Wednesday, October 24, 2012

பாவம் அமெரிக்கா யார் கையில் மாட்டி சின்னா பின்னமாக போகிறதோ....

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் விவாதித்துக்கொண்டதில் ஒன்று உறுதியாக தெரிகின்றது.

சென்ற முறை மொக்கைனை பலியாடாக அனுப்பியது போல் இந்த முறை இராம்னியை அனுப்பி இருக்கிறார்கள்.

சென்ற முறை மொக்கைனை பலியாடாக அனுப்பியது போல் இந்த முறை இராம்னியை அனுப்பி இருக்கிறார்கள்.

நமது ஊரில் வேடிக்கைக்காக சொல்வது போல் தேர்வுக்கு பசு மாட்டின் கட்டுரையை மனப்பாடம் செய்துகொண்டு போனவனை தெண்ணை மரத்தை பற்றி எழுத சொன்னதற்கு, பசு மாட்டை பற்றி முழுவது எழுதிவிட்டு அந்த மாட்டை இந்த தெண்ணை மரத்தில் தான் கட்டுவார்கள் என்று எழுதியது போல் இருந்தது இரம்னியின் பேச்சு.

இதிலே கேள்விகளை மட்டும் தொடுத்துவிட்டு பதிலிக்கு இது என்ன அது என்ன தெரியுமா என்று ஒபாமா கேட்டல் என்னை தாக்குவதில் எந்த பயனும் இல்லை என்று புலம்பியதையும் பார்க்க முடிந்தது.

 இன்றைய அமெரிக்க பொருளாதாரம் தடுமாறம் கொள்ள காரணமே முதலாளிகள் கொள்ளை இலாபத்தை மனதில் கொண்டு சேவைகளை அயலகத்திற்கு அனுப்பிவிட்டு, உள்ளூரில் வேலையும் இல்லை, செலவு செய்ய காசும் இல்லை.

கிளாடியேட்டர் படத்தின் இறுதி சண்டைக்கு முன்பு அந்த பொடியன் நாயகனின் கையை குத்தி அசைக்க முடியாதபடி ஆக்கிவிட்டு, மக்களின் முன் ஒரே வீச்சில் அவனை கொன்று காட்ட நினைப்பான். ஆனால் நடந்ததோ வேறு, வலது கை இல்லை என்றாலும் ஒரு வீரன் வெற்றி கொள்வான் என்று காட்டி செல்லும் அந்த பாத்திரம்.

அது போல, நாட்டையே பிச்சை பாத்திரம் ஏந்த வைத்துவிட்டு. மக்களை ஏமாற்றியது போதாது என்று ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுக்கும் மருத்துவ உதவிகளிலும் பங்கு வேண்டும் என்று மனதாற சொல்லும் முதலாளிகளின் வார்த்தைகளில் என்ன நீதியை எதிபார்க்க முடியும்.

இந்த 4 ஆண்டுகளில் பாக்கிட்தானம் ஆட்டம் போடாமல் அமைதியாக இருப்பதற்கு காரணம், அவர்களின் திரை மறைவு வேலைகளை கண்டித்து, அவர்களது அணு ஆயுதங்களின் வெடிப்பான்களை இசுரேலும் அமெரிக்க கடற்படையும் பிடுங்கி வைத்துள்ளதை திருப்பி கொடுக்க சொல்கிறார் போலும்.

பேச்சின் துவக்கத்தில் ஆசிரியர்களை தேவை இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டு, பிறகு கடைசியில் ஆசிரியர்களை எனக்கும் பிடிக்கும் என்று சொன்ன அந்த நயவஞ்சக வார்த்தைகளை மக்கள் எப்படி விட்டு கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

 நாளைய சமுதாயத்தை அறிவுள்ள சமூகமாக படைக்க வேண்டும், அது தான் அமெரிக்காவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல போகிறது என்று சொன்னால், படிப்பு எல்லாம் மக்களுக்கு தேவை இல்லை, அதை விடுத்து இராணுவத்திற்கு இன்னமும் நிறைய ஆட்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

வேலை பார்க்க தெரியவில்லை, குறைந்த அளவிற்கு பேச தெரிந்த ஆளாவது பார்த்து முதலாளி கட்சி அனுப்பி இருக்கலாம். பாவம் இராம்னி அடுத்த சார பாலின் ஆகப்போகிறார்.

5 comments:

')) said...

இன்னும் பல நாடுகளின் செல்வத்தை பிடுங்கி கொண்டு வந்து சேர்க்க ராணுவ பலம் வேண்டும் அதற்க்காக தான் அப்படி அந்த மூடன் சொல்லிருக்கிறார்.

')) said...

Are you a democrat?

Did you notice Romney's words that he has balanced budgets for MA but Obama is yet to balance a budget???

On external affairs though, Barack was phenomenal.

The debate was sort of tied in my opinion

')) said...

Are you a democrat?

Did you notice Romney's words that he has balanced budgets for MA but Obama is yet to balance a budget???

On external affairs though, Barack was phenomenal.

The debate was sort of tied in my opinion

')) said...

நேர்கோடு உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

பணபற்றாகுறையை எப்படி சரி செய்வீர் என்று கேட்டதிற்கு பதிலே காணோம், இராம்னியும் சரி அவரது இளங்காளை துணை அதிபரும் சரி, 1 + 2 + 2 =8 என்று காட்டியதை சுட்டிக்காட்டி நிழகச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே, பிறகு எப்படி வரவு செலவை அவர் சரி செய்வார் என்று நீங்கள் நினைகிறீர்கள் என்று தெரிய இல்லை.

மேலும் இராணுவமே கேட்காத அந்த செலவை ஏன் செய்யவேண்டும் என்று கேட்டதற்கும் இராம்னி என்னை தாக்கி எந்த பலனும் இல்லை என்று தானே சொன்னார் இல்லை இராணுவ தளபாடம் விற்கும் நிறுவனம் படுத்துவிட்டது. அவர்களின் குண்டுகள் இன்னமும் இரண்டு வருடங்களுக்குள் வெடிக்கவில்லை என்றால் பிறகு கடலில் தான் தூக்கி எறிய வேண்டும் ஆகையால் அவைகளை வாங்கிக்க அந்த நிறுவனங்கள் எங்களை பணிக்கிறது என்றா சொன்னார். எப்படி சொல்வார் பாவம், எதை கேட்டாலும் நீங்கள் இராணுவ நிதியில் இருந்து பணத்தை கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள், வேலை வாய்புகள் இல்லை, மக்கள் உணவும் பணமும் இன்றி தவிக்கிறார்கள் என்று பாடிய பல்லவியே படுகிறாரே தவிர, நாங்கள் தான் இவைகள் எல்லாவற்றிர்கும் காரணம் என்று சொன்னாரா என்ன.

இந்த நிலையை சொல்ல நான் ஒபாமாவின் கட்சியில் இருந்துக்கொண்டு தான் சொல்லனும் என்று இல்லை. முன்னமே குறிப்பிட்டதை போல, இராம்னிக்கு தான் அதிபர் ஆவோம் என்ற நம்பிக்கை அடிப்படையில் இல்லை. மேலும் பேசும் போது கொஞ்சம் கூட மக்கள் நலனை மனதில் வைத்து பேச மறுக்கிறார். சென்ற தேர்தலில் மெக்கைன் செய்ததை போல. முதல் விவாதத்தில் ஒபாமாவை பார்க்ககூட மறுத்தவர் பின்னாளில் நண்பரே நண்பரே என்று வரிக்கு வரி சொல்ல வேண்டிய நிலைக்கு உட்படுத்தியது நினைவில் இருக்கலாம். அதைப்போல் வேலை இல்லைன்ன என்னக்கு என்ன, சம்பளம் வாங்கும் மக்கள் அவதிபடுகிறார்கள் எனக்கு என்ன, உணவு வாங்க முடியவில்லை என்னக்கு என்ன, மருத்துவ செலவு அதிகமாயிடுச்சி எனக்கு என்ன, இவ்வளவுக்கும் எனக்கு என்ன.

ஆனால் வருடத்திற்கு ஒரு மில்லியன் இடாலர் வருமானம் வருபவர்கள் வரியே கட்டக்கூடாது, ஆனால் ஒரு மணிக்கு 8 இடாலர் வாங்கும் மக்கள் இன்னமும் அதிகமாக வரிகட்டவேண்டும் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஒப்பிபதை எப்படி மக்களால் பேற்றபடுகிறது என்று தான் விளங்க இல்லை.

நல்லவேளை சாப்பிட இரொட்டி இல்லை என்றால் கேக்கு சாப்பிடுங்களேன் என்று வெளிப்படையாக சொல்லவில்லை அவ்வளவு தான். சொன்னாலும் சொல்வார்கள் இவர்கள், ஏன்னா இராம்னிக்கு தான் எந்த கவலையும் இல்லையே. அவருக்கு இந்த செலவுகளை எல்லாம் வேறு யோரோ அல்லவா செய்கிறார்கள். அவராக சம்பாதித்து செலவு செய்ய சொல்லுங்கள் தெரியும் பிறகு.

')) said...

நண்பர் சையத்து அப்படி இல்லை தளபாடங்கள் காலாவது ஆகுவதற்குள் அரசு அவைகளை வாங்கி வெடிக்க வேண்டும் என்று நிறுவனங்கள் முனைகின்றது அவ்வளவு தான்.