இவர்கள் இருவரும் இரசிகர்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டு படும் பாடு, அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் கூட இவ்வளவு கருத்து வேறுபடு இருந்து இருக்க வாய்ப்பே இல்லை.
இராசாவின் இரசிகனாக இருந்தால் இரகுமானை கண்டபடி திட்டி தீர்க்கவேண்டும், இல்லை அவருக்கு இசையறிவு இல்லை, அப்படி இல்லை என்றால் இராசா அளவிற்கு இல்லை என்றாவது மட்டம் தட்டவேண்டும் என்று இவர்களுக்குள் வேண்டுதல் போலும்.
இரகுமானின் இரசிகர்கள் கேட்கவே வேண்டாம், இராசாவின் இரசிகர்களாவது பாவம் என்று பார்ப்பார்கள், ஆனால் இரகுமானின் இரசிகர்கள் உண்டு இல்லை என்று செய்துவிட்டு தாம் மறுவேலை பார்ப்பார்கள்.
என்னை பொருத்தவரை இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் அவரவர் பாணியில் தன்னை நிறுபிக்க என்றும் தவறியதில்லை.
இன்று இசையின் தடம் மாறுகிறது என்றதற்காக இராசாவின் இசை மாசுபட்டது என்று பேசுவது எந்த வகயிலும் பொருந்தாத ஒரு வாதம், முட்டாள் தனமும் கூட.
இராசாவின் பாடல்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டு இருக்கும் நேரத்தில் "வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை" பாடல் நெஞ்சை அள்ளவில்லை என்று ஒருவரும் மறுக்க முடியாது. அந்த இசையின் பரிணாமம் வேறு, இராசா இசையின் பரிணாமம் வேறு. இரண்டும் மனதை வருடிச்செல்லும் தாலாட்டு என்றதில் இரண்டு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.
எனக்கு இராசாவின் பாடல்கள் உயிர் எந்த புது இசை வந்தாலும் கவர்ந்தாலும், இந்த நிலையில் மாற்றம் வரப்போவது இல்லை.
காரணம் சின்ன வயது முதல் தனிவாழ்க்கையின் துவக்கம் வரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிது புதிதாய் தோன்று இராசாவின் இசை மழையில் நனைந்து உரம் பெற்று வளர்ந்த நெஞ்சம். அவரின் ஒவ்வொரு பாடலும் வாழ்கையில் கடந்து வந்த பாதையின் நல்ல நல்ல நினைவுகளை நினைவு படுத்துவது மட்டும் இல்லை, சின்ன வயதாக அந்த காலத்திற்கே அழைத்து சென்று மனது பார்த்துவரும் ஒரு உணர்வை கொடுப்பது தான் காரணமாக இருக்கும்.
எப்படி அந்த பாடல்கள் மனதில் இப்படி ஒரு இராசயண மாற்றம் செய்கிறது. பாடல் காரணமா அல்லது இனிமையான அந்த நினைவுகள் காரணமா என்றால் அது பாடல் தான் முதல் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியும்.
இரகுமானின் வரவுக்கு பிறகு வந்த மாற்றத்தில் சென்னை ஐஐடியில் 10000 வாட் இசை அமைப்பில் நெஞ்சு எலும்புகள் அதிர, ஊர்வசி ஊர்வசி என்ற பாடல் கேட்டு பிரமிக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த பாடலை மறுபடியும் கேட்கும் போது மனது அவ்வளவு இனிமையாக அந்த காலத்தை சென்று பார்த்து வருவது இல்லை தான். அப்படி ஒரு இராசாயண மாற்றம் கொள்ளுவதும் இல்லை.
காரணம் இதுவாக கூட இருக்கலாம், வானொலிகளானாலும் சரி, தொலைகாட்சிகளானாலும் சரி. ஒரு மணி அல்லது இரண்டு மணி வரை புதுவரவுகளை கொடுத்தாலும் மீதம் இருக்கும் நேரத்தை இராசாவும், அவருக்கும் முன்னால் உள்ளவர்களும் தான் ஆகிரமித்து கொள்கிறார்கள்.
இதிலே இப்போது இரவு நேரத்தை ஆக்கிரமிப்பதில் இராசாவும் ஆதிக்கம் செலுத்துகிறார். அடுத்த பாட்டை கேட்டுவிட்டு தூங்கிவிடலாம், அட அடுத்தது இன்னமும் இனிமையாக இருக்கிறதே, அட அடுத்தது இன்னமுன் இனிமையாக இருக்கிறதோ என்று கணக்கில் அடங்கா நேரம் தூக்கத்தை விட்டு விலகி மனது பழைய நினைவுகளில் நைத்து துவைத்து காயப்போடுவிடுவார் இராசா. காலையில் எழுந்து வரும் போது தவத்தில் இருந்து எழுந்தவரை போல் மனதில் அப்படி ஒரு அமைதி நிலவும்.........
இந்த அளவிற்கு எண்ணிகையிலும் சரி, விதங்களிலும் சரி முதல் இடத்தில் இருப்பது இராசா என்றே சொல்லலாம். இருந்தாலும் அவருக்கு முன் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்குத் தான் இரவு நேரம் என்று ஒதுக்கிவைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. மனதை அள்ளும் மெல்லிசையாகவும், வார்த்தைக்கு வார்த்தை கருத்துகளை அள்ளிவீசும் போர்வாளாகவும் பழைய பாடல்கள் மனதை தாலாட்டும் விதமே தனி சுகம்.
வார்த்தைகளுக்கு மெட்டா மெட்டுக்கு வார்த்தைகளா என்று பிரித்து பார்க்கமுடியாத இரகம் அவைகள். இதையும் தாண்டி, நமக்கு பிடித்த பாடல் என்று அழகாக அதிகம் சிரமம் இல்லாமல் எவரும் பாடி பார்க்கவும் முடியும் படி பாடல்கள் அமைந்து இருப்பதுவும்......
இப்படி எந்த எந்த காரணங்களை கொண்டு வந்து ஞாயப்படுத்தி பார்த்தாலும் அந்த பழைபாடல்கள் பிடித்து போவதற்கு சரியான காரணங்களாக அவைகள் இருக்க போவது இல்லை. உண்மையான காரணம், எளிமையாகவும், இனிமையாகவும் இருபது தான் காரணமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல், நமது மன உணர்வுகளை அழகாக மிகைபடுத்தி நமக்கே காட்டும் பாடல்களாக அவைகள் இருப்பதும் தான் காரணமாக இருக்கும்.
அதிக புதிய பாடல்கள் வந்துக்கொண்டு இருப்பதாலும், அலுப்பு தட்டும் இடி இசைகள் மனதை இடிப்பதுவுமாக இருப்பதாலும், மனது மெல்லிசையை தேடி அலைகிறது, இராசாவின் ஆர்ப்பாட்டமான இசைக்கூட மெல்லிசையாக மனதிற்கு தோன்ற வைத்த பெருமை இந்த கால இடி இசைகலைஞர்களை தான் சேரும்.
இரகுமானிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் இடத்தில் தான் நாம் இன்றைக்கு இருக்கிறோம். இந்த ஏமாற்றத்தை அவர்தான் நிறப்ப வேண்டும். வருடத்திற்கு 3 படங்கள் வரை ஆலிவுட்டில் வருகிறது. வருமானத்தையும் தாண்டி புகழுக்காக தமிழில் அவர் இனி இசை அமைப்பாரா என்றதே சந்தேகம் தான். அப்படியே தமிழில் இசை அமைத்தாலும் மனதை வருடும் இசையாக அமைந்தாலும் எத்தணை படங்கள் இசையமைத்து விடப்போகிறார்.
ஏமாற்றம் அடைந்த இரசிகராக மற்ற இசையமைபாளர்களின் பாடல்களை கேட்டு தலையசத்து காலம் தள்ளுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அந்த காலத்தில் வி குமார் என்ற ஒரு இசையமைப்பாளர் இருந்தார். அவரது பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் அருமையாகவும் இருக்கும். ஆனால் குறைந்த அளவிலேயே அவரால் பாடல்கள் கொடுக்க முடிந்தது.
தனது இரசிகர்களை ஏமாற்றிவிட போகிறாரா அல்லது தானும் மற்றவர்களை போல் மக்களின் மனதில் என்றைக்கும் தாலாட்டாக இருக்க முயற்சிகள் மேற்கொள்கிறாரா என்று பார்ப்போம்.
இராசா இந்த மாதிரியான கணக்குகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு என்றைக்கும் இருப்பார் இராசாவாக. அவர் ஒரு தனி சாம்ராசியம். புதிதாக வளர்ந்துவரும் இயக்குனர்கள் தயங்காமல் அவரின் இசையை கேட்டு வாங்கி எங்களுக்கு கொடுக்க வேண்டும் செய்வார்களா புதியவர்கள்....................
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago