Thursday, February 19, 2015

அமெரிக்காவின் பணக்கார திமிர் இது தானோ

அன்று நன்றி பாராட்டும் நாளை ஒட்டிய அமெரிக்க விற்பனை நாள். இந்த நாளில் காலை முதல் 6 மணி நேரம் மட்டும் பெருவாரியான பொருட்களை விலையை வீழ்த்தி அனேக கடைகளில் விற்பனை செய்யும் முன்னணி விற்பனை நிறுவனங்கள்.

2014 ஆம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வை பார்ப்போம்.

விற்பனைக்கு வாங்கிய பொருட்களுடன் மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஒரு அம்மாவும் அவளது விடலை மகனும் கையில் பொருட்களுடன் பணம் கட்ட வரிசையில் நிற்கிறார்கள்.

அவர்களுக்கு முன்னும் பின்னும் அமெரிக்கர்கள் தட்டுமுட்டு பொருட்களுடன் அவர்கள்.  ஒரு வழியாக இந்த அம்மாவின் முறை வர பொருட்களை பரப்பி பணம்கட்ட நினைக்கும் வேளையில் உடன் கொண்டு வந்த கடனட்டையில் போதுமான பணம் இல்லை என்று அறிவிக்கிறது.

மனம் கனத்த மனதுடன் அந்த அம்மா மகனின் முகத்தை பார்க்க, ஏமாற்றமாக அவன் அம்மாவை பார்க்க. கையில் இருக்கும் அலை பேசியில் பையனின் அப்பாவை கூப்பிடுகிறார். அவரும் வந்து தன்னிடமும் பணம் இல்லை என்று சொல்கிறார்.

அது வரையில் பொருமையாக இருந்த வரிசையினர் மெதுவாக தங்களது விரக்தியை வெளிக்காட்ட அந்த அம்மா, மற்ற பொருட்களை அப்படியே வைத்து இருங்கள், வந்துவிடுகிறேன் என்று சென்று மறைகிறார்.

அந்த அம்மா சென்றதும் அடுத்து வரிசையில் இருந்த இரண்டு வயது நடுத்தரத்தை தாண்டிய இரண்டு பெண்மணிகள் ஒரு இளக்கார பார்வையுடன் நக்கலாக பொருளுக்கு கடனட்டையை தேய்த்துவிட்டு என்ன பணம் எல்லாம் வந்துவிட்டதா என்று ஏளனமாக கேட்ட தொணி, நிச்சயமாக அந்த பணம் கட்ட முடியாமல் சென்ற அந்த அம்மாவை நக்கல் செய்துதான் என்று விளக்கம் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

மனதுக்குள் ஓடிய எண்ணம் இது தான், அந்த விடலை மகன் கேட்ட பொருட்களை எல்லாம் அந்த நாள் விற்பனையில் வாங்கிக்கொடுக்கிறேன் என்று வருடம் முழுவதும் தவிர்த்து வந்த அவள் அந்த நாளிலும் கையில் பணம் இல்லையே என்று சென்றவள் எப்படி அந்த விடலையின் மனதை ஆற்றுவாளோ என்று நினைத்துக்கொண்டு இருக்கையில்............

எங்கு இருந்து பணம் கிடைத்தது என்று தெரியவில்லை மீண்டும் அதே இடத்திற்கு வந்து விட்டு போன எல்லா பொருட்களையும் பணம் கட்டி வாங்கி அந்த விடலை மகனின் கைகளில் திணித்துவிட்டு கம்பீரமாக நடந்து சென்றது இன்னமும் மனதில் இருந்து நீங்காமல் இருக்கிறது.

சில மக்களுக்கு அடுத்தவரின் இயலாமையை பார்க்கும் போது மனதுக்குள் அப்படி ஒரு ஏளம் வரும் என்னமோ இவர்கள் எல்லாம் தெய்வீக பிறவிகளாகவும், மற்றவர்கள் எல்லாம் நரக்த்தில் இருந்து வந்தது போலவும் நடந்து காட்டுவார்கள்.

அந்த பணக்கார பெண்மணிகளின் திமிருக்கு திமிர் காட்டிய அந்த மத்திய கிழக்கு அம்மாவின் திமிர் அழகாகவும் பொருள் பொருந்தியதாகவும் அவசியமானதாகவும் இருந்தது. வாழ்க அந்த திமிர் பிடித்த அன்புத்தாய்.......

11 comments:

')) said...

சரிக்கு சரி வீராப்பு...!!! ?

')) said...

ஆண்டிற்கு ஒருநாள் தள்ளுபடிக்கு பறக்கும் பைத்தியக்காரக் கூட்டம் முண்டியடிக்கும் நிகழ்வை நாட்டின் ஒட்டுமொத்த மனநிலைபோல சொல்கிறீர்கள்.

அமெரிக்கர்கள்போல பிறருக்கு உதவுபவர்களைக் காண்பதும் அரிதே.
இதையும் பார்க்கவும்.
http://abcnews.go.com/WhatWouldYouDo/grocery-shopper-afford-food/story?id=12638084

')) said...

என்னங்க! ஏளனத்தையும், திமிரையும் பார்க்க அமெரிக்கா செல்ல வேண்டுமென்கிறீர்கள்.
விஜய்- தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "நீயா நானா" எனும் (பல மொக்கையாக இருந்த போதும்)
நிகழ்ச்சியைப் பாருங்கள்.
தமிழகத்தில் படித்த, பணக்கார, உயர் சாதி என நிர்ணயிக்கப்பட்ட, செல்வாக்குடைய ஆண், பெண்கள்- ஏன் இளைஞர்கள் கூட தம்மிலும் குறைந்தவர்களை எவ்வளவு ஏளனத்துடனும், திமிருடனும்; அலட்சியத்துடனும், அணுகுகிறார்கள் என்பதனை.
மத்திய கிழக்கில் வேலைக்குச் செல்லும் நம் இந்திய, இலங்கை,பங்களாதேசிய, பிலிப்பைன் மக்களும் , நாயிலும் கேவலமாகத் தான் நடத்தப்படுகிறார்கள். அதுவும் பணத் திமிர் தான்! 50 களுக்குப் பின் வந்த திமிர்.
நான் அமெரிக்கர்கள் செய்ததைச் சரி எனக் கூறவில்லை. ஆனால் "கருவாட்டில் புழுவெனக் கூக்குரலிடுவோம், ஆனால் கத்திரிக்காய்ப் புழுவை மறந்து விடுகிறோம்."

')) said...

seriously??? Would it be any different if it happened in India?

Get over blaming America for everything

')) said...

என்னங்க! ஏளனத்தையும், திமிரையும் பார்க்க அமெரிக்கா செல்ல வேண்டுமென்கிறீர்கள்.
விஜய்- தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "நீயா நானா" எனும் (பல மொக்கையாக இருந்த போதும்) நிகழ்ச்சியைப் பாருங்கள்.
தமிழகத்தில் படித்த, பணக்கார, உயர் சாதி என நிர்ணயிக்கப்பட்ட, செல்வாக்குடைய ஆண், பெண்கள்- ஏன் இளைஞர்கள் கூட தம்மிலும் குறைந்தவர்களை எவ்வளவு ஏளனத்துடனும், திமிருடனும்; அலட்சியத்துடனும், அணுகுகிறார்கள் என்பதனை.
மத்திய கிழக்கில் வேலைக்குச் செல்லும் நம் இந்திய, இலங்கை,பங்களாதேசிய, பிலிப்பைன் மக்களும் , நாயிலும் கேவலமாகத் தான் நடத்தப்படுகிறார்கள். அதுவும் பணத் திமிர் தான்! 50 களுக்குப் பின் வந்த திமிர்.
நான் அமெரிக்கர்கள் செய்ததைச் சரி எனக் கூறவில்லை. ஆனால் "கருவாட்டில் புழுவெனக் கூவுவோம், ஆனால் கத்தரிக்காயில் புழுவை மறக்கிறோம்.

Anonymous said...

Useless post. Where is american thimir here. Look at everything from multiple angles. Learn.

')) said...

நன்றி தணபாலன்

')) said...

குலவுசனப்பிரியன் நீங்கள் இன்னமும் இது போல் மக்களை சந்த்தது இல்லை என்றது தான் உண்மை. மிச்சிகன் நகரத்தின் கதைகளிலே தமிழ் பதிவர்கள் எழுதியபோது நானும் தான் நம்பவில்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் என்னுடன் நடக்கும் வரையில்.

')) said...

யோகன் இந்தியாவில் அன்றாடம் வெளிப்படையாகவே செய்வார்கள், அமெரிக்கா அப்படி எல்லாம் கிடையாது அப்படி இப்படி என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் இப்படி பட்ட செய்கைகளை பார்க்கவும் தான் செய்கிறோம்.

')) said...

நேர்கோடு இதே ஊரில் கடையில் திருடியதாக கையும் களவுமாக பிடிபடும் மக்களை பற்றி எழுதினால் என்ன சொல்வீர்களோ.

')) said...

அனானி அம்மா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.......