Tuesday, April 26, 2016

இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா போண்டியாவது உறுதி, 2,20,000 கோடி - மோடி வித்தை

தமிழ் இந்துவில் வெளியாகி இருக்கும் மோடியின் 2,20,000 கோடி ஊழல் அம்பலம்

மோடி முதல்வராக இந்த போது முதல் 2016 வரை தொடரும் ஊழல் இது. இந்த கட்டுரையாளர் சொல்வதை பார்த்தால் நீதிமன்றம் சொன்றால் அடுத்து மோடிக்கு திகார்தான் போலும். ஆனால் பாருங்கள் இது வரையில் இப்படி ஒரு 2,20,000 கோடி ஊழல் நடந்துக்கொண்டு இருக்கிறது என்று ஒருவரும் எழுதவும் இல்லை பேசவும் இல்லை.

பேசாம கொமாரசாமி பணி ஓய்வு பெறாமலே இருந்து இருக்கலாம், அவருக்கு நிறைய வழக்கும் மேற்படி பணமும் கிடைச்சு இருக்கும் வட போச்சே கொமாரசாமி.

என்ரான் நிறுவனத்தில் இப்படி ஒரு ஊழலுக்கு தயாராக இருந்தது ஆனால் அன்றைய காங்கிரசு அரசு உங்க மின்சாரமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று விரட்டியது. அவர்களின் ஆட்சியில் குறை சொல்லி தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்றம் என்று அலங்கார வார்த்தைகளாக பேசி கொண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இல்ல ஒன்று ஒன்றா வெளியே வருகிறது.

இன்னும் என்ன என்ன இருக்கோ...........

அந்த கட்டுரையின் முக்கிய பகுதில் கொஞ்சம் இங்கே

"கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதி நிலவாயு உற்பத்திப் பணிக்காக ரூ.19,700 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அப்படியே நிலவாயு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதை நஷ்டத்துக்குத்தான் விற்றிருக்க முடியும். காரணம், அதை வெளியே எடுப்பதற்கு ஆகும் செலவைவிட மிகக் குறைந்த விலையில்தான் சர்வதேசச் சந்தையில் நிலவாயு கிடைத்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி விலையைவிட விற்பனை விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் தயாரிப்பை மேற்கொள்வதைவிட சும்மா இருக்கலாம் என்பதை பணமும் வர்த்தகமும் தன் ரத்தத்தில் ஊறியவை என்று அறிவித்துக்கொண்ட தலைவரும் உண்மையிலேயே அறிந்திருப்பார்."

0 comments: