கௌதமும் சரி, அவரது இரசிகர்களும் சரி, சிகப்பு ரோசாக்களை சொல்லி சொல்லி, நாய்கள் படம் அந்த படத்தை போல் அழகாக வந்துள்ளது என்று சொல்லி சிலிர்த்துக்கொண்டார்கள். இவ்வளவு ஏன் பாரதிராசாவையே அழைத்து மக்கள் முன்னிலையில் கருத்துக்கள் கேட்க்கும் அளவிற்கு சென்றார்கள் என்றால் பாருங்கள்.
1998க்கு முன்னால் அல்பிரடு இரிச்சுகாக்கு இந்த படத்தை எடுத்து இருந்தார். இந்த மனிதரை பற்றி தனியா ஒன்றும் நான் சொல்லி தெரிந்து கொள்வதற்கு இல்லை. திகிலும் மர்மமும் நிறைந்த திரை ஓவியங்களை வழங்கி திரைபடங்களின் போக்கில் ஒரு புதிய ஓட்டத்தை அளித்த மேதை இவர். இவரது படங்களை பார்த்தவர்களுக்கு எனது கருத்து புரியும் என்று நம்புகின்றேன்.
பிறகு 1998ல் மறுபடியும் வண்ண ஓவியமாக இந்த படம் எடுக்கப்பட்டது. அதே கதையும் திரைக்கதையும், நவீன அரங்கு தவிர.
இந்த படத்தின் தாக்கத்திலே பாலுமகேந்திரா, இந்திய அதுவும் தமிழ் கலாச்சார கலவைகளை கலக்கி மூடுபனி என்று எடுத்து இருந்தார்.
இப்படி பலவாரியாக நமக்கு நல்ல அறிமுகமான படத்தை எப்படி ஒரு புது கற்பனை என்று சொல்லிக்கொண்டு எடுத்தார் என்று தெரியவில்லை.
அதுவும், பாரதிராசாவை கூப்பிட்டு சப்பைகட்டு கட்டும் அளவிற்கு. பாக்கியராசின் திரைக்கதையில் இருந்த அந்த விறுவிறுப்பு நாய்கள் படத்தில் இல்லை, இல்லவே இல்லை. எப்போது படம் முடியும் என்று தான் இருந்தது வேறு செய்தி.
என்ன ஒரே ஒரு வித்தியாசம், தன்னை வளர்த்தவளையே... என்ற செய்தி தவிர.
பெற்றால் என்ன வளர்த்தால் என்ன அன்னை அன்னையே. அது எந்த பிறவியிலும் அந்த உறவில் எந்த மாற்றமும் கிடையாது. இது அனேகமாக அனைத்து மதமும் மனித நேயமும் ஒருங்கே சொல்லும் செய்தி. உலகின் எந்த பகுதியிலும் இந்த கருத்துக்கு மாற்று கருத்துக்கள் கிடையாது.
இடெக்கான் கெரால்டுவில் இந்த மாதிரியான செய்திகளை சோபாடே பெங்களூருவில் வரும் ஞாயிற்று கிழமை இதழில் ஆராய்ச்சி செய்ததுண்டு, 1998களில் படித்தாக நினைவு. அந்த செய்திகளை பற்றி அதிகம் அலட்டிக்கொண்டது இல்லை. ஏன் என்றால் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 5 உரூபாய்களுக்கு கிடைக்கும் இந்து நாள் இதழ் அங்கே அன்றைக்கு 1 உரூபாய்கு அந்த நாளில் விற்ற நாட்கள் அவை. போட்டியின் பெயரில் நடக்கிறது என்று தான் நினைத்து அலட்டிக்கொண்டது இல்லை.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கில் வாழும் தமிழர்கள் எல்லாம், மிருகங்களாக வாழ்வதாகவும். தமிழகம் தவிர்த்த மற்ற தமிழர்கள் எல்லாம் பேய்கள் என்ற அளவிற்கு சொல்ல வந்துள்ளார் கௌதம்.
ஏன் நீங்கள் ஒரு மளையாளி அதுவும் கேரளம் விட்டு விட்டு தமிழகத்தில் திருச்சியில் பொரியியல் படித்து இப்போது படமெடுத்துக்கொண்டு இருப்பவர். ஊர் விட்டு ஊர் வந்த மளையாளிகள் எல்லாம் இப்படி பட்ட வாழ்கை தான் வாழ்கிறார்கள் என்று ஒரு சப்பை கட்டு கட்டி இன்னும் ஒரு ஆங்கில படத்தை பிரதி எடுத்து முன்னால் தலையாக வைத்து இரு வேறு படம். அந்த ஆங்கில படத்தில் இது எல்லாம் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே.
பாம்பின் கால் பாம்பறியும் என்றது போல் அல்லவா இருக்கிறது உங்களது பாத்திர படைப்பு. இதிலே கலைஞர் தொலைகாட்சியில் கௌதமோடு நேரடியாக கேள்வி கேட்கலாம் பாருங்கள்..........
அகில உலக ஒழுக்க காவலர்கள் காவி கரசேவகர்கள் யாரும் கௌதமையோ அல்லது அவரது படத்தில் வேலை செய்தவர்களையோ தலை முடியினை பிடித்து நடுத்தெருவில் போட்டு அடித்து துவைத்தோ(பெங்களூருவில் நடந்து போல்) அல்லது பூனாவில் பிப்ரவரி 14ல் சிற்றுண்டி கடையில் குண்டு வைத்ததை போல் ஏன் பாதுகாக்க வரவில்லை. குறைந்தது ஊடகங்களிலாவது கண்டித்து இருக்கலாம். ஒரு வேளை கௌதம் மேனன் எடுக்காமல் கௌதம் சிகாமணியாக இருந்திருந்தால் ஊர் ஊருக்கு நாயுக்கும் கழுதைக்கும் திருமணம் செய்த்து விருந்து வைத்து, கண்டித்திருப்பார்கள் போலும். என்ன ஒழுக்க காவலர்களோ, என்ன கொள்கையோ, கோட்பாடோ.........
சரி படத்திற்கு வருவோம், ஆங்கில படத்தில் வரும் கதை இது தான். கொடூர கணவனால் கொடுமை படுத்தப்பட்ட தாய் தனது மகனுக்கு மனதில் தனக்கு பாதிப்பு வந்தது போல் இனி ஒருவருக்கும் கொடுமை நடக்கக்கூடாது என்று சொல்லும் போதனையில் பாதை தவறியவனாக அனைத்து பெண்களும் மோசம் அவர்களால் தான் சமுதாயமே இப்படி ஆனது என்று நம்பி. ஒவ்வொருவராக பொரி வைத்து பிடித்து இரசித்து இரசித்து கொல்லும் கொடூரனின் கதை. இந்த கதையின் முழு முடிச்சும், அப்பாவி பையன் ஆனால் அவர்களை தீர்த்துகட்டுவதோ அவனது தாயார் என்று கதை நகரும். இறுதியில் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகும்.
தமிழில் பார்க்கும் அழகு பெண்கள் எல்லாம் எனக்கு வேண்டும் என்று நினைக்கும் தன்னிலையற்ற கதா பாத்திரம். அப்படி பல பெண்கள் வீட்டில் இருந்தும் இன்னமும் அதிக பெண்கள் வேண்டும் என்று வெளியில் அலைவது எந்த அடிப்படையில் என்று கௌதம் தான் விளக்க வேண்டும்.
ஆங்கில கதையிலும் சரி மூடுபனியிலும் சரி, கொலை உணர்வுக்கும் அப்பால் ஒரு நல்ல பெண்ணோடு வாழவேண்டும் என்ற ஒரு ஆசை அவனுள் இருப்பதாக கதையில் காட்டி இருப்பார்கள். ஆனால் நாய்கள் படத்தில் அவனுக்கு தாய்க்கு பிறகு ஒரு பெண் தேவை படுவதெல்லாம் காமத்திற்கு மட்டுமே என்று காட்டி இருப்பது திருமணத்தை விபச்சாரத்தோ ஒப்பிட்டு மகிழும் அரைவேக்காட்டுகளின் கருத்தை போல் அல்லவா இருக்கிறது.
ஈசன், நாய்கள், யுத்தம் செய் போன்ற படங்கள் தமிழகத்திற்கு சொல்லும் ஒரே ஒரு நல்ல செய்தி இது தான். மாறியுள்ள இந்த பணம் புழங்கும் சமுதாயத்தில் வரம்புக்கு மீரிய வன்செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகள் படித்துவிட்டு ஆயிர கணக்கில் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் இந்த சமுதாயத்தில், அதுவும் குறிப்பாக பெண்கள் எந்தவிதமான பாதுகாப்பின்மையில் இருக்கிறார்கள் என்ற ஒரு எச்சரிக்கையாக வேண்டும் என்றால் வைத்துக்கொள்லலாம். அப்படி இருப்பினும், இப்படி ஒரு கெட்ட செய்தியை சொல்லித்தான் பயமுறுத்த வேண்டும் என்று இல்லை, இத்து மதத்தில் நரகத்தில் பிறகு எண்ணை சட்டியில் போட்டு உயிரோடு துடிக்க துடிக்க வறுத்து எடுப்பார்கள் என்று சொல்வதை போல். மாற்றாக திருக்குறளில் சொல்வதை போல் ' நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று' என்று மகேந்திரன் பாணியில் மென்மையாக எடுக்க கற்றுக்கொள்ளுங்கள், நீங்களும் ஆசுகர் விருது பெறலாம் நாளை.