Friday, May 24, 2013

பரதேசி - விமர்சனம்

விமர்சனம் பிடித்த பிடிக்காத செய்திகளை பகிர்ந்துக்கொள்ள மட்டுமே, மற்றபடி படைப்பாளியை இகழ்ந்து போசும் நோக்கோடு அல்ல. படைப்புகளை படைக்க திறமை அவசியம் அது அனைவருக்கும் கைவந்த கலையல்ல.

படம் துவங்கிய காட்சியில் இருந்து கடைசிவரை என்ன நடக்குமோ என்று தவிக்க வைப்பதில் பாலா என்றைக்குமே ஏமாற்றியவர் அல்ல என்று மீண்டும் நிறுபித்து இருக்கிறார்.

இனி தேனீர் அருந்தும் போது எல்லாம் அந்த காட்சிகள் மனதுக்குள் வந்து போவதை தவிர்கமுடியாமல் போகும்.

சூது வாது தெரியாதவர் பாதிக்கப்படும் போது தான் அந்த பாதிப்பின் வீரியம் நன்றாக விளங்குகிறது. அதுவும் வரியோரை ஏய்த்து பிழைப்பு நடத்தும் நம்மோரை திரையில் பார்க்கும் போது மிகவும் கேவலமாக தோன்றுகிறது.

அவன் இவன் படம் இப்படி வந்திருக்க வேண்டிய படம் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், மூலைக்கு மூலை அன்னிய மூதலீட்டில் தொழில்கள் வந்தாலும் எளியோரின் வாழ்க்கையில் மாற்றமே இல்லையே என்ற கருத்து நன்றாக விதைக்கப்பட்டிருக்கும் பரதேசி போல். ஏனோ தவற விட்டுவிட்டார் பாலா.

துவக்க காட்சியில் துவங்கி கடைசி காட்சி வரை அதர்வாவின் பங்களிப்பு அபாரம். முகத்தில் அப்படி ஒரு அப்பாவி தனம், அவர் அப்பாவை போல. முரளியின் போக்கிற்கு இவரையும் வைத்து சொல்லாத காதல் கதைகள் வராமல் இருந்தால் சரி தான்.

படத்தில் அதர்வா படும் வேதணைகளின் உக்கிரம் படம் பார்பவர்கள் நெஞ்சை பிசையாமல் இல்லை. குறிப்பாக சாப்பிட உட்கார்ந்தவனை விரட்டும் காட்சி கொடுமை.

படம் தேயிலை தோட்டத்தை தொடும் வரையில் அந்த வறுமையிலும் வசந்தம் வீசியதாக தோன்றவைகிறது.

சாப்பாட்டுகே இல்லை என்றாலும் நிம்மதியாக இருந்ததாய் காட்டும் கதையமைப்பு அருமை.

தேயிலை தோட்டத்தில் நிகழும் கொடுமைகள் தோட்டத்தில் இருந்து இன்றைய வேலை பார்க்கும் இடங்கள் வரை தொடர்வது கொடுமையே. குறிப்பாக வெளி நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு தெரியும் என்ன சொல்ல வருகிறேன் என்று.

சார்லி சாப்ளினின் மார்டன் டைம்சு படத்தில் காட்டுவது போல் வெளியே ரொட்டிக்கே திண்டாட்டம் அதிலே கொடுக்கிற காசுக்கு எப்படி எப்படி எல்லாம் வேலை செய்ய சொல்கிறார்களோ அப்படி எல்லாம் வேலை செய்ய வேண்டும் என்ற கொடுமை. அதுவும் ஓய்வறையில் இரண்டு நிமிடம் நிற்கிறான் என்று பார்த்து விரட்டும் காட்சிகளை போல் மிகவும் எதார்த்தமான காட்சிகள் தேயிலை தோட்ட காட்சிகள்.

என்ன தேயிலை தோட்டத்தில் காட்டும் பெண்ணின் பாத்திரம் இன்னமும் மனதில் அழகாக பதியும் படி படைத்து இருக்கலாம். சீறும் பாம்பாக அவளை காட்டியதோடு நிப்பாடியது ஏமாற்றமாக அமைந்தது.

முதலாளிகளின் கொடுமை ஒரு புரம் என்றால் குட்டி முதலாளிகளின் கொடுமை அதைவிட கொடுமையாக இருக்கும் என்றதை அருமையாக காட்டியுள்ளார்.

காமம், கூலி கொள்ளை, இயந்தரம் போல் வேலை வாங்குதல், அடி பணியாதவர்களை முடமாக்கி அடுத்தவர்களுக்கு பாடம் புகட்டுதல் என்று ஏகப்பட்ட வன் கொடுமைகளை படத்தின் பின் பாதியில் அள்ளி கொட்டிவிடுகிறார் பாலா. முதல் பாதியில் பார்த்தவைகளை இவைகள் மறக்க அடித்துவிடும் நொடியில் படம் முடிகின்றது.

இதை விட சிறந்த முடிவு படத்திற்கு வேறு எதுவுமாக இருக்கமுடியாது. எதற்காக இவ்வளவு கொடுமைகளையும் அனுபவிக்கிறானோ அதுவே வீணாகி போனால் எப்படி இருக்கும் முடிவு என்ற வேதணையை அழகாக காட்சியாக்கி கொடுத்திருக்கிறார்.

கருத்தபையா பாடல் அருமையாக பொருந்துகிறது மற்றபடி இராசா இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டார் பாலா. குறிப்பாக சோகம் கொட்டும் இடங்களில் சத்தமே இல்லாமல் மழை பொழிவது போல் ஒரு உணர்வு வருகிறது. பல இடங்களில் பின்னணி இசை வெறும் சத்தமாக மட்டும் வந்து போகிறது. பிரகாசு பாட்டோடு முடிந்துவிடுவது இல்லை வேலை என்று என்றைக்கு தான் உணர்வாரோ........

வாழ்த்துகள் பாலா படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது.

0 comments: