
இது வரையில் ஆதரவாகவும் ஒரு பெரிய இலக்கை நோக்கி அரவணைபோடு பயணித்து வந்த பாமக இப்போது ஆட்டம் கண்டு தான் இருக்கிறது. இல்லை என்றால் இந்த ஒரு நிகழ்வுக்காக தினமும் அறிக்கை விடுவார் ஏன், அதுவும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று ஏன் இத்தனை அறிக்கைகள் விட வேண்டும்.
தினமணியில் சொல்வதை போல் அதிர்ச்சி கொடுத்தே பழக்கப்பட்டவருக்கு இப்போது இந்த அதிர்ச்சி வைதியம் கொஞ்சம் குழம்பிப்போய் தான் இருப்பார். இருந்தாலும், என்னவோ விடையை கண்டு பிடித்துவிட்டது போல் ஒரு மணிக்கு ஒரு அறிக்கையாக விடுகிறார் பாவம்.
அதுவும் காடுவெட்டி குரு சொன்னது ஒன்றும் தவறில்லை என்று சொல்லும் போதே தெரிகிறதே இராமதாசுக்கு கட்சிக்குள் என்ன மதிப்பு என்று. என்ன ஆனாலும் தனது மகனது பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று எவ்வளவோ கவனமாக இருந்தும், இவரது பேச்சை காவெ குரு கேட்டகவில்லை போலும். சரி என்ன செய்வது என்று நடப்பதை பார்த்து வியந்து போய் நிற்கிறார் போலும்.
2011ல் பாமக ஆட்சி, அதுவும் ஊழலோ குழப்பமோ இல்லாத ஆட்சி என்றும். மக்களின் சேவைக்காக மட்டுமே இருக்கும் அந்த ஆட்சி என்றும். எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசி, மனதிலும் அந்த எண்ணம் எப்படியும் நிறைவேறும் என்ற ஆசையிலும் திளைத்து இருந்த நேரத்தில் கூட்டணி இல்லை என்று சொன்னால் அவர் கொஞ்சம் ஆடித்தான் போய் இருப்பார்.
மக்கள் குடிப்பார்கள், குடிப்பது அவர்களது உரிமை. ஆனால் அவர்கள் குடிக்க யாரும் சாராயம் விற்கக்கூடாது, அதிலும் அரசாங்கமாக இருந்தால் கூடவே கூடாது என்ற சொன்னார். இதில் உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இப்படி ஒரு வாதம் அது தான் அவரது அரசியல் பாங்கு, இப்படி தான் அரசின் எல்லா செயல்களையும் தமிழன் எக்சுபிரசு அளவிற்கு உளரி கொட்டினார். அப்படி கொட்டும் போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போது திடீர் என்று வெளியே போகச்சொன்னால் பிறகு ஒரு மணிக்கு ஒரு அறிக்கை வராது.
இதே அணியில் பொதுவுடமையினர் இருக்கிறார்கள், அவர்களது விமர்சனம் எவ்வளவோ பரவாயில்லை. பொருப்புடனும் கருத்துக்களை எடுத்து வைப்பதிலும், விமர்சங்களை எதிர்கொள்வதையும் அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது இவருக்கு.
இனிமேல் என்ன தான் செய்வார் அவர், வேறு என்ன எந்த கூட்டணியில் அழைகிறார்களோ அவர்களது கூட்டணிக்கு செல்வது. அங்கே சென்ற கையோடு அதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து 35, 45 இல்லை சுழி என்று மதிபெண் இட்டு தேர்ச்சி அறிக்கை சான்றிதழ்களை வழங்குவார். அதிலும் நேரிலே அவர்களிடம் சொன்னால் தனக்கு விளம்பரம் கிடைக்காது என்று ஒரு நிருபர் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் நையான்டி பேசுவார்.
அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் கூட அவரை பார்த்து இவர்களுக்கு இவ்வளவு மதிப்பெண் என்று கொடுக்கிறீர்களே, இத்தணை ஆண்டுகள் அரசியலில் இருந்து வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று கோட்டைகளாக அறிவித்துக்கொண்டு இருக்கிறீர்களே, இருந்தும் வெறும் 18 இடங்களை மட்டும் தான் உங்களால் பெற முடிந்ததா. எங்கே அந்த கோட்டைகள் எல்லாம் எங்கே ஐயா என்று ஒருவரும் கேட்க்க மாட்டார்களே. அப்படி கேட்டால், குருவின் பார்வையில் இருந்து தான் தப்பித்து வீடு செல்வார்களா.
இராமதாசு ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அப்படியே அமெரிக்க புச்சு மற்றும் இதர அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பெண் கொடுத்து விட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். செய்வீர்களா......

