Monday, July 16, 2012

இரா.நல்லகண்ணு அவர்களுடன் ஒரு சந்திப்பு -2012

2012 பெட்நாவில் கலந்துக்கொண்டு விட்டு நாடு திரும்பும் முன் அமெரிக்க தமிழர்களை சந்திக்கும் பயணமாக சிக்காகோ வந்த ஐயா நல்லகண்ணு அவர்களை சந்தித்தோம் ஒரு கலந்துரையாடலுக்காக.

சிறிய கூட்டமாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் எங்களுடன் கலந்துரையாடினார். அரசியல் மேடையாக இல்லாமல் இந்தியர்கள் தமிழர்கள் என்ற முறையில் நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தயக்கம் இல்லாமல் பதிலுரைத்தார்.

பொதுவுடமை கொள்கையில் ஊறிப்போய் இருந்தாலும் அமெரிக்க மக்களையும், அமெரிக்க நாட்டையும் பார்த்து பாராட்ட தயங்கவில்லை. இந்த பெருந்தண்மை அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் வேண்டும்.

கலந்துரையாடலில் முக்கியமாக விவாதிக்க பட்டவைகளில் ஒன்று தமிழகத்தின் அரசியல் போக்கு நல்லவிதமாகவோ ஆரோக்கியமாகவோ இல்லையே என்று கேட்டதற்கு ஆமாம் அப்படித்தான் இருக்கிறது. இன்னமும் மோசமான நிலைமையை நோக்கித்தான் செல்கிறது என்றார்.

இந்த நிலையை மாற்ற வழிதான் என்ன என்ற கேள்வி விவாதிக்கப்படாமலே காலத்தின் கைகளில் விட்டுவிட்டோம்.

கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் ஊர் பெயர்களையும் தெரிந்துக்கொண்ட அவர், அந்த ஊர் பற்றிய இன்றைய நிலைகளையும் குறிப்பிட்டார்.

87 அகவை நிறம்பிய அவர் அமெரிக்காவிற்கு தனியாக பயணத்திற்கு வந்து பல ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது பிரமிப்பாக இருந்தது.

ஒரு அரசியல் பிரமுகராக இல்லாமல் சாதாரண மனிதனின் பார்வைகளில் பிரச்சனைகளை விளக்கிய விதமும். தனது ஐரோப்பிய பயணத்தில் அந்த நாட்டு மக்களிடம் கேட்ட சுவையான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். உதாரணமாக, "இந்தியர்கள் எல்லாம் திருமணத்திற்கு முன் தனக்கு வரப்போகும் மனைவியை பார்த்தது இல்லையாமே என்று நக்கலாக கேட்டதிற்கு, இங்கே நீங்கள் எல்லாம் திருமணத்திற்கு பிறகு தங்கள் மனைவிகளை எல்லாம் பார்க்க முடிவதில்லையாமே என்று பதிலடி கொடுத்ததை குறிப்பிட்டார்"

திறந்த மனதுடன், கேள்விகளுக்கு அரசியல் சாயல் இல்லாமல் ஒரு பொது மனிதனாகவும். பொறுபான பதில்களையும் அவர் அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அமெரிக்க இனவெறியும் இந்தியாவின் சாதி வெறியையும் பற்றிய பேச்சு வரும் பொழுது, கிருத்துவர்களின் இனவெறி மறுப்புக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார்.

அமெரிக்க கிருத்துவ பாதிரிகள் கருப்பர்களை இன்னமும் முழுமையான மனிதனாக பரிணாமம் கொள்ளாத விலங்கு என்று உரைத்த கிருத்துமத போதனைகளை மறுத்து இனவெறி பாவம் என்று சொல்லுகின்ற இன்றைய நிலையை விளக்கி கிருத்துமதம் இன/சாதி வெறிகொள்ளா மதம் என்று விளக்கினார்.

இந்த செய்தி எங்களுக்கு புதிதாக இருந்தது அதுவும் அமெரிக்காவில் நடந்த மாற்றம், ஓபாமாவில் தான் வந்தது என்று எண்ணி வந்தோம் இது வரை.

திரைத்துறையில் இருந்து, ஆற்று நீர் பகிர்வு சண்டை வரை தெளிவாக விளக்கம் கொடுத்தார். அவருடன் பேசிக்கொண்டு இருந்தது தாயகத்தை விட்டு இவ்வளவு தொலைவு வந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருத்த நிலை போக ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொடுத்தார்.

இந்திய அரசியலில் கறைபடியா கைகள் அது அனேகமாக பொதுவுடமை கட்சியினரது கைகளாகத்தான் இருக்கும். அந்த வகையில், 87 ஆண்டுகளில் தான் அரசியலில் இருப்பதையோ ஏன் வேறு வேலைகளுக்கு சென்று இருக்கக்கூடாது என்ற தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் இன்றைக்கும் என்னால் என்ன என்ன நன்மைகளை செய்ய முடியும் என்று தேடி பிடித்து களப்பணியாற்றும் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துகொள்கின்றோம். நல்லோர் ஒருவர் உளரேனும் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை குறள் மனதில் வந்து செல்கின்றது.

அழிந்து கிடக்கும் அரசியலிலும் தூய்மையாக வாழ்ந்து நேர்மையாக களபணியாற்றலாம் என்று நிறுபித்து, தடுமாறி நிற்கும் இளைய சமுதாத்திற்கு அரசியலுக்கும் தாராளமாக வரலாம் என்று இடித்து உரைத்த உங்களது கருத்துகளுக்கும் நன்றி. வாழ்க உங்களது பணி, சிறக்கட்டும் மென்மேலும்.

8 comments:

')) said...

வணக்கம்!

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

எங்கள் பகுதியிலிருந்துதான் ஐயா அவர்கள் சிகாகோ நகரத்திற்கு வந்தார். அவருடன் பழகிய நாட்களை அசைபோட்டாலே சுகம் தான்!!! அனைத்துக் கேள்விகளுக்கும் மிகவும் எளிமையாக பதில் அளித்தது சிறப்பிலும் சிறப்பு.

செய்திப் பகிர்வினைக்குப் பாராட்டுதல்களும் நன்றியும்,

Anonymous said...

அன்புடையீர்,
வணக்கம். சற்றும் எதிர்பாராத வகையில் உங்கள் வலையப் பூக்களை முகர நேர்ந்தது. சாராசரி தமிழர்கள் பலரும் நுகரக்கூடிய வலையப்பூக்களை தமிழ் எழுத்துப்பிழைகள் தவிர்த்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்,
நன்றி

Anonymous said...

“பெட்நா” என்பது தவிர்த்து “பேரவை” என்பது தமிழ் இனிமை கூட்டும். தமிழ்நாட்டுத் தமிழாக இல்லாதும் அமையும்

sena said...

NAM KALATTHIL VAALUM MAMANITHAR,
Senapathy V

')) said...

செந்தில் வருகைக்கும் ஊக்கத்திர்க்கும் நன்றி.

')) said...

தமிழில் பிழையாக எழுதியதற்கு வருந்துகிறேன். தவறுகளை திருத்திக்கொள்கிறேன், தங்களின் சுட்டுதலுக்கு நன்றி.

')) said...

பேரவை என்று குறிப்பிடாமைக்கு காரணம், பேரவைக்கு வராத தெரியாத நண்பர்களுகும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால். சுட்டுதலுக்கு மிக்க நன்றி.

')) said...

சேனாபதி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. உண்மை எந்த காரணங்களுக்காக இவ்வளவு காலம் இவ்வளவு கடின சேவை வாழ்க்கை என்று கேட்டால் சேவைக்கு என்று அவரால் மார்தட்டி சொல்ல முடியும். எந்த பலனும் எதிர்பார்க்காமல் சேவை செய்பவர் மாமனிதர் தாம்.