கால ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வருவதும், அந்த கொள்கை மாற்றங்கள் கட்சியின் அடிப்படை கொள்கைகளை பாதிக்கா வண்ணமாக இருப்பதும் திமுக இது வரையில் கடைபிடித்து வந்த பழக்கம். ஆனால் அண்மை காலமாக ஈழம் தொடர்பாக தனது கொள்கைகளில் திமுக திணறி வருவதை அனைவரும் பார்த்துவருகிறோம்.
ஈழத்திற்கு சாதகமான ஒரு கொள்கை முடிவை திமுக எடுத்தால், தீவிரவாதத்தையும் பிரிவிணைவாதத்தையும் அரசே செய்கிறது என்று சொல்லி ஆட்சியை கலைக்கும் வேலைகளில் முழுவீச்சில் எதிர்கட்சிகள் இறங்கும். அதற்கு பக்கபலமாக நீதித்துறையும், உளவு நிறுவனங்களும் கட்டாயம் செயல்படும். இதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி. என்ன தான் நீதியும் அவசியமும் இருப்பினும் இந்த ஒரு காரணத்தை காட்டி திமுகவை தூக்கி எறிய அனைவரும் துடிப்பது தெரியாமல் இல்லை.
இதை உணர்ந்த திமுக தனது கொள்கைகளையும் செயல்களையும் கவனமாக எடுத்து வைக்கிறது. வேலை சுலபமாக முடிந்துவிட்டது என்று தான் இருந்து இருக்கும் கலைஞர் "ஆட்சியை துறக்கவும் தயார்" என்று சொன்னபோது. ஆனால் அந்த கண்ணியில் திமுக சிக்காமல் தப்பித்ததை பொறுக்கமுடியாத மக்கள் தற்பொழுது திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தமிழைபற்றியும், தமிழர்களை பற்றியும் எந்த ஒரு கவலையும் இல்லாத இவர்கள் திமுகவை தமிழ் தமிழ் என்று பேசிய கட்சி எங்கே என்றும் கேட்கிறார்கள். இவர்களுக்கு தமிழர்கள் மேல் கவலையோ அக்கறையோ இல்லை. ஆனால் திமுக எதுவும் செய்யமுடிய வில்லையே என்று கேலிபேச இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. நமக்கு தெரிந்த வகையில் சொல்வதென்றால் ஆடு நனையுதேன்னு ஓணாய் அழுகுதாம் என்று சொல்வார்களே அது போல.
ஆட்சியை துறப்பேன் என்று நாடகம் ஆடினார் பாருங்கள். மத்தியிலும் மா நிலத்திலும் நாங்கள் இருந்தால் தான் நல்லது என்று சொன்னார்களே இப்போ என்ன சொல்கிறார்கள். உண்மை தமிழன் யார் என்று இப்போது தெரிகிறதா. பதவி வெறிபிடித்தவர் கலைஞர், தனது பதவிக்காக தமிழர்களை சாகவிட்டு வேடிக்கைபார்க்கிறார் பாருங்கள். தனது குடும்பத்துகாக என்று இருந்திருந்தால் இன்னேரன் என்ன எல்லாம் செய்து இருப்பார், ஆனால் ஈழத்திற்கு என்றதும் வாயை திறக்க மாட்டேன் என்கிறார் பாருங்கள்.
சீமான் பேசினார், கைது செய். அமீர் பேசினார், கைது செய். கொளத்தூர் மணி பேசினார், கைது செய். திருமாவளவன் பேசினார் ஏன் இதுவரை கைது செய்யவில்லை. முதல்வரை வைத்தே அவரது அறிக்கையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதும் எழுதுவதும் செயல்படுவதும் தவறு என்று சொல்ல வைப்பது. இன்னமும் எப்படி எல்லாம் சிக்கல்களை உருவாக்கமுடியுமோ அவ்வளவு சிக்கல்களை உருவாக்கி வைப்பது இவர்களது தற்பொழுதைய தலையான வேலையாக இருக்கிறது.
இங்கே நாம் ஒன்றை கவனமாக பார்க்கவேண்டும். எது ஒன்று நடந்தாலும் திமுக வீட்டுக்கு அனுப்பபடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தவிர வேறு ஒன்றும் இவர்கள் கேட்பது இல்லை.
மின்சார தட்டுப்பாடு, ஆட்சியை கலையுங்கள். தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்சியை கலையுங்கள். மழை அதிகமாக பொழிகிறது, ஆட்சியை கலையுங்கள். மழை நீர் வடியவில்லை, ஆட்சியை கலையுங்கள். கலவரம் வெடிக்கிறது, ஆட்சியை கலையுங்கள், காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. எதிர்கட்சிகள் வன்முறையில் ஈடுபடமுடியவில்லை, காவல்துறை முதல்வரி ஏவல் துறையாக செயல்படுகிறது ஆட்சியை கலையுங்கள். விலைவாசி உயர்ந்துவிட்டது, ஆட்சியை கலையுங்கள்..........
இந்த நீண்ட பட்டியலில் இன்னமும் ஒன்றே ஒன்று தான் பாக்கி, எனக்கு பசி எடுக்கிறது அதற்கு காரணம் திமுக அரசுதான் உடனே அரசை கலைக்கவேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் பாக்கி. அதை தவிற எத்தணை கீழ்த்தரமான கோரிக்கைகளை வைக்கமுடியுமோ அத்தணையையும் வைத்தாகிவிட்டது.
இந்த கோர கரளோபகரத்தின் மத்தியில் திடீர் என்று திருமங்கலம் தேர்தல். அதுவும் எப்படி திமுக மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டது. மக்கள் திமுக அரசை தூக்கி எறிய நினைக்க துவங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக திருமங்கலத்தில் திமுக தோற்கும் பாருங்கள் என்ற முகவுரையுடன் தொடங்கப்பட்டது.
எத்தணை விதமான கீழ்தரமான செய்கைகளை செய்ததோ சென்னை மாநகராட்சி தேர்தலில், அதையும் விட பலமடங்கு அதிகமான கீழ்தரமான செயலில் இந்த கூட்டம் துவக்கத்திலேயே இறங்கியதை பார்க்க முடிந்தது.
அந்த தேர்தல் வரும் வரையில் எங்கே இருந்தார் என்றே யாருக்கும் தெரியாமல் வனவாசம் செய்தவர். மீளா தூக்கத்தில் இருந்து மீண்டவர் போல் தனது பழைய கீரல் விழுந்த இசை தட்டை எடுத்துக்கொண்டு மேடைகள் ஏறினார். அந்த கட்சியினர் பாவம் மறுபடியும் எல்லா இடங்களிலிம் கீழே விழுந்து உருண்டு உருண்டு தரையை சுத்தம் செய்ய தொடங்கினார்கள்.
இந்த தேர்தலின் மூலமாக திமுகவிற்கு ஒரு இரகசிய பொறி வைக்கப்படது. அந்த பொறியில் திமுக சிக்கும் அப்படி சிக்குங்கால் அதையே காரணமாக காட்டி அரசை கலைத்துவிட வேண்டும் என்று மீண்டு அந்த கூட்டம் காத்துகிடந்தது தான் மிச்சம். அந்த பொறியில் சிக்கிய ஒரு சிலவற்றை வைத்துக்கொண்டு நீதிமன்ற படிகள் ஏற அந்த கூட்டம் சொல்வதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக செயல்பட வைத்துவிட்டோம் திமுகவை, மக்களும் குழம்பியுள்ளனர். இந்த வேளையில் இந்த தேர்தலில் ஒரு வெற்றியை பெற்றுவிட்டால், மக்கள் திமுகவை தூக்கி எறிய நினைத்துவிட்டாகள் என்ற மாயையை பரப்பிவிடலாம் என்ற பொறிதான் அந்த பொறி. அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மண்விழும் என்று அந்த கூட்டம் நினைத்து இருக்காது தான்.
இல்லை என்றால் எந்த தைரியத்தில் 20 கோடிக்கு மேல் பணத்தை தண்ணியாக அள்ளி அந்த ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் கொட்டி தீர்த்து இருக்கும். அவ்வளவு பணமும், ஆள்பலமும், கூட்டணி தலைவர்கள் என்று ஒரு பெரிய பெருங்கூட்டமாக சென்று முட்டி மோதி பார்த்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியுள்ளது அந்த கூட்டம்.
இந்த தேர்தல் அந்த கூட்டதின் சதிவேலை சரியாக வேலை செய்கிறதா என்று பார்ப்பத்ற்கான ஒரு சோதனை களம். அந்த களத்தில் அவர்களது கணிப்பு சரியாக வரும் என்ற அதிதீர நம்பிக்கையில் மிகவும் அதிதீரமாகவே தனது வார்த்தைகளினாலேயே தனது சதிவேலைகளை வெளியிட்டிருக்கிறது அந்த கூட்டம்.
இதை புரிந்துகொள்ளாத வலைஞர்களும் சரி, மற்றவர்களும் சரி திமுகவையும் கலைஞரையும் வசை பாடுவதும் அறிகை விடுவதுமாக இருக்கிறார்கள். அதோடு மட்டும் நில்லாமல் சவாலும் கூட விடுகிறார்கள். அந்த கூட்டத்தின் பொறியில் திமுக சிக்கவில்லை என்றாலும், இந்த வலைஞர்களும் மற்றவர்களும் சிக்கியது அந்த கூட்டத்திற்கு பாதி வெற்றியே.
இந்த வலைஞர்களை போல் பொதுமக்களையும் சிந்திக்க வைப்பதில் கட்டாயம் அவர்கள் வெற்றி கொள்வார்கள் என்றே தெரிகிறது.
முன்னே போனால் கடி, பின்னே போனல் உதை என்ற பிழைப்பாக தான் உள்ளது திமுகவின் நிலை இப்பொழுது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்கிறது திமுக என்று பார்ப்போம். என்ன வைகையான கையாளுகையுடன் திமுக தலைமை வருகிறது என்று பார்ப்போம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நிச்சயம் இது குழந்தைக்கு கூட தெளிவாக தெரிந்த ஒன்று.
என்ன இந்த பசப்பு சதிவேலைகள் சரியாக செயலாக்கவில்லை என்று பழைபடி தமிழகத்திலே அங்காங்கே குண்டுகளை வெடிக்க வைத்துவிடக்கூடாது என்று தான் பயமாக இருக்கிறது. அந்த கூட்டம் திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற தமிழகத்தையே கூட கொளுத்தி அழிக்ககூட தயங்காத கூட்டம் அது தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. எத்தகைய சதிவேலை எல்லம் நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
சிலிர்த்து கொண்டு புலி பாய்ச்சலில் சென்று இந்தவிதமான சதிகளை வென்று வெற்றி வாகை சூடுகிறதா. அல்லது இந்த அறிவு கெட்ட கூட்டத்திற்காக பட்டது எல்லாம் போதும் என்று ஒதுங்கிக்கொள்கிறதா திமுக என்று பார்ப்போம். எப்படி பார்த்தாலும் திமுகவிற்கு வரபோகின்ற நாடாளுமன்ற தேர்தலும் அதற்கு பிறகு வரும் சட்டமன்ற தேர்தல்களும் மிக மிக சோதைனையாக காலங்களே. என்ன தீர்வு திட்டங்களுடன் செயலாக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
8 comments:
கள்ள ஓட்டுப் புகழ் கருணாநிதி கட்சி 100கோடிக்கும் மேல் செலவு செய்து வாங்கிய வெற்றிதானே?
சன் டிவியால் ரௌடி என்று அழைக்கப்பட்ட அழகிரி,மற்றும் போலீஸ்,திமுக குண்டர்களால்
பெறப்பட்ட வெற்றிதானே?
பாடையில் போகும்வரைக்கும் பதவியில் இருக்க நினைக்கும் கருணாநிதி மோசடியால் பெறப்பட்ட வெற்றிதானே?
வாருங்கள் அறிவுள்ளவன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. விளக்கமாக சொல்வீர்களா. நரேசுகுப்தா தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடந்தாக அல்லவா சொன்னார். நீங்கள் அவரின் வாக்குமூலம் தவறு என்று அல்லவா சொல்கிறீர்கள்.
அந்த கூட்டத்தில் யாருக்கும் பதவி ஆசையே இல்லை போலும். எல்லோரும் மக்கள் சேவை ஒன்றே எங்களுக்கு வேண்டும் என்று சொல்லி போன 5 ஆண்டு காலத்தில் சாராயம் மட்டுமே விற்றார்கள் போதும். இந்த அம்மா காச்சுவார், அந்த அம்மா வித்து கொடுப்பார். பாவம் இவர்களுக்கு பதவி ஆசையும் இல்லை, பண ஆசையும் இல்லை.
மக்களின் சோகம் போக்க மட்டுமே தான் இவர்கள் இந்த சாராய சாம்ராசியத்தை 5 ஆண்டு நடத்தினார்கள் என்று சொல்ல வருகிறீர்களா அறிவுள்ளவன். விளக்கவும்....
your article is good but i think your belongs to d.m.k.am i correct?
வேலவன் வருகைக்கு நன்றி, பதிவில் திமுகவின் சாயல் தெரிகிறதா என்று சொல்லுங்கள். நடப்பது என்ன என்று சொன்னேன் அவ்வளவு தான்.
வெகு தெளிவாக அரசியல் சூழ்நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.கலைஞர் மேற்கொண்டுள்ள இத்தனை நடவடிக்கைகளையும் குறை சொல்லும் இந்த உலகம் ஜெயலலிதாவின் பேச்சுக்கு பதில் பேச முடியாமல் நிற்கிறது. வாய்ச்சொல் வீரன் நெடுமாறன் எங்கே என்று தெரியவில்லை. கம்யுனிஸ்ட்கள் நிலை அந்தோ பரிதாபம்.நான் மிகவும் எதிர் பார்த்த திமுக ஆதரவு வலைபதிர்வகள் ஏனோ அமைதி காக்கும் வேளையில் மிக துணிச்சலான உங்கள் பதிவு மனதிற்கு ஆறுதலை தருகிறது
பிரபுசங்கர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குறைகூறுபர்கள் அனைவருமே ஆடு நனையுதேன்னு ஓணாய் அழுகுதேன்னு சொல்வார்களே அந்த இரகம். அவர்களது நோக்கம் ஆடை அடித்து புசிப்பது தான். அதை வார்த்தைகளில் நெய்யும் தேனும் தடவி பேசி, மக்களை பலி கொடுப்பார்கள். அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.
கலைஞரின் எதிரிகள்:
ஆட்சியைக்கலை என்பதையேப் பாடி ஆட முடியாத காலத்திலேயும் ஆடும் பேய்.பணத்திற்காகவும்,பதவிக்காகவும்,
தனிப்பட்ட முறையிலே கலைஞரைப்
பிடிக்க வில்லை என்ற கூட்டம் அவரிடம் அடிமைகள்.
பார்ப்பனப் பத்திரிக்கை பலத்தைச் சென்ற மக்கள் மன்றத்தேர்தலிலே காகிதப் பொம்மை என்று உணர்ந்தும்
மாமா வேலைகளைச் செய்து குழப்பும்
பார்ப்பனப் பத்திரிக்கையாளர்கள்.
ஈழப் பிரச்சினையைத் தனது பழி வாங்கும் ஒரே நோக்கத்துடன் பார்க்கும் காங்கிரசு அம்மையார்,அவருக்குக் காவடி தூக்கும் மானங்கெட்டக் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும்
தி.மு.க. பதவிப் பிரியர்கள்.
இத்தனையும் தாண்டி,அய்யங்கார்
தேர்தல் ஆணையத்தின் வக்கிரமங்களையும் தாண்டி தி.மு.க.
இவ்வளவு வெற்றி பெற்றது அவர்களே
எதிர் பார்க்காத ஒன்று.
காங்கிரசைத் தமிழ் நாட்டில் ஒரேயடியாகச் சமாதி கட்டி விட்டுத்
தமிழின உணர்வாளர்களுடன் பாராளுமன்ற,மாநிலச் சட்ட மன்றத் தேர்தலையும் சந்திப்பதுதான் தி.மு.க
விற்கு நல்லது.
அவர்களின் ஆதரவு இல்லாமல் புதுடில்லியில் யாரும் வந்துவிட முடியாது.
கலைஞருக்கு வேண்டியது துணிவு.
வாங்க அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment