விதாவ வந்ததில் இருந்து வெளியான விமர்சனங்களில் எல்லாம் படத்தை ஆகா ஓகோ என்று வந்தது படத்தின் மேல் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகமாக்கியது. சரி படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் படம் 2004ல் வெளிவந்த The Girl Next Door இந்த ஆங்கிலப்படம் தான் தமிழில் விதாவயாக கௌதம் எடுத்துள்ளார்.
இதில் கௌதமின் எழுத்தையும், திரைகதையையும், காதலை படமாக்கும் விதத்தையும் மக்கள் ஓகோ என்று விவரித்தி எழுதியிருப்பதை பார்த்தால் நகைப்பாக தான் இருக்கிறது.
விதாவவில் வரும் இளமை குரும்புகளும், காதலும் ஆங்கிலத்தில் மிகவும் அழகாக எடுத்திருப்பார்கள்.
ஆங்கிலத்தில் கதை இது தான், பள்ளிப்படிப்பு முடிக்கும் நிலையில் இருக்கும் இளைஞனின் வீட்டிற்கு பக்கத்துவீட்டிற்கு ஒரு யுவதி வருகிறாள்.
வந்த முதல் நாளே, இரவில் அவளை வீட்டு வாசலில் நாயகன் பார்க்கிறான். பார்த்த முதல் பார்வையிலேயே பார்த்ததும் விடலையின் மனதில் அவளின் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளை அடுத்து எப்போது எப்படி காண்போம் என்று அவனது மனதில் ஒரு பதற்றம் வர, வீட்டின் மாடியில் பார்க்க கூடாத கோலதில் அவளை பார்க்கிறான் அந்த விடலை.
அந்த மோதலுக்கு பிறகு அவளுக்கும் இவனுக்கும் நட்பு பிறக்கிறது, மிக விரைவில் அந்த நட்பு விடலையின் ஆசையை தூண்டி அவனது துடிப்பை இரசிக்கும் விதமாக உருவெடுக்கவும் துவங்க. அந்த பெண் யார் என்ன என்று அவனது நண்பர்கள் கண்டு பிடிக்கிறார்கள்.
அவளை பற்றி தெரிந்ததும் அவளை தனியறைக்கு அழைக்க அந்த அழகு பதுமை அந்த விடலையின் அப்பாவி தனத்தை இரசித்ததும், அந்த மாதிரி அவளை யாரும் விரும்ப மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருந்த வேளையில் இவனை கண்டதையும், அந்த நாட்களை வாழ்க்கையில் அவளது பொன்னான நாட்களாக நினைத்ததையும் சொல்லி கோபப்பட, விடலையின் மனதில் காதல் வலுக்கிறது.
அது வரையில் எளிமையாக இருந்த அவள் அவனுக்கு திடீர் என புரியாத புதிராக மாற்றம் கொள்கிறாள். என்ன ஏது என்று தெரிந்து கொள்ளும் வேளையில் அவளது வீட்டில் இருந்து பாபு ஆன்டனியின் உருவத்தில் ஒருவன் அவளது விட்டில் இருக்கிறான். அவனுக்கும் அவளுக்கும் அதிக நாள் தொடர்பு அப்படி இப்படி என்று காட்சிகள் நகர.
திடீர் என்று ஒரு வாரத்திற்கு அவள் வேகாசுக்கு செல்கிறாள். அவளை பார்க்காமல் இருக்க முடியாமல் தனது நண்பர்களுடன் இரவோடு இரவாக வேகாசு போகிறார்கள். அங்கே எங்கே என்று தெரியாமல் அங்கே இங்கே என்று தேடி ஒரு வழியாக கண்டு பிடிக்கிறார்கள். அங்கே அவளோ அவனை பார்க்காமலும், பேசாமலும் விட்டது மட்டும் இல்லாது. அவளை மறந்து விடும் படியும் அவள் சொல்ல, அந்த உயரமான மனிதன் விடலையை பார்த்து இனிமேல் அவளை பாத்த அப்படி இப்படி என்று மிரட்ட. அங்கு இருந்து கிளம்புகிறான் விடலை.
இனிமேல் விடலையின் ஊருக்கு அவள் வருவது இல்லை என்று இருந்தவள் திடீர் என்று வருகிறாள். வந்தவள் அவனுக்காகவும் அவளின் காதலுக்காவும் தான் வந்தாக சொல்கிறாள்.
அந்த வேளையில் அந்த உயர்ந்த மனிதன் அடைந்த பண இழப்பை விடலை தான் ஈடுகட்ட வேண்டும் என்று மிரட்ட. விடலையும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கிறார்கள். அந்த படம் ஓகோ என்று விற்று பெரும் பொருளை விடலைக்கு பெற்றுக்கொடுக்கிறது.
படத்தின் துவக்கத்தில் விடலை ஆசைபடுவது போல் சியார்சி நகர் பல்கலைகழத்தில் அரசியல் படிக்க தனது சொந்த செலவில் சேர்கிறான். விரையில் அமெரிக்காவின் அதிபராக வருவது தான் அவனது கனவு, அது விரைவில் நடக்கும் என்று முடிக்கும் வேளையில் அவளும் அவனுடன் தான் இருக்கிறார்ள் என்று அழகாக முடித்து இருப்பார்கள் ஆங்கிலத்தில்.
ஆங்கிலப்பத்திற்கும் விதாவவிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவு தான்
1) ஆங்கிலத்தில் அந்த அழகு பெண் 5 அல்லது 6 வயது பெரியவள். தமிழில் 1 வருடம் பெரியவள்.
2) ஆங்கிலத்தில் அவள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவள், தமிழிலோ MCA வரை படித்து இருக்கிறாள்.
3) ஆங்கிலத்தில் விடலை பள்ளிப்படிப்பை முடிக்கிறான், தமிழில் பட்டப்படிப்பை முடித்து வேலை தேடுகிறான்.
4) ஆங்கிலத்தில் அவள் ஒரு வாரத்திற்கு வேகசு செல்கிறாள், தமிழில் கேரளம் செல்கிறாள். கேரளத்தில் அவளது சொந்தக்காரர்களை எல்லாம் பார்க்கிறான் விடலை. ஆங்கிலத்தில் அவளது தொழிலை சேர்ந்தவர்களையும் அவளது தொழிலையும் நேரில் பார்க்கிறான் அந்த விடலை.
5) ஆங்கிலத்திலும் தமிழிலும் இருவரும் படம் எடுகிறார்கள், என்ன ஆங்கிலத்தில் விடலை தயாரிப்பாளன், தமிழில் இயக்குனர்.
6) ஆங்கிலத்திலும் தமிழிலும் அவளுக்குள் இயல்பாக வரும் காதலை சொல்ல தயக்கம் கொள்கிறார்கள், ஆங்கிலத்தில் அவளது தொழில் அப்படி, அதை அவளால் சொல்லவே முடியாது. ஆனால் தமிழில் மதம் என்ற பாகுபாடும் அதை வைத்துக்கொண்டு என்னதான் அவர்கள் சப்பைகட்டு கட்டினாலும் மனிதில் ஒட்டவில்லை.
7) ஆங்கிலத்தில் விடலைக்கு அமெரிக்க அதிபராகுவது கனவு, தமிழில் திரைபட இயக்குனர் ஆவது கனவு. இரண்டிலும் இருவரும் அவரவரது கனவு கைகூடுகிறது. இருவரும் படம் எடுக்கிறார்கள்.
இப்படி ஆங்கில திரைப்படத்தின் திரைக்கதையை எப்படி எல்லாம் தமிழில் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் ஆங்கிலத்தில் வரும் காதல் வசனங்களையும் கூடவா அப்படியே அடிப்பது. அதிலும் அரசியலில் வந்தாலும் வரலாம் ஆனால் படம் எடுப்பது எல்லாம் அவ்வளவு எளிதில் முடியாது என்ற வசனம் வேறு.
ஆங்கிலத்தில் வரும் அந்த இயக்குனரின் வேடத்தில் இரவிக்குமார் தமிழில். அவன் சொல்லும் பளீர் வசனங்கள் தமிழில் இல்லை.
ஆங்கிலத்தில் நவனாகரீக ஊடையில் வருகிறாள் அவள், தமிழில் திரிசாவிற்கு புடவை அதுவும் கிருத்துவர்கள் புடவை கட்டிக்கொண்டு அதுவும் இந்த காலத்தில் இப்படி என்று காட்டுவது நல்ல நகைச்சுவை. நல்ல காலத்திலேயே திரிசாவிற்கு புடைவைக்கும் தொடர்பே இருக்காது வித்தியாசம் காட்டியே ஆகவேண்டும் என்று புடவையை கொடுத்துள்ளார்கள் போலும்.
ஆங்கிலத்தில் படம் 1 1/2 மணி நேரம் மட்டும் தான். மிச்சம் இருக்கும் 1 1/2 மணி நேரத்திற்கு பாட்டு சண்டை படபிடிப்பு என்று வந்தாலும் திரைக்கதையில் தோய்வு இருக்கிறது. அது அசல் படத்தின் திரைக்கதை முடிந்து இவரது சொந்த கற்பனைகள் சேர்க்கும் இடத்தில் இது தெரிகிறது.
கிளிக்கு(CLICK) படத்திற்கு(வாரணமாயிரம்) பிறகு இவர் அடித்தி இருக்கும் ஆலிவுட்டு படம் தி கிர்ள்ளு நெக்சுட்டுடோர்(The Girl Next Door) விதாவயாக. எனது கணிப்பு சரியாக இருந்தால் கௌதம் அடுத்து எடுக்கும் படம் Forgetting Sarah Marshall ஆக இருக்கும். அந்த படம் கொஞ்சம் வக்கிரமாக எடுத்து இருந்தாலும் நல்ல கதையம்சம் வாய்ந்தது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளிவந்ததிருந்தாலும், ஆலிவுட் பாணில் கமல் போன்று வயதான வரை வைத்து படமாக எடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.