Friday, March 5, 2010

நித்தியானந்தரும் காஞ்சி சங்கரும் என்ன வித்தியாசம் சொல்வாரா இவர்

சமீபத்தில் இப்படி ஒரு பதிவு, பெரியாரும் நித்தியாவும் என்று, அதற்கு அண்ணாதுறை வேறு துணைக்கு.

என்ன மனிதன் பந்தை தன் பக்கத்திலேயே உருட்டுகிறார் என்று பார்த்தால் தான் தெரிந்தது மனிதன் உருண்டையை உருட்டுகிறார் என்று. சிறுவர்களுக்கு அம்மா உணவு ஊட்டும் போது என்ன ஊட்டுகிறோம் என்று தெரியாமல் இருக்க ஒரு சுவரசியமான கதையை சொல்வார். அப்படி சொல்லும் போது உருட்டும் உருண்டையில் என்ன இருக்கிறது என்ற கவனமே இல்லாது குழந்தைகளை சாப்பிட வைப்பாள். இவரும் இப்படி ஒரு உத்தியை தான் கையாளுகிறார்.

இவர் ஒப்பிடுவதை இப்படி வைத்துக்கொள்ளலாம், சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதும், சச்சினையும் உடாசுமார்க்கில் 200 அடித்துவிட்டு மயங்கி கிடக்கும் குடி காரரையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது இவரது ஒப்பீடு.

நித்தியா தனக்கு பிடித்த பெண்ணுடன் காஞ்சி சங்கரன் உல்லாசமாக பல பெண்களுடன் இருந்தத்தை போல் இருந்தார். தன்னிடம் பக்திக்காகவும், வருமையின் வாடலிலும் வந்த வறியவர்களை இன்னமும் தெளிவாக சொன்னால் நாதியற்றவர்களை காஞ்சி சங்கரன் மயக்கியும் பயமுறுத்தியும் தனது ஆசைகளை தீர்த்துக்கொண்டார் என்று ஒப்பிட்டால் கூட பரவாயில்லையே சரியாகத்தான் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் என்று எடுதுக்கொள்ளாம்.

ஆனால் பெரியாரின் திருமணம் செய்துகொள்வதும் காஞ்சி சங்கரன் சாமியார் என்று சொல்லிக்கொண்டு பக்தைகளை மயக்கி பயமுறுத்தி வாழ்கையை சீர் அழித்ததும் ஒன்று என்று சொன்னால் உங்களை என்ன என்று நினைப்பது.

இதிலே ஒரு சாமியார் சொன்னார், நான் சொல்வது உனக்கு பிடித்து இருந்தால் அதை மட்டும் பார் என்னை ஏன் பார்கிறார் என்று கேட்டாராம் அதுவும் சரிதான் என்று இவர் சொல்கிறார்.

அது தான் வருடத்திற்கு 100 படங்கள் வருகிறதே அவர்கள் சொல்லாததையா இந்த சாமியார்கள் எல்லாம் சொல்லிவிடப்போகிறார்கள். பிறகு எதற்கு இவர்கள் எல்லாம் எடைக்கு எடை தங்கம் வெள்ளி என்றும் பெறுகிறார்கள். அந்த நடிகர்களுக்கும் இந்த நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல வந்தீர்கள் போலும்.

இந்த மாதிரி இடை தரகர்களைவிட அந்த சாமியிடமே கேட்டுவிடலாம் அதுவே சாலச்சிறந்தது என்ற சப்பைகட்டுவேறு. உண்மையிலே அந்த சாமியும் சக்தியும் இருக்கிறது என்றால் சங்கர் இராமன் கொலை கோவிலில் நடந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னமும் காஞ்சி சங்கரன் நன்றாகத்தானே இருக்கிறார். 61 நாட்கள் சிறையில் இப்போது வெளியில் இருக்கும் பிணைகைதி அவர். இது எல்லாம் நடப்பதால் என்ன அவருக்கு இருக்கும் மதிப்பு மறைந்து விட்டதா என்ன.

சச்சின் அடித்த 200ம் உடாசுமார்க்கில் குடி மகன் அடித்த 200ம் ஒன்று என்று சொல்கிறீர்கள். இந்த வகை ஒப்பீட்டை இதுவரையில் பார்த்தது இல்லை. அனேகமாக ஒருவரும் பார்த்து இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.

வம்படியாக எழுதினாலும் கூட இப்படி எல்லாம் யாராவது எழுதுவர்களா. அதிலே திராவிட இயக்க தலைவர்களின் இரண்டாவது மனைவி துணைவி பற்றி எல்லாம் புள்ளியில் விபரங்கள் வேறு. கொஞ்சம் விட்டால் இந்திரன் எந்த எந்த முனிவர்கள் வீட்டில் இல்லாத சமயம் சென்று எப்படி எல்லாம் உல்லாசமாகவும் நயவஞ்சகமாகவும் தேவ உலகத்தில் இருந்தான் என்ற கணக்குகள் எல்லாம் கொடுப்பீர்கள் போலும் 200க்கு 200.

இன்னமும் இது போல் ஆனாவுக்கு ஆனா, கானாவுக்க கானா என்று வரிசைபடுத்தி எழுதவும் ஆவலுடன் எதிர்பார்கிறோம், உங்களின் 200க்கு 200 அறிவு எப்படி எல்லாம் நீளுகிறது என்று பார்ப்போம்.

7 comments:

')) said...

அவரு ஞாயமா காஞ்சியையும் நித்யாவையும் தான் ஒப்பிட்டு இருக்கனும், அவர்கள் தான் பிரம்மசாரிகள் என்று கூறிக் கொண்டு காமலீலை புரிந்தார்கள். பெரியார் நினைத்திருந்தால் திருமணம் செய்யாமல் வெளி உலகுக்கு தெரியாமல் கூட மணியம்மையுடன் இருந்திருக்க முடியும். சமூக வழக்கங்களை, திருமண நம்பிக்கைகளை அவர் கெடுக்க விரும்பவில்லை

')) said...

அனானி நண்பரே எதற்கு இவ்வளவு கோபம், நான் என்ன கேட்கிறேன் நீங்கள் என்ன பேசுகிறீர்கள். கேள்விக்கு பதில் சொல்லுங்கள், சச்சின் 200 அடித்ததை போல எவ்வளவு சிறப்பாக என்ன அழகாக இந்த உடாசுமார்க்கில் எவ்வளவு அருமையாக நிதானமாக கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் 200 அழக்காக அடித்து இருக்கிறார் இந்த குடிமகன். அந்த குடியில் எனக்கு விருப்பம் இல்லை தேவையும் இல்லை என்றாலும் அந்த 200 அடிப்பதை பார்க்கும் போது சச்சினிடம் பார்த்த ஒரு கம்பீரம், தெளிவு, வீரம் இந்த குடிமகனின் 200 அடிக்கும் செய்கையில் பார்க்கிறேன் என்று எழுதியது சரியா என்று தான் கேட்டேன். சரி அல்லது இல்லை என்று எழுதுங்கள் அதைவிடுத்து என் மீது பாய்வது ஏனோ. அதுவும் கெட்டவார்த்தை வேறு, அனேகமாக நண்பர் பாலாவாக இருக்கும் என்று நினைகின்றேன். இவ்வளவு வீரம் பேசும் நீங்கள் உங்களது பெயரையாவது சொல்லி இருக்கலாம்........

')) said...

கோவி மேலே சொன்ன பதில் உங்களுக்கு என்று யாரும் எட்டுகட்டி விடப்போகிறார்கள், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

சோ வின் குஞ்சு சோ மாதிரியே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு அரிப்பைச் சொரிந்து கொண்டுள்ளது.

பெரியார் அவருடைய சொத்துக்களுக்கும்,அறக்கட்டளைக்கும் நம்பத் தகுந்த ஆளைத் தேடினார்.அவர் கூட இருந்த பலர் குழியைத் தோண்டி விட்டனர்.
மோசமான இந்து லா படி ஒருவர் ஒரு பெண்ணை தத்தெடுத்துத் தன் சொத்துக்களைத் தர முடியாது.
பெரியார் நேராக இந்த முண்டம் போன்றதுகளுக்குச் சொன்னார்.
உடலுறவுக்கு என்றால் அதற்குத் திருமணம் என்று ஒன்று வேண்டியதில்லை என்று.

காஞ்சி சுப்புணியுடன் ஒப்பிட்டிருந்தால் நியாமும் நேர்மையும் இருந்திருக்கும்.அதை முழுப் பூசணிக்காய் போல் மறைத்துவிட்டு தனது அற்பத்தனத்தை காட்டி அசிங்கப் பதிவைப் போட்டு அரிப்பை சொரிந்து கொண்டுள்ளது.

')) said...

அனானி, அவர் எப்படி எழுதாவர் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பசு தோல் போற்திய புலியாக சர்கரையும் நெய்யும் தடவிய அந்த நச்சு வார்த்தைகளை எடுத்து சொல்லவே எழுதினேன் வறு ஒன்றும் இல்லை.

இந்த பதிவை எழுதியதில் இருந்து ஒரு அனானி நண்பர் தான் படித்த ஆங்கிலத்தில் எவ்வளவு கேவலமாக என்னை திட்டமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதிக்கொண்டு வருகிறார், என்ன சொல்ல....

')) said...

இவனுங்க புத்தியே இப்படித்தான், ஒன்னும் செய்ய முடியாது. விடயத்தை திசை திருப்பியே
வாழ்க்கையை ஓட்டிடுவான்கள்

')) said...

டோண்டுவுக்கு நான் இட்ட பின்னூட்டம்:

நாப்பது வருஷம் முன்னாடி செத்துப் போன பெரியாரைப் பத்தி நெனைக்கும் போதெல்லாம், நேத்துப் பொறந்த பாப்பானுக்குக் கூட ஒரு நடுக்கம் வருது பாருங்க, அதுக்குப் பேருதான் சிம்ம சொப்பனம். கெட்ட கனவு கண்டு கண் முழிச்சா செல பேரு தண்ணி குடிச்சிட்டுப் படுப்பாங்க, இன்னும் செல பேரு தலைமாட்டுல செருப்பு தொடப்பம் இதெல்லாம் வச்சுக்குவாங்க, நெத்தீல சாம்பல அள்ளிப் பூசிக்குவாங்க. இப்படி எதையாவது செஞ்சா அந்த பயம் போயிடும்னு அவுங்களா ஒரு மூட நம்பிக்கை வச்சிருக்காங்க.

இந்த மாதிரி ஒரு வேலைதான் நித்திப் பயலையும் பெரியாரையும் ஒப்பிடுறது. நித்திப் பய கிட்டயும் பார்ப்பணியம் இருக்குடான்னா, அவந்தான் பாப்பான் கிடையாதே, இங்கே எதுக்கு பார்ப்பணியத்தக் கொண்டு வற்றேங்கறான். இதக் கேட்ட ஒடனேதான் நித்திய ஏண்டா பெரியாரோட ஒப்பிடுறாங்கறது புரியுது.

இருள்நீக்கி அலையஸ் ஜெயந்திரன் கூட ஒரு சின்ன வயசு டிவி தொகுப்பாளியோட சல்லாபிச்சதா ஊரெல்லாம் நாறுச்சு. ஆனா அவனை பெரியாரோட ஒப்பிடல, ஏன்னா அவன் பாப்பான். கோயில் கருவரையிலேயே கில்மா வேலை பாத்த தேவநாதனையும் பெரியாரோட ஒப்பிடல, ஏன்னா அவனும் பாப்பான். அதனால தான், பெரியார்ங்கற சிங்கத்த சொப்பனத்தில கண்டுட்டு, இது மாதிரி, தண்ணி குடிக்கிற, சாம்பல் பூசிக்கிற, தலைமாட்டுல செருப்பு வைச்சுக்குற முட்டாள் வேலையெல்லாம் செய்யிறானுங்க.
March 11, 2010 10:58 AM
dondu(#11168674346665545885) said...

@பரிதிநிலவன்
நீங்கள் சொல்வது போலவே 40 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவரது பேச்சுக்கள் அவை இன்னும் தற்காலத்துக்கும் பொருந்துகிறதா என்றுகூட பார்க்காமல் வாந்தி எடுப்பவரின் பேசாகத்தான் நீங்கள் கூறுவது எனக்கு படுகிறது.
.