Thursday, April 28, 2016

ஏன் இப்படி எல்லோரும் செயலலிதாவை கரிச்சு கொட்டுறீங்க - பொறாமை பிடித்தவர்களே

அப்படி என்ன தவறாக நடந்துகொண்டார் இவர், ஏன் இப்படி எல்லோரும் இவரை கரிச்சு கொட்டுறீங்க.

இப்பவும் சரி இதற்கு முன்னவும் சரி பதவியில் வந்து அமர்ந்ததில் இருந்து பதவி விட்டு போகும் வரையிலும் சரி அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார் அதற்காகவா கரிச்சு கொட்டுகிறீர்கள்.

முதல் முதலில் ஆட்சுக்கு வந்த காலகட்டத்தில் தமிழகத்தை எப்படியாவது அரும் பாடுபட்டு சிங்கபூராகியே தீருவது என்று கங்கணம் கட்டிகொண்டு என்ன என்ன வேலைகள் எல்லாம் இருக்கிறதோ அத்தனை துறையிலும் வேலைகள் நடந்தது.

ஆனால் முடிவு என்ன ஆனது அடுத்து வந்த திமுக அரசு, சுடுகாடு முதல் மின் வினியோகம் வரை ஊழல் என்று எத்தனை அமைச்சர்கள் இருந்தார்களோ அத்தனை பேர் மேலும் வழக்குகளை தொடர்ந்து சிறைக்கும் வீட்டிற்கும் என்று அலையவிட்டு வேடிக்கை பார்த்து சிரித்தார்கள். இந்த கொடுமை எல்லாம் பொருத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கிளம்பும் வரையில் ஒருவரும் ஒரு துரும்பை கூட கிள்ள அவர் அனுமதிக்கவில்லை. அது மட்டும் இல்லாது எந்த ஒரு அமைச்சரேனும் செயல்படுவதாக தெரிந்தால் உடனே அவரை மாற்றிவிட்டு விசியமே தெரியாதவர்களாக போட்டால் தான் சும்மா இருப்பார்கள் என்று பார்த்து பார்த்து போட்டதற்கா கரிச்சு கொட்டுகிறீர்கள்.

அதிமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் விமானம் போல் இருக்கைகள் கொண்ட பேருந்துகளை அவரது பெயரிலே இயக்கி அதில் அன்றாடம் சம்சாரம் அது மின்சாரம் படத்தை பார்க்க வைத்து மக்களை மகிழ்வித்தாரே அதற்காகவா கரிச்சு கொட்டுகிறீர்கள். இதில் விசேசம் என்னவென்றால் ஒரு வேளை நீங்கள் போய் சேரும் இடத்திற்கு முன்னாலே அந்த படம் முடிந்துவிட்டால் மறுபடியும் முதல்லில் இருந்து படத்தை போட்டு குடிக்க காப்பியும் கொடுத்துவிட்டு 30ரூபாய் மட்டுமே வாங்கிக்கொள்வார்கள்.

 நீங்களே சொல்லுங்கள் பயணம் செய்வதற்கு அருகதையாகவா தமிழகத்து சாலைகள் இருக்கின்றது. சாதார்ண வேலைக்கு சொல்லும் நீங்களே எவ்வளவு சளித்துகொள்கிறீகள். ஒரு மா நிலத்தையே கட்டி ஆளகூடிய அவர் எப்படி இந்த இத்துபோன சாலைகளில் பயணம் செய்வார் அதனால் தான் வீட்டில் இருந்து கோட்டையை தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் எலிக்காப்டரில் பயணம் செய்தார்.

அது மட்டுமா, நீங்களே நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் இவரது முதலாவது ஆட்சிகாலத்தில் சென்னையிலும் சரி மற்ற இடத்திலும் சரி எத்தனை மணி நேரம் நின்றீர்கள் இவர் சாலையை கடப்பதற்கு. ஆனால் என்றைக்கு எலிக்காப்டரில் பறக்க ஆரம்பித்தாரோ அன்றையில் இருந்து உங்களுக்கு இந்த தொல்லைகள் இல்லை. இப்படி உங்கள் வசதிக்காக அவர் பறந்ததை திமுகவும் சரி இன்ன பிற கட்சிகளும் சரி எப்படி எல்லாம் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். அம்மையார் இந்த ஆட்சியில் கோட்டைக்கு சென்றால் கூட சாலை நெருக்கடி வருகின்றது என்று வீட்டில் இருந்தே வேலைகளை பார்த்து வந்த அவரையா கரிச்சு கொட்டுகிறீர்கள்.

ஏழை எளிய மக்கள் உணவுக்க சிரமப்படுவதை காண சகிக்காமல் முக்கிய கோவில்களில் மதிய உணவை வழங்கி அங்கேயே படுத்து தூங்கவும் ஏற்பாடு செய்ததை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை போலும், இதே கரிசணம் மனிதனோடு நிறுத்தாமல் யானை புலி சிங்கம் முயல்குட்டி என்று புத்துணர்ச்சி முகாம்களை நடத்தி நாட்டுகே நன்மை விளைவிக்கும் அசுவமேத யாகத்தில் இருந்து இன்னும் இருக்கும் அத்தனைகளை செய்து தனக்கும் அதன் மூலமாக தனது நாட்டிற்கும் நன்மை ஏற்படட்டும் என்று கும்பகோணம் முதல் திருவரங்கம் வரை சென்று பூசை புனசுகாரங்களை செய்தாரே அதற்காகவா அவரை கரிச்சு கொட்டுகிறீர்கள்.

 நீங்களே சொல்லுங்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு வருபவன் அவனது பயணத்திற்கு 90களில் வெறும் 60 ரூபாய்க்கு சீட்டு வாங்கினான். ஆனால் இன்றைகு சென்னையில் அடுத்த நிறுத்ததிற்கு செல்வதற்கே 50 ரூபாய் கேட்கிறார்களே. வெறும் 60 பைசாவிற்கு பயணம் செய்த உங்களை 100 அதிகமாக செலவு செய்யும் அளவிற்கு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதற்கா நீங்கள் கட்டயம் கரிச்சு கொட்டனும் தான் போலும்.

திமுக ஆட்சியில் ஊருக்கு ஊர் பேருந்து நிலையம் கூட கிடையாது ஒரு மின்சார கம்பத்தின் நிழலில் மொட்டை வெயிலில் நிற்பார்கள். ஆனால் பாருங்கள் இன்றைக்கு அனேகமாக இந்த தேர்தல் முடிக்கும் முன் அனேகமாக 5 ஊர்களுக்கு ஒரு எலிக்காப்டர் தளம் அமைத்துவிடுவார்கள். நீங்கள் எல்லாம் இனிமே பேருந்துக்கு எல்லாம் காத்து இருக்க வேண்டியது இல்லை ஓலாவில் நுழைந்து எலிக்காப்டர் என்று சொல்லிவிட்டு அந்த தளத்தை அடைவதற்குள் சிவப்பு கம்பளத்துடன் எலிக்காப்டர் தயாராக காத்துக்கொண்டு இருக்க வழி செய்தவரை நீங்கள் கரிச்சு தான் கொட்டனும் கொட்டுங்க.

அன்றைக்கு அண்ணா பல்கலையில் வெறும் 1000 மாணவர்கள் மட்டும் ஆண்டுக்கு படித்து வெளியில் வந்தார்கள் ஆனால் இன்றைக்கு பட்டி தொட்டி எல்லாம் அண்ணா பல்கலை மாணவர்கள் படித்து சுமார் 5 இலட்சம் மாணவர்கள் ஆண்டுக்கு வெளியே வருகிறார்கள். அத்தனையும் அண்ணா பல்கலை மாணவர்கள், நாடு எங்கிலும் இந்த மாணவர்களை எங்கே எங்கே என்று தேடி அலைகிறார்கள். இதே போல் அடுத்த முறை ஆட்சி வந்தால் இனிமேல் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆக்சுபோர்டும் இசுடேன்போர்டும் ஆர்வோடும் தான் இனி பட்டங்களை வழங்கும். எங்கேயும் மாணவர்கள் சென்று படிக்க வேண்டாம், மாறாக எந்த பல்கலையில் பட்டம் வேண்டும் என்று சொல்லிவிட்டு சும்ம கொஞ்சோண்டு சொற்ப்பம் ஒரு 20 இலட்ச பணத்தை கொடுத்துவிட்டு வந்தால் போதும் பட்டம் 4 ஆண்டுகளில் வீடு தேடி வர ஏற்பாடு செய்யப்போகிறார் அதற்காக நீங்கள் இவர்களை கரிச்சு கொட்டத்தான் வேண்டும்.

சமுதாயத்தில் குப்பனும் சுப்பனும் ஒரே கல்வியை சமச்சீர் கல்வியாக பயின்றால் சுப்பனுடைய மரியாதை என்ன ஆவது எப்படி அவனுடைய பணபலத்தையும் சாதி பெருமையையும் காட்டுவது அதனால் அவர் அவரால் எவ்வளவு செலவு செய்ய சக்தியுள்ளதோ அந்த அளவுற்கு செலவு செய்து படிக்க வைக்க ஏற்பாடு செய்தவர் அம்மையார் அதற்காக நீங்கள் கட்டாயம் இவரை கரிச்சு கொட்டத்தான் வேண்டும்.

விலைவாசி ஏறிப்போச்சு என்று மூச்சுக்கு 300 முறை சொல்கிறீகளே அதற்காகவே அம்மா நிறுவனம் என்று ஒன்றை தொடங்கி உலகில் மகாமட்டமான விலையில் போதை பொருட்களை தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்து அம்மா தாயே கொடு என்று கேட்க வைத்தற்கு நீங்கள் கரித்து தான் கொட்டனும் நன்றி கெட்டவர்களே.

வங்காள விரிகுடாவில் சுப்பிரமணி சாமியின் மேற்பார்வையில் இராமர் பாலம், அத்வானியின் தலைமையில் இராமர் கோவில், மதமாற்ற தடுப்பு சட்டம், ஆடு கோழிகளை வெட்டி கொலை செய்ய தடை என்று எண்ணற்ற சமூக புரட்சிகளை செய்து காட்டிய வீராங்கனையை  நீங்க கரிச்சு தான் கொட்டனும்.

அமெரிக்காவில் மக்கள் தினம் தோரும் தேனீர் அருந்துவது போல் மது குடிப்பார்கள் அது போல் தமிழகம் அமெரிக்கா போல் ஆகவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்கள் சிரமப்படாமல் குடிக்க தெருக்கு இரண்டோ அல்லது மூன்றோ குடி மையங்களை அமைத்து கொடுத்தால் சரக்கு பத்தவே மாட்டேங்குது என்று புலம்பினார்கள். இவர்கள் புலம்பல் பொருக்கமாட்டாது தாயுள்ளத்துடன் தானே தனது தோழியின் பெயரில் தரமான நல்ல மதுவை தாயாரித்து தமிழகத்தை அமெரிக்க தரத்திற்கு உயர்த்தியதை பார்த்து அமெரிக்காவே அம்மையாருக்கு தங்க தாரகை விருதை வெகுவிமர்சியாக வழங்கது. அதை இந்த பொறாமை பிடித்த கூட்டம் கூச்சல் போட்டு கத்துவதை எல்லாம் கேட்டுவிட்டு அம்மாவை தவறாக பேசவும் கரிச்சு கொட்டுகிறீர்களே மக்களே நீங்கள் எல்லாம் நல்ல இருப்பீங்களா.

இந்தியா ஒரு திமிர் பிடித்த ஆணாதிக நாடு அந்த நாட்டில் இவரின் கட்சியினரும் சரி மற்ற தலைவராக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் பொதுமக்கள் பார்க்க அம்மையாரின் காலில் விழுந்து வணங்கி எழாமல் அப்படியே தூங்கி போனது எல்லாம் வரலாறு. சிங்கப்பூர் முதல் அமெரிக்கா வரை இந்த பெண்விடுதலை செயல்களை பற்றி போற்றி எழுதாத பத்திரிக்கைகளும் இல்லை செய்தி ஊடகங்களும் இல்லை. இப்படி பெண்களின் கௌரவத்தை போற்றி பாதுகாத்து வளர்த்தவை நீங்கள் கரித்து தான் கொட்டனுமா திமிர் பிடித்த ஆண் சமூகமே......

இப்படி எல்லாம் சிறப்பாக ஆட்சி புரிந்தவரை பொறாமை தாங்காமல் பெங்களூரு சிறையில் அடைத்து தனது மன புளுக்கத்தை தீர்த்துக்கொண்டது அவரது அரசியல் எதிரிகள். அந்த நிலையில் அமைதியாக தமிழகத்தில் மக்களின் முதல்வராக இவர் ஆட்சி புரிந்து வந்த திறமை யாருக்காவது வருமா. என்ன அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு இப்போது மாஃபா பாண்டியராசனும் பன்னீரும் தங்களை உயர்த்திக்கொள்ள பார்த்த துரோக செயலை பார்த்தும் தாயுள்ளத்துடன் அதை மன்னித்து தனக்கு அடுத்து மாஃபா பாண்டியராசன் தான் அதிமுகாவின் அடுத்த வாரிசு என்று எல்லா பேட்டிகளிலும் அவரை பேசவைத்து மக்களின் நம்பிக்கையை பெற வைத்தற்கு நீங்கள் கரிச்சு கொட்ட வேண்டியது தான்.

இந்த டாசுமார்க்கு மட்டும் இன்றைக்கு இல்லை என்றால் மேடை தோரும் விசையகாந்து  தள்ளாடும் அந்த கண்கொள்ளா காட்சி எல்லாம் நீங்கள் பார்த்து மகிழ்ந்து இருக்கமுடியுமா என்ன நெஞ்சுல கை வைத்து சொல்லுங்கள் பார்க்கலாம்........

அப்போது எல்லாம் தீபாவளிக்கும் பொங்களுக்கும் மட்டும் தான் கரிசோறு கிடைக்கும் ஆனால் பாருங்கள் இன்றைக்கு அம்மா செல்லும் இடம் எல்லாம் பிரியாணியும் இன்ன பிறவும் எந்த செலவும் இன்றி கிடைக்கிறது அம்மாவின் கூட்டங்களில். அந்த கூட்டங்களில் வந்த சிலர் வாழ்க்கையில் முதல் முறையாக பிரியாணியை சுவைத்த அதிர்ச்சியில் இறந்தே போனார்களே அதற்காக கட்டயம் கரிச்சு கொட்டுங்கள் நீங்கள்..........

இப்படி இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் படிப்பவர்களுக்கு இதுக்கு மேலும் தெரியும் என்று இவைகளுடன் நிறுத்திக்கொள்கின்றேன். பொறாமை பிடித்த உடகங்களே நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் கதரினாலும் இந்தியாவின் அடுத்த பிரதமர் மட்டும் இல்லை நிரந்தர பிரதமரும் அம்மா தான். நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள் இந்த தேர்தலில் என்ன நடக்கிறது என்று.

3 comments:

')) said...

இந்த...நொம்மா..இனியாவது கோடா நாட்டிலோ...அல்லது அவரின் அடிமை அமைச்சர்கள் வாங்கிபோட்டுள்ள குளு குளு தீவுகளிலோ... நிரந்தர ஓய்வு எடுத்தால்... ஒரு தெரு நாய்கூட கரிச்சு கொட்டாது நண்பரே.........

')) said...

ஆனால் எல்லோரும் கங்கணம் கட்டிக் கரிந்து கொட்டி , அந்த அம்மாவை இலகுவாக ஆட்சியில் அமர்த்திவிடுவார்கள் போலுள்ளது.

')) said...

இந்தியா ஒரு ஆணாதிக்க நாடு . முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தை ஒரு தடவை நினைத்துப்பாருங்கள் . அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் முகமும் வடுக்களும் எதனால் ஏற்பட்டது ஆணாதிக்கத்தினாலா ?
இது ஒரு சிறு உதாரணம் மட்டும்தான் . இப்படி நிறைய இருக்கிறது.