்காவில் பொம்பள கேடிகள் தான் இதில் கைதேர்ந்தவர்கள்.

அப்படியே நல்லவர்கள் தரப்பில் எல்லா சாட்சிகளையும் கொண்டு போனாலும் நீதிமன்றத்தில் நீதியரசருக்கு வழங்கபட்டு இருக்கும் வானலாவிய அதிகாரத்தில் Court Ruled என்று சொன்னால் அவ்வளவு தான் எதுவும் பேசுவதற்கு இல்லை.

ஒரு முறை நீதியரசர் Court Ruled என்று சொல்லிவிட்டால் பிறகு அவரால் கூட அதை மாற்ற முடியாது. மேல் மன்றத்துக்கு சென்று முறையிடனும் அப்படியே சென்றாலும் அவரும் இவர் சொல்வதை உறுதி செய்வாரே ஒழிய மாற்ற மாட்டார்கள். ஒரு வேளை உங்களின் பக்கம் வாதாட ஒரு நல்ல வக்கீல் கிடைத்தார் என்றால், எதிர் தரப்பு சாட்சிகளை உடைத்து எடுக்கிறார்கள் என்றால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதையும் உறுதியாக சொல்வதற்கு இல்லை. 3 அல்லது 4 மாதங்கள் கழித்து அந்த வழக்கு தொடர்கிறது என்று வைத்துக்கொண்டால் முன்னே அக்கரையா கேட்ட அதே நீதிமான் அன்றைக்கு என்ன கடுப்பில் இருக்கிறாரோ அதே வேகத்தில் போட்டு தாக்குவார்.

மிக சிறந்த நீதிமான் என்று எல்லோராலும் போற்றப்படும் ஒரு நீதிமான் இப்படி தான் நடந்துக்கொண்டார், அதை அவரே சொல்லவும் செய்தார், பொதுவாக இப்படி எல்லாம் செய்பவன் இல்லை நான் இருந்தும் இந்த வழக்கில் இப்படி செய்ய வேண்டி இருக்கிறது என்று  குறிப்பிட்டே எல்லா அநியாயத்தையும் தங்கு தடையில்லாமல் செய்த்தார்.

அது தான் நீதிமன்றம், கிட்டதட்ட மைசூர் போன்டா போல்.....................

0 comments: