Thursday, September 20, 2007

கீதை-2

மதியத்திற்கு மேல் பொழுது போவதே மிகவும் கடினமாக இருந்தது அவனுக்கு. என்ன தான் செய்ய சரி தேனீராவது அருந்துவோம் வெளியிலே சென்றான். வெயிலோ மண்டையை பிளக்கும் அளவிற்கு, அருகாமையில் இருந்த மர நிழலில் அவன். மெதுவாக தேனீரை அருந்தியபடி வானம், அருகாமையில் குளம் அதிலே மிதக்கும் வாத்துக்கள், மரத்தடி நிழலில் அந்த வெயிலிலும் இனிமையாக வீசும் காற்று.. தன்னை மறந்த நிலையில் நின்று கொண்டு இருந்தவனை அழைத்தது அந்த குரல்.

என்ன பலமான சிந்தனையாக இருக்கிறது, பதிலுக்கு இவன் தத்துவமாக மனதில் எழுந்தது. இருந்தாலும் சபையடக்கம் கருதி பதிலுரைத்தான். அவனது மனம் இப்போது இருக்கும் நிலையில் இந்த பேச்சை எல்லாம் கேட்க்கவோ அல்லது சித்தித்து பதிலுரைக்கவோ அவனுக்கு எண்ணம் இல்லைதான் இருந்தாலும் உடன் வேலை பார்ப்பவர், தேவை இல்லாமல் ஏன் வீன் வம்பு என்று அமைதிகாத்தான்.

அவரும் விடுவதாக இல்லை காலையில் படித்த செய்திதாள்களில் இருந்த செய்திகள் முதல் அலுவலகத்தில் உள்ள வதந்திகள் வரை வாய் மூடுவதாகவே இல்லை. ஒவ்வொரு செய்தி சொன்னதும் நீங்க என்ன நினைக்கிறீர்கள் கேள்வி வேறு. எல்லாவற்றையும் பொருமையாக கேட்டுக்கொண்டு இருந்தவன், கவனமில்லாமல் நேரம் போனாலும் அன்புத்தொல்லையில் இருந்து விடைபெற நண்பா பார்ப்போம் விடை பெற்றுக்கொண்டான்.

மனிதன் என்னவாக பேசுகிறார், அதிலும் இந்த பாலம் விவகாரத்தை எடுத்தாலும் எடுத்தார் இந்த காய்சு காய்சுகிறார். எவனாவது மாட்டினால் பிறகு சங்குதான் போல நினைத்துக்கொண்டே மறுபடியும் வேலையில் மூழ்கினான்.

மாலை 6 ஆனதும் மனிதர்கள் சிட்டு குருவியாக பறந்து மறைந்தனர். அனேகமாக கடைசியாக இருந்த ஓரிடண்டு பேரில் இவனும் ஒருவன். வலையிலே மூழ்கி முத்தெடுத்துக்கொண்டு இருந்தான். துப்புரவு தொழிழாலி குப்பைகளை எடுக்க வரும் போதுதான் மணி 7:30யை தாண்டியதை உணர்ந்தான். வண்டி நேராக வீட்டை நோக்கி சென்றது.

செல்லும் வழியில் அடடே விட்டில் சாப்பிட ஒன்றும் இல்லையே ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம், வண்டி திசை மாறியது. எங்கே சென்று என்ன வாங்குவது மறுபடியும் அந்த போராட்டம். அங்கே இங்கே என்று கடைசியாக அங்கு வந்தான். மதியமே சரியான உணவில்லை இப்போதாவது நன்றாக ஒரு வெட்டு வெட்ட வேண்டும் மனகணக்கு.

உள்ளே சென்று வாங்க காத்து இருக்கும் வேளையில் மதியம் பார்த்த அதே அறிமுகம் இல்லாத முகம், பார்த்ததும் பளீர் என்று ஒரு புன்னகை. இவனும் பதிலுக்கு ஒரு புன்னகை. என்ன வாங்கலாம், மறுபடியும் பார்த்ததில் ஒரு வழியாக முடிவுக்கு வந்து வாங்கி திரும்பினான். அடுத்து கடைகாரரின் குரலுக்கு இவன் வாங்கியதே ஒரு குரல் கேட்க்க திரும்பி பார்த்தான். அதே முகம் இவனை திரும்பி பார்க்க மறுபடியும் புன்னகைகள்.

மீண்டும் வீடு நோக்கி பயணம், வண்டியிலோ பழைய தமிழ் பாடல்கள். மறந்து இருந்தவனுக்கு மீண்டும் கவனம் கல்லூரி பக்கம் இழுத்து சென்றது.

முதலாம் ஆண்டு 8 பாடங்கள், பாடம் எடுக்க வந்தோர்கள் எல்லாம் துணை பேராசியர்களும் அனுபவம் மிக்கவர்களும். அதுவும் பொறியில் பாடங்களை எடுத்தவர்கள் இன்னமும் அனுபவம் பெற்றவர்களாக இருந்தார்கள். முதலில் கடுமையாக இருந்தாலும் பிறகு எல்லாமே பழகிபோன விதமாகத்தான் இருந்தது.

மாலையில் விளையாட்டு, பிறகு உணவு, உணவுக்கு பின் நாளை வகுபிற்கான தயாரிப்புகள். அதன் பிறகு தூக்கம் வரும்வரை பின் இரவு அரட்டை கச்சேரிகள் என்று நாட்க்கள் நகர்ந்துகொண்டு இருந்தது.

கல்லூரியை சுற்றிலும் கட்டாந்தரையாக இருந்தாலும், கல்லூரி ஆரம்ப நாட்க்களை போல் அல்லாது மழையும் பின் புதரும்மாக இடம் மாறித்தான் போய் இருந்தது. இரவு நேரங்களில் சன்னல் கதவுகளை திறந்து வைப்பதற்கு இல்லை. என்ன என்ன விதமாக எல்லாம் பூச்சிகள் உண்டோ அத்தனை விதமான பூச்சுகள் எல்லாம் அங்கே தான். வண்டு கடி, தேள்கடி, பாம்பு கடி, இப்படி எல்லாம் அங்கே சாதாரணம்.

விடுதி காப்பாளர்களோ அங்கே அவனுக்கு பாடம் எடுக்கும் விரிவுரையாளர்கள் தான். ஆகவே முதலாம் ஆண்டு முழுதும் எங்கே செய்முறையில் முறைத்துவிடுவார்களோ எல்லோரும் அடக்கம் என்றால் அடக்கம் அப்படி ஒரு அடக்கம் அவர்களை பார்த்தால் மட்டும். இல்லை என்றால் இவர்களது கேலிகளுக்கு ஒரு அளவு இருக்காது தான்...

வண்டி வீட்டின் முகப்பிற்கு வந்தது. உணவுக்கு பிறகு என்ன வண்டியை விட்டு செல்லும் போதே மனதில். ஏதாவது படம் ஏதும் பார்க்கலாமா, இல்லை வேறு எங்காவது சென்று வருவோமா. இல்லை சும்மா வண்டியை எடுத்துக்கொண்டு அப்படியே கோஞ்சம் ஓட்டிவிட்டு வரலாமா...உணவு உள்ளே செல்ல செல்ல மனதும் உடலும் மௌனமானது. கையுக்கும் வாய்க்கும் சிறிது நேரம் கடுமையான சண்டை என்று தான் சொல்ல வேண்டும்.

எதிரே தொலைக்காட்ச்சியில் நாட்டு நடப்பு, பிறகு தொடர்கள் என்று வந்த வண்ணம் இருந்தது. இப்படியே மணி 8ஐ தாண்டி இருக்கும், தொலைபேசியும், கைபேசியும் ஒருங்க இசைத்தது......

தொடரும்....

0 comments: