வெளி நாட்டுமக்கள் இந்தியாவிற்கு வந்து எத்தனையோ நல்ல நல்ல வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். உதாரணத்திற்கு சேவை நிறுவணங்கள் தொட்டு ஆராய்ச்சி நிறுவணங்கள் வரை பணியாற்றுகிறார்கள்.
மதவாத பொய்களை எல்லாம் உண்மைகள் என்று நம்பியவர்களும் கூட கூட்டம் கூட்டமாக வந்து இங்கேயே தங்கி இந்தியர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழும் இந்த காலத்தில்.
தினமலர் இப்படி ஒரு செய்த்தி வெளியிடுகிறது, ஏன் இந்தியாவிற்கு வரும் வெளி நாட்டு ஆண்கள் எல்லாம் மிகவும் ஒழுக்கமாகவும் பொறுப்பாகவும் இருக்கிறார்கள் போலும், பெண்கள் மட்டும் தான் இப்படி ஆகிவிட்டார்கள் போலும்.
வெளி நாடுகளுக்கு வந்து வாழ்ந்து பாருங்கள் தினமலர் மக்களே அப்போது தெரியும் எவ்வளவு அழகான வாழ்க்கையை இங்கே மக்கள் பொறுப்புடன் வாழ்கிறார்கள் என்று தெரியும்.
வெளி நாடுகளில் கழிப்பறைகளில் கூட இப்படி ஒரு வீச்சம் அடிக்காது அப்படி ஒரு வீச்சம் ஊர் முழுவதும் அடிக்கிறது அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் இந்த பெண்கள் புகை பிடிப்பதையும் அதுவும் தெருவோரம் உட்கார்ந்து இருப்பதை பிளாட்பாரவாசி என்று விமர்சிக்க உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது.
பிளாட்பாரத்தில் மக்களை வசிக்கும் படி வைத்திருக்கும் நிலைக்கு இந்தியாவே தலைகுணிய வேண்டும். அதைவிடுத்து, வெளி நாடுகளிலும் இப்படி தான் இருப்பார்கள் என்று எழுதும் இந்த செய்த்திதாள் தான் உலக தரமாம்.
சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை............
தனது முதுகை முதலில் பார்க்கவும், அடுத்தவர்களை பிறகு பார்க்கலாம்.
2 comments:
வெளி நாடுகளிலும் இப்படி தான் இருப்பார்கள் என்று எழுதும் இந்த செய்த்திதாள் தான் உலக தரமாம்.
/////
ha ha
every one know that newspaper quality
//சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை.// சரியாகச் சொன்னீர்கள்.
Post a Comment