Tuesday, February 17, 2015

இசை - செயமோகனிடம் போட்டி இட்டு தோற்று போன சூர்யா

முதலில் இந்த படத்தை பார்க்கவேண்டுமா என்று இருந்தது. ஆனால் பதிவர்களின் வரிசையான ஆகா ஓகோ விமர்சனங்கள் படத்தை பார்க்கவேண்டும் என்று ஆனது.

படம் மோசார்ட்டின் மற்றும் ஒரு வடிவம் அவ்வளவு தான்.

சூர்யாவும் செயமோகனும் மொசார்ட்டை தமிழில் எடுக்க அந்த கதை திரைக்கதையை அப்படியே தமிழில் கம்பனாக்கம் செய்து கொடுக்க முடிவு எடுக்க, நல்லவைகளை மட்டுமே கொண்டு கொஞ்சம் ஊர்காய் போல் கொட்டவைகளை காட்டுவோம் என்று காவியத்தலைவனும்.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை கெட்டதையே கொட்டி படமாக இசையும் என்று வந்திருக்கிறது.

இயக்குனர் மணிரத்தினம் இந்த மாதிரி ஆங்கிலப்படத்தை தமிழில் எடுத்தால் மூலக்கதையை எங்கே மக்கள் கண்டுபிடித்துவிடுவார்களோ என்று இராமாயணம், மகாபாரதம் என்று எல்லாம் கதைவிடுவார். மக்களும் ஆமாம் இல்ல என்று அதையும் இதையும் சேர்த்து பார்த்து எழுதுவார்கள். அந்த சந்தடியில் எந்த ஆங்கில படத்தின் பிரதி என்று மக்கள் கேட்க்க மறந்து போவார்கள்.

இது மட்டும் இல்லாது காவியத்தலைவன் வந்து நமது படத்தை அடித்து துவைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் கூட இப்படி ஒரு கீழ்தரமான விளம்பரத்தில் இறங்கியும் உள்ளார் சூர்யா.

படத்தில் காட்டியது போல் வேலைகள் எல்லாம் உண்மை சம்பவங்களே. நல்லவன் நண்பனாக உதவுவான் என்று நம்பி அவனிடம் சென்று தனது துன்பத்தை எல்லாம் சொல்லி ஆருதல் அடைய நினைக்கும் மொசார்ட்டை இதமாகவும் நயமாகவும் பேசி பின்னால் அவனை அழிக்க மன்னரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வாய்பை கிடைக்கவிடாமல் செய்வதும்.

மொசார்ட்டின் மனைவியை படுக்கைக்கு அழைப்பதும், அந்த நேரங்களில் மொசார்டின் இசையை சரிபார்க்கவேண்டும் என்று சொன்னதை அவள் நக்கலடிப்பதும் என்று மிகவும் நயமாக அமைத்து எடுத்த அந்த கொடூரகாட்சிகளை எப்படி தமிழில் எழுதுவது என்று குழம்பு குழம்பு என்று குழப்பி கடைசியில் கற்பனை என்று குதிக்கிறார்.

மொசார்ட் படத்தில் மொசார்ட் அரசவைக்கு வரும் உடைகளும் அங்கு அவர் மன்னர் என்றும் பாராமல் அவருக்கு பின்புரத்தை காட்டுவதும் என்று மூலத்தில் வரும் காட்சிகளை தமிழில் மாற்றும் போது இளைஞனாக காட்டும் உடைகளும் விலை உயர்ந்த வண்டி பெரிய இயக்குனர் என்று எல்லாம் காட்டிய இவர், மொசார்டின் கலை திமிரை மட்டும் அந்த முதியவருக்கு இருப்பதாக காட்ட முற்பட்டு கதையில் அடி வாங்கியுள்ளார்.

அப்படி கர்வமாகவும் இசை செழிப்போடும் இருக்கும் மொசார்ட்டை கண்டு பொறாமை கொள்ளும் அந்த இசைக்கலைஞன் எப்பாடு பட்டேனும் மொசார்டை புகழடைய விடாமல் தடுக்கும் செயல்களில் இறங்குவான்.

அப்படி அவன் கையாளும் வழிகளில் பெண், பொய், மொசார்டின் வீட்டில் அவனுக்கு தெரியாமலே உளவாளியாக வேலைகாரி, மொசார்ட்டின் அப்பா இறந்த பிறகு அவனது தந்தை போல் வந்து பயமுடுத்துவது என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் மொசார்ட்டின் வாழ்வில்.

கிட்டதட்ட முடியும் தருணத்தில் தான் பாய்சு படமும் துள்ளுவதோ இளமை படமும் கிட்டதட்ட ஒரே படம் என்று செய்திவெளியாக சங்கர் முகம் சுளிக்கும் விதமாக பல சரக்குகளை உள்ளே புகுத்தி அடாவடி வெற்றிகாண வைக்க நினைத்தாரோ அதே நிலையில் சூர்யா. என்ன இவருக்கு படத்தின் கீழ்தரமான விளம்பரத்திற்கு இராசாவையும் இரகுமானையும் கொச்சைபடுத்தியுள்ளார்.

சிந்து பைரவி, சிகரம், காவியத்தலைவன் என்று வந்த மற்ற வடிவங்கள் எல்லாம் ஒரு நிறைவை கொண்ட கதையாக அவதரிக்க இசை மட்டும் குறைபிரசவமாகிப்போனதே, அதனால் தான் கனவாக காட்டி முடித்துவிட்டார் போலும். உங்களுக்கு கதை எழுத வரவில்லை என்றால் கதையை எழுதி தரசொன்னால் எழுதிக்கொடுக்க போகிறார்கள். வராத இசையை கொண்டு பாடாய்படுத்தியதை போல் எழுதவராத கதையை கொண்டு தயாரிப்பாளரையும் நம்மையும் துன்புறுத்துகிறார். இராசவை கொச்சைபடுத்துவதாக நினைத்து பாவம் இரகுமானை ஒரு வக்கிரம் பிடித்த இளைஞாகவும், காமம் சம்பந்தபட்ட இசை படத்திற்கு வேண்டும் என்றால் அதை பெண்ணின் இடுப்பில் தான் தேடுவார் என்றும் காட்ட முற்பட்டு இருப்பது கொடுமை, இன்னமும் இது போல் சேக்சுபியர் இன் லவு படத்தை கண்ணதாசனுக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் நடக்கும் மேதாவிதன மோதல் என்று படம் எடுக்க சொல்லுங்கள், அதிலும் இவரே இசையமைக்கட்டும், அப்போது தான் தெரியும் படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம் என்று.


0 comments: