Tuesday, May 18, 2010

New in Town - அமெரிக்காவில் தற்பொழுது வேலைவாய்ப்பு நிலையை சொல்லும் படம்

அதிக செலவு இல்லாமல், பெரிய பெரிய சாகசங்கள் எல்லாம் இல்லாமல் நாவல் படிப்பது போல் ஒரு கதை. அதை அருமையாக மனித நேயத்தோடும் வேலைகள் வெறும் வேலைகள் இல்லை அவைகள் சமூகத்தின் வாழ்க்கை என்று மீண்டும் ஒரு முறை சுய நல முதலாளிகளின் முகத்தில் அறைந்தார்போல் சொல்லும் படம்.

மையாமியில் இருக்கும் பெருநிறுவனத்தில் மின்னசோட்ட மாகானத்தில் இருக்கும் ஒரு சிறிய உணவு தயாரிக்குக் ஆலையை கவனிக்க நாயகியை அனுப்புகிறது நிர்வாகம்.

என்ன என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவைகளை எல்லம் செய்து அதிக இலாபம் ஈட்டி காட்டவேண்டும் என்ற கட்டளைகளோடு வருகிறாள் அந்த நாயகி.

அந்த ஆலை இருப்பதோ ஒரு சின்னஞ்சிறிய கிராமம், அந்த கிராமத்தில் இந்த ஆலையை தவிர சொல்லிக்கொள்ளும் படி வேறு எதுவும் கிடையாது. நீண்ட நாட்களாக அந்த ஊரில் இருக்கும் அந்த ஆலையை நம்பி பல குடும்பங்கள் வாழ்கிறது.

வந்த நாளில் இருந்து இவளுக்கு அங்கே எதிர்பு கிளம்புகிறது. வருகின்ற ஒவ்வொரு எதிர்புகளையும் தனது தனிப்பட்ட நடவடிக்கைகளில் சமாளிக்கிறாள். இவளால் இந்த ஆலை இழுத்து மூடப்படுவடு உறுதி என்ரு தெரிந்தும் அவளுடன் நல்ல உறவையே அனைவரும் கொள்கிறார்கள்.

முதல்கட்டமாக ஒரு இயந்திரத்தை நிறுவி கொஞ்ச ஆட்களை வேலையில் இருந்து தூக்கலாம் என்று நிர்வாகம் நினைக்கும் போது இவளாகவே அந்த நடவடிக்கைகளை தள்ளி போடுகிறாள். பின்னாளில் அந்த ஆலையை உடனடியாக மூடிவிடுவது என்று நிர்வாகம் தீர்மாணிக்க, அந்த நடவடிக்கைகளை நிறுத்தும் எண்ணத்துடன் மையாமி பறக்கிறாள்.

அங்கே நிர்வாகத்துடன் இவள் சண்டைக்கு நிற்கும்போது தலைமை செயலாக அதிகாரியாக உணக்கு இதில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி அவளது வாயை அடைக்கிறார்கள். பிறகு மனதில் வரும் வேதணைகளை முழுங்கியவண்ணம் ஊர் திரும்பும் தருவாயில் அவளது செயலர் பெண்மணி, இவள் இல்லாத நேரத்தில் யாரை எல்லாம் வேலை நீக்கம் செய்ய போகிறார்கள் என்று பார்த்து அதிர்ந்து போய் இவளது வருகைக்கு காத்து இருந்து மனமார திட்டிவிட்டு போகிறாள்.

அப்போது கேட்ப்பாளே ஒரு கேள்வி, இந்த பயங்கர நடவடிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு உன்னால் எப்படி இவ்வளவுகாலம் பேசி சிறித்து பழகமுடிகிறது. உன்ன்னை எல்லாம் என்ன என்று சொல்ல்வது என்று சொல்லிவிட்டு இவளுக்காக இவள்விரும்பி சாப்பிடுவாளே என்று அவளுக்காக தாயாரித்த ஒரு தயிர் உணவை கொடுத்துவிட்டு போவாள்.

இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் இருக்கும் அவளுக்கு நட்டத்தை காரணம் காட்டும் இந்த ஆலைக்கு தான் உண்ணும் இந்த தயிர் உணவை தயாரித்து மக்களிடம் பிரபலபடுத்திவிட்டால் அதால் வரும் இலாபத்தை காட்டி இந்த ஆலையை மூடுவதில் இருந்து தடுக்கலாம் என்று அனைவரையும் அழைத்து பேச. முதலில் பட்டும் படாமலும் பேசும் தொழிலாளர்கள், கடைசியில் நமது வேலை போகாமல் இருக்க இவள் இவ்வளவு செய்கிறாள் நாம் என்ன செய்தோம் என்று ஈடுபட, ஆலையும் காப்பாற்றபடுகிறது அவர்களும் காப்பாற்ற படுகிறார்கள் என்று கதை பயணிக்கும்.

நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் வரும் பிணக்குகளை அழகாக காட்டியதுடன் நில்லாது, நல்ல நிர்வாகம் வேலைகளை வேலைகளாக மட்டும் பார்க்காமல் வேலையாட்களின் வாழ்க்கையாக பார்க்கவேண்டும் என்று அருமையாக சொல்லும் படம். என்ன சொல்லி என்ன அமெரிக்க முதலாளிகளுக்கு இப்போது காசு பைதியம் தலைக்கு ஏறிய போதையாக இருக்கிறது. பார்ப்போம் எப்படி எல்லாம் இன்னமும் சுரண்டுகிறார்கள் என்று......

2 comments:

')) said...

பகிர்விற்கு நன்றி.

பார்க்க வேண்டும்.

')) said...

சூர்யா பார்த்துவிட்டு கருத்துகளை கட்டாயம் தெரிவிக்கவும். அமெரிக்க பொருளாதாரத்தை வளர்த்ததும் வளர்த்து பேனிக்காப்பதும் நாங்கள் தான் என்றி பிதற்றிக்கொண்டு இருக்கும் முதளாலிகளின் முகத்தின் உண்மை வடிவத்தை வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது. வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி.