Tuesday, February 2, 2010

வைரமுத்துவிடம் சில கேள்விகள்......

எனக்கும் வைரமுத்துவிடம் சில கேள்விகள் உண்டு. ஆனால் கட்டாயம் இராசாவை சார்ந்த கேள்வி அல்ல. இராசாவை கங்கை அமரன் திட்டாத திட்டா நீங்கள் திட்டி விட போகிறீர்கள். அல்லது அவர் தூற்றாத தூற்றா நீங்கள் தூற்றி விட போகிறீர்கள்.

கமலகாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பை தடுத்தார் இராசா என்றும்

யாரு மெட்டை பிரதி(copy) எடுப்பது இல்லை என்று அனுவுடன் சேர்ந்துக்கொண்டு பாலுவின் முன்னாலே இராசாவின் மானத்தை வாங்கியதைவிடவா அல்பமாக வாங்கிவிட்டார் இவர்.

ஒரு காலத்தில் அமெரிக்காவில் தங்கி ஓய்வாக இருக்க வேண்டி திரைபடத்தின் வாசம் கூட அறியாத ஒரு தமிழரின் வீட்டில் தங்கி இருந்தாரம் இராசா. ஊருக்கு திரும்பும் போது அதிக விலைக்கு ஒரு கைகடிகாரத்தை வாங்கியதை பார்த்த அந்த தமிழர் கேட்டாராம் இதைவிட மிக குறைவான விலையிலே மிக தரமான கைகடிகாரம் கிடைக்குமே இத்தனை விலை எதற்கு கொடுப்பான் ஏன் என்று கேட்க. இது எனது தம்பிக்கு வாங்குகிறேன் என்று மட்டுமே சொன்னார் என்றும் சொல்வார்கள்.

அந்த தம்பி பேசும் பேச்சா இது, கைங்கை அமரனாவது பரவாயில்லை. அவர்களது பிள்ளை செய்த காரியம் இருக்கிறதே. அவர்களுக்கு பாடல்கள் என்றால் அது பாடல்களின் வரிகளை வைத்துதான் பிடிக்குமாம். இசையை வைத்து எல்லாம் இல்லை என்று பேட்டி கொடுக்கும் அளவிற்கு சென்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் சொன்ன புகார்களை எல்லாம் விட வைரமுத்து சொன்னவைகள் மிகக்குறைவே.

2009 ஆண்டுக்கான் பெட்னாவில் கலந்துகொள்ள சென்று இருந்தோம். வைரமுத்து 4 நாட்களுக்கு முன்னால் வந்தவர். ஆனால் விழா மேடைக்கு இரண்டாம் நாள் இறுதியில் தான் வந்தார். அவர் விழாவிற்கு வரும் முன் தான் ஒரு கவி அரங்கம் நடந்தது. அந்த கவியரங்கத்தில் கவிஞர் செயபாசுகரன் தவிர மற்றவர்களது கவிதைகள் மிக சுமாராகத்தான் இருந்தது. அங்கே வந்து ஒரு நல்ல கவிதையை வழங்காமல் சென்றது ஏன்.

செயபாசுகரனோ தனக்கு இது தான் முதல் வாய்ப்பு என்றாலும் எத்தனை அழகான கவித்தைகள், நாங்கள் அவரது கவித்தைகளுக்கு மகிழ்ந்தோம் அத்தனை மகிழ்ந்தோம். அவ்வளவு நகைச்சுவை அவரது கவித்தைகள். அது போல் இல்லை என்றாலும் ஒரு சிறு கவித்தையை தூவிவிட்டு சென்று இருக்கலாமே ஏன் அப்படி ஏதும் செய்யவில்லை.

மேலும் கடைசி நாளில் நடந்த இலக்கிய கூட்டத்தில், இலக்கியத்தை அலசு அலசு என்று அலசினார்களே எங்கே போனீர்கள் என்று. அந்த பக்கம் கூட தலைவைத்து கூட படுக்கவில்லை. ஏன் ஏன் ஏன்........

நல்ல தமிழில் பேச கூட முடியவில்லை என்றாலும்(கனிகாவும், செயசிறியை தவிர, இவர்கள் இருவருக்கும் இவ்வளவு அழகாக தமிழ் வரும் என்று எங்களுக்கு கனவிலும் தெரியாது. எத்தனை அழகான உச்சரிப்பு, எத்தனை அழகான வார்த்தைகள். அதிலும் தமிழ் வார்த்தைகளை கேட்டு அவர்கள் அடித்த நக்கல், அமெரிக்க தமிழ்கர்களின் தமிழ் புலமையை வெளிச்சம் போட்டு காட்டியது.) விழாவிற்கு வந்த திரைபட கலைஞர்கள் அனைவரும் எத்தனை அழகாக இரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள். தன்னை கேலி செய்த்தவர்களை அனுராத என்ன அழகாக கையாண்டார் அன்றைய இரவு. நீங்கள் ஏன் எதிலும் கலந்துகொள்ளாமல் வெளியேறினீர்கள்.

இராசாவை திட்டுவதாலோ அல்லது புகழ்வதாலோ அவரது புகழ் குறையப்போவதும் இல்லை. உங்களை பற்றி பத்தி பத்தியாக புகார் எழுதுவதாலோ உங்களது புலமை பழுது படப்போவதும் இல்லை. ஆனால் எனது கேள்விகளுக்கு எனக்கு பதில் வேண்டும். எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நாங்கள் இருந்தோம். மைல்சாமி அவர்களுக்கு கொடுக்காத பாதுகாப்பை வழங்கி எல்லாம் உங்களை மேடைக்கு தாங்கி கூட்டி கொண்டு வந்தார்களே ஏன் கவிதை சொல்லாமல் சென்றீர்கள் கவிஞரே, ஏன், எதற்கு.........

2 comments:

')) said...

பனிமலர், கேள்விய நல்லாத்தன் கேட்டிருக்கீங்க. யாரு பதில் சொல்றது உங்களுக்கு கவிஞரா?

அவர் பெஃட்னா நிகழ்வுக்கு வந்தபோது இருந்த நிலமை என்ன தெரியுமா? "அவர் வந்திருக்காரு ஆனா வரமாட்டாரு"-ன்னு என்னத்த கண்ணையா மாதிரி சொல்லவேண்டிய நிலமை.

உங்களைப்போல் எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

')) said...

அரசூரான்,

வைரமுத்துவை பற்றி நீங்கள் வாசித்த கவிதையை பார்த்தோம், உங்களது பதிவையும் பார்த்தோம். கவிஞர் தான் பதில் சொல்ல வேண்டும்.

மையில்சாமியை சாப்பிடக்கூட விடாமல் மக்கள் தொல்லைகள் தந்தபோதும் கோவிக்காமல் எல்லோருக்கும் அமைதியாக பதில் தந்துக்கொண்டு இருந்தார்.

வைரமுத்துவை விழாவுக்கு அழைக்ககூடாது என்று இருந்த கருத்துவேறுபாட்டில் துவங்கி, அவர் வந்து சொதப்பியது வரை அத்தனையும் குழப்பங்கள்.

ஆலன் அம்மையார் பேச்சு பிறகு அவர் பேசிய பேச்சு ஒன்றும் அப்படி எடுபடும் படியாக இல்லை. சரி போகட்டும் கவிதையாவது சொல்வார் என்று பார்த்தோம், அதுவும் இல்லை. அல்லது இலக்கிய கூட்டத்திலாவது கலந்துகொள்வார் என்று பார்த்து ஏமாந்தோம்.

நேற்றைக்கு வைரமுத்துவிடம் சில கேள்விகள் என்று எப்புடியின் பதிவை பார்த்ததும் இந்த பழைய நினைவுகள் எல்லாம் வந்து போனது. அது தான் எழுதினேன்.......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.