Sunday, February 21, 2010

தீராத விளையாட்டு பிள்ளை - திரைவிமர்சனம்(Wedding Crashers )


விசாலுக்கு அடுத்தபடியாக என்ன செய்வது என்று தெரியவில்லை போலும் இப்படி ஒரு கதையில் நடிக்க அவர் எப்படி தான் ஒத்துக்கொண்டர் என்று தெரியவில்லை. படத்தில் விசாலுடைய வேடம், உடலமைப்பும் அப்படியே சிவா மனசுல சக்தியில் வரும் சீவாவை பார்ப்பது போலே இருக்கிறது.

அது மட்டும் இல்லாது, இந்த படத்தில் பெண்களை கண்டபடி ஏசியும் பேசியும் பேசுவதில் அளவுக்கு மிஞ்சி வசவுகளை வீசியுள்ளார். இது விசாலின் மேல் இனி மேல் இரசிகைகளுக்கு அலுப்பு தட்டும்.

தீராத விளையாட்டு பிள்ளையாக காட்டும் காட்சிகள் அனைத்திலும் சிம்புவை நடிப்பில் கொண்டு வந்து காட்டுகிறார். என்ன விரல் வித்தை மட்டும் தான் இல்லை.

எதற்காக இப்படி பெண் தேடுகிறார் என்று கேட்டால், சின்ன வயதில் இருந்து என்று துணை கதை வேறு சகிக்கவில்லை.

பெண் பார்ப்பதையும், சட்டை, காய்கறி வாங்குவதும் ஒன்று என்று பேசும் அளவிற்கு இவர்களது நாகரீகம் வளர்ந்துள்ளது நல்ல பரிணாம வளர்ச்சி.

சரி கதையிலும் வசனங்களிலும் ஏன் இப்படி ஏக குழப்பம். கதை பாத்திரங்கள் முன்னுக்கு பின் முறனாக நடப்பது பேசுவதுமாக இருக்கிறார்களே என்று படம் பார்ப்பவர்கள் குழம்பித்தான் போவர்கள்.

அப்படி என்ன தான் கதையாக எழுதி இப்படி குழப்பிக்கொண்டார்கள் என்றெல்லாம் யாரும் குழம்ப வேண்டாம். இந்த படம் ஆங்கிலப்படம் (Wedding Crashers ) தமிழாக்கம்.ஆங்கிலத்தில் கதை இது தான், இரண்டு நண்பர்கள். நீண்ட நாள் நட்பு, தனது திருமணத்தோழனாக நீ தான் எனக்கு என்று அழைக்கும் அளவிற்கு. அந்த நண்பர்களின் பொழுது போக்கு, அக்கம் பக்கம் நடக்கும் பெரிய திருமணங்களுக்கு செல்வதும். அந்த திருமணங்களில் மாட்டும் அழகான பெண்களை மயக்கும் மாதிரி பொய்களையும் நடிப்புகளையும் நடத்தி தங்களது ஆசையை தீர்த்துக்கொள்வதும் தான் அவர்களது பொழுது போக்கு.

இந்த செயலுக்கு அவர்கள் அள்ளிவிடும் பொய்களையும் நடிப்புகளையும் பார்த்தால் அடக்க முடியாத நகைப்பாக இருக்கும். உதாரணம் என்று துவக்க காட்சிகளில் மத வித்தியாசம் பாராமல் எத்தனை வகையான திருமணமாக இருந்தாலும் செல்வதும். அவர்களது பழக்க வழக்கங்களுக்கு தகுந்தார் போல் பேசுவதும், அந்த பெண்களுக்கு தகுந்தார் போல் பேசுவதும் படத்தில் நல்ல கல கலப்பாக இருக்கும் ஆங்கிலத்தில்.

இப்படியே ஒரு நாள் ஒரு பெரிய அரசியல்வதியின் திருமணத்திற்கு செல்வார்கள். அங்கே நண்பர்களில் ஒருவனுக்கு ஒரு பெண் கிடைக்க மற்றவன் வலையை விரித்து வைத்து அலைவான். கடைசியில் அந்த பெண்ணும் இவனோடு பழகும் எண்ணத்தில் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வர்கள்.

அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அவன் அவளிடம் காதல் கொள்வான். ஏற்கனவே திருமணம் அவளுக்கு நிச்சயக்க பட்டிருக்கும் நிலையில், அவளும் இவன் மீது காதல் கொள்வாள். எல்லாம் அமையும் போது இவர்கள் யார் என்ன எப்படி என்று அவளை கட்டிக்கொள்ள போகிறவன் கண்டு பிடித்து இவர்கள் இருவரையும் விரட்டி அடிப்பார்கள்.

காதலன் காதலியை அடைகிறானா பிறகு என்ன நடந்தது என்று எல்லாம் மிகவும் சுவாரசியமாக படமாக்கி இருப்பார்கள் ஆங்கிலத்தில்.

இந்த படத்தை தான் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை என்று எடுக்க பார்த்திருக்கிறார்கள் இவர்கள்.


அந்த பெரிய அரசியல்வாதியாக தமிழி பிரகாசுராசு, ஆண்களையே பிடிக்காத பாத்திரம், அந்த ஆங்கிலபடத்தில் வரும் ஓரினசேர்க்கை மகன். ஏற்கனவே காதலில் ஏமாந்த பெண்ணாக வரும் பாத்திரம், ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட தலைவி, நாயகி பாத்திரமும் அவளே. மிகவும் ஆழமான நண்பன் இந்த 3 நகைப்பர்கள் என்று பாத்திரங்களை உருவாக்கி கொண்டு விட்டார்கள்.

கடற்கரையில், வீட்டில் என்றும் பார்க்கும் இடங்களில் எல்லாம் பெண்களை கூடுவதும், தலைவியின் அம்மா நண்பனை உறவுக்கு அழைப்பதையும் தமிழ் காட்டமுடியாமல் அதை வசனங்களில் வக்கிரமாக சேர்த்துள்ளார்கள் தமிழில்.அது தான் தீராத விளையாட்டு பிள்ளையை பார்க்க சகிக்கவில்லை. திமுக குடும்பத்தினர்கள் சமீப காலமாக இப்படி ஆங்கிலப்படங்களை தமிழில் உருவி எடுக்கும் வேலைகளை கடமையாகவே கொண்டு செய்து வருகிறார்கள். இது எங்கே சென்று நிற்கிறது என்று பார்ப்போம்.

2 comments:

')) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

')) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in