Friday, March 18, 2016

உடுமலை சம்பவம் பார்த்தபோது ஏனோ இது நினைவுக்கு வந்தது

நாங்கள் எல்லாம் பள்ளியில் படிக்கும் போது எங்களுக்கு எல்லாம் இப்படி தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

இது மட்டும் இல்லாது தினம் தோரும் காலையில் இப்படி ஒரு உறுதிமொழியும் எடுத்துக்கொள்வோம்.

இந்தியா எனது நாடு !  இந்தியர் அனைவரும் என்  உடன் பிறந்தவர்கள்!
நாட்டின் உரிமை வாழ்வையும் , ஒருமைப் பாட்டையும்  பேணிக் காத்து  வலுப்படுத்த செயற்படுவேன் என்று உளமார  நான்   உறுதி  கூறுகிறேன்.  ஒரு போதும் வன்முறையை நாடேன் என்றும் , சமயம் மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் பொருளாதார குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும் நான் மேலும் உறுதி அளிக்கிறேன்.

இப்போது எல்லாம் இப்படி சொல்லிக்கொடுப்பது இல்லை போலும், காலம் மாறியதால் கல்வியும் மாறியது போலும்.

தொகாவில் இராமதாசும் காடுவெட்டி குரு பேசுவது போல் தான் இப்போது பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள் போலும், இதை தான் அன்புமணி இளைஞர்கள் பெரிதும் விரும்புவது பாமக என்று மேடைதோரும் பேசுகிறார் போலும்.