Sunday, February 3, 2008

மத்திய இல்லினாய் தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழா.

காலையில் நிரலில் குறிப்பிட்டிருந்த நேரத்தில் பொங்கல் விழா இனிதே துவங்கியது. விழாவை பொறுப்பேற்று நடத்திய சுப்பு அவர்களின் வரவேற்புரையில் துவங்கியவிழா, மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தால் நடத்தப்படும் தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் தொடர்ந்தது. இனிமையும் அதைவிட அதிகமாக மழலைமொழியாகவும் அமைந்த அந்த இசை, வளர்ந்த மாணவர்களின் வழிகாட்டுதலில் இனிமையாக பயனித்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது.


அடுத்ததாக பரதம் பயிலும் சிறுவர் சிறுமியர்கள், தாங்கள் இது வரை பயின்ற கலையினை அழகாக நடனமாடி மகிழ்வித்தார்கள். பரதத்திற்கு என்ற ஆடையுடன் கை, கால், முகம் என்று அத்தனை வித விதமாக அவர்கள் காட்டிய அந்த பரத முறைகள் அவர்களது தேற்சியை காட்டியது.

ஆடல் கலையே தேவன் தந்தது பாட்டிற்கு நாட்டிய நடனமாடிய இல்லினாய் பல்கலைகழக மாணவி, பாடலில் வந்த அத்தனை செய்திகளையும் நடனமுறையில் வெளிகொண்டு வந்து காட்டியது அருமையாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்த வருடம் தான் பயிற்சியினை துவங்கி இருக்கும் இளம் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.


இரண்டு ஆண்டுகளாக பொறுப்புவகித்து வந்த செயற்குழு, தனது பதவிகாலம் முடிவடைந்தால் பதவி விலகுவதாக தெரிவித்ததை கருத்தில் கொண்டு. இனி வரவிருக்கும் நாட்களில் சங்க நடவடிக்கைகளை நடத்திசெல்ல புதியதொரு செயற் குழுவினை தேர்ந்தெடுக்கும் அறிவிப்பினை பதவியை விட்டுச்செல்லும் செயற்குழுவும், பொறுப்பு வகிக்கும் தற்காலிய செயற்குழுவும் அறித்தது. மின்னஞ்சலோ, அல்லது சங்கத்தின் வலை தளத்திலோ சங்க உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தையும் ஆதரவுகளையும் தெரியபடுத்துமாறு அறிக்கப்பட்டது.இதுவரை செவிக்கும், விழிகளுக்கும் விருந்துதளித்த விழா, வயிற்றுக்கும் விருந்தளிக்கும் பொருட்டு உணவு இடைவேளை அறிவித்தது. வித விதமான உணவுகள், சூடாக மணம் பரப்பிய வண்ணம் அனைவரது பசியையும் பலமடங்கு கூட்டிக்கொண்டே சென்றது உணவு வயிற்றுக்குள் சென்றடையும் வரை. உணவோடு காதுக்கு இனிமையாக திரையிசையை தேனமுதாக ஒரு புரம் வழங்க, விழாவுக்கு வந்தோரை நலம் விசாரிப்பில் துவங்கி என்ன என்ன உணவு வகைகள் இனிதாக மிக இனிதாக இருக்கிறது என்று தெரிவு தெரிவிக்கும் வகையில் பேச்சுக்களுடன் இனிதே முடித்தது உணவு இடைவேளை.தொடர்ந்து இல்லினாய் பல்கலைகழக மாணவர்களது இசை குழு ஒரு மெல்லிசை விருந்தளித்தது. இது வரையில் நடந்தது போல் இல்லாமல், வயலின், கித்தார், தபேலா, கீ போர்டு என்று வந்த இசைக்குழு சிறப்பாக பாடல்களை இசைத்து இன்னிசை விருந்தினை வழங்கியது. ஒரு தொழில் முறை இசைக்குழு இசைத்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைத்தது இவர்களது இசை விருந்து. வாசிப்புகளிலும், இசை ஒருங்கிணைப்பும் அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தது.குழந்தைகள் செய்வது எல்லாமே அழகுதான். அதுவும் கள்ளமில்லா அந்த நட்சத்திரங்கள் சிரிக்கும் அழகே அழகு. சிரிப்பென்ன அவர்களது ஆட்டத்தையே பாருங்கள் என்று ஒரு ஆறு நட்சத்திரங்களை மேடையேற்றி வளைய வர வைத்தார்கள் பெற்றோர்கள். பக்கத்தில் ஆடுபரையும், அப்படியும் தெரியவில்லை என்றால், சொல்லி கொடுத்தவர்களையும் நோக்கி சரிசெய்து கொண்டு ஆடிய அழகு இருக்கிறதே அதை பார்த்தால் தான் தெரியும் அதன் அழகும் அருமையும். அருமை அருமையிலும் அருமையாக அமைந்தது அந்த நிகழ்ச்சி.
குழந்தைகளின் நடனத்தை இந்த தொடுப்பில் பார்க்கவும்

பொங்கல் விழாவில் பொங்கல் சம்பத்தமாக இருக்கவேண்டும் என்று மகளீர் மன்றம் சார்பாக கும்மி ஆட்டம் ஒன்றை வழங்கினார்கள் மகளீர் மன்ற உறுப்பினர்கள். நடுவில் வைத்த பூங்கலசத்தை சுற்றி வந்து தந்தத நாதினம் தன்னானே பாட்டுக்கு கும்மியிட்டது எந்த நாடு ஆனாலும் சரி எங்களது பாரம்பரியத்து இசையும் பழக்கமும் வேறு எந்த நாட்டினது பாரம்பரியத்துக்கும் சளைத்தது அல்ல என்று உரைத்து சென்றது. இந்த ஆண்டு துவங்க பெற்ற மகளீர் மன்றம் தான் என்றாலும், ஆரம்பம் முதல் அசத்தும் அவர்களது மன்றம் வாழ்க, உங்களது பணி தொடரட்டும், சிறக்கட்டும்.


மௌன மொழி விளையாட்டு, இதில் அனேகமாக அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். வார்த்தைகளை ஊகிக்கும் விளையாட்டை விறு விறுப்பாக்கும் விதமாக விடை பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு மேடையில் பரிதவிக்கும் அவர்களை பார்க்கும் போதும். இதை கூட உங்களால் சொல்ல முடியவில்லையா என்று கீழே இருந்து கேட்க்கும் கேள்விகள் என்று நல்ல கேளிக்கையாக அமைத்தது.பிறகு தொடர்ந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் இந்த முறை போட்டி பலமாக இருந்தது. ஒரு புரம் பழைய பாடல்களாக அசத்த, மற்றொரு புரமோ புதியபாடலாக அசத்த. பெண்களின் அணிகளுக்கு இடையில் ஒரே ஆண்கள் அணி என்று மாட்டிய அவர்கள் திணறிய அவர்களை கீழே இருந்த மக்கள் துப்பு கொடுத்து உதவியது நல்ல கேளிக்கையாக அமைத்தது.

வரவிருக்கும் சித்திரை திருவிழாவினை அறிவித்து நன்றி உரையுடன் விழா இனிதே முடிந்தது. அடாது பனி பெய்தாலும் விடாது விழா நடத்துவோம் என்று அறிவித்தது போல் இந்த விழா மிகவும் சிறப்பாகவும், நிறைவாகவும் நடத்தி கொடுத்த மத்திய இல்லினாய் தமிழ் மக்களுக்கு தமிழ்ச்சங்கதின் சார்பில் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கிறோம்.
பனிமலருக்காக மத்திய இல்லினாய் தமிழ்ச்சங்கம்.

0 comments: