Tuesday, August 5, 2008

தசாவதாரம் ஆங்கில படம் CHILL FACTOR படத்தின் மொழி பெயர்ப்பு





இந்த படம் வந்ததில் இருந்து பலதரபட்ட விமர்சனங்கள் வந்துவிட்டதால் விளக்கமாக ஒரு விமர்சனங்களை வைக்கப்போவது இல்லை.

ஆங்கிலப்படத்தின் கதை இது தான், படம் துவங்கும்போது கடலில் இருந்து ஊருக்குள் காட்சி பாயும் தசாவதாரத்தில் துவங்குவது போல. அது ஒரு தனித்தீவு அங்கே இராணுவத்தின் தேவைக்காக நவீன ஆயுதங்களை பரிசோதிக்கும் களம். அங்கே புதிதாக தயாரிக்கப்பட்ட வைரசு குண்டை வெடித்து சேதாரமும் வீரியமும் எவ்வளவு என்று பார்க்கும் பயிற்சியை மேற்கொள்ளுகிறது ஒரு இராணுவ படையணி ஆய்வாளர்களுடன் இணைத்து.


அந்த ஆய்வை துவக்கிய பிறகு தான் குண்டின் வீரியம் இவர்கள் எதிர் பார்த்ததைவிட மிகவும் அதிகமான அளவில் இருக்கும் என்று கணித்து, சோதனையை நிறுத்தும் தருனத்தில் எல்லம் முடிந்து விடுகின்றது. அங்கே இருந்த இராணுவ படையணி முழுவதும் இறக்கின்றார்கள். அந்த படையின் தளபதியை இதற்காக 10 ஆண்டுகள் இராணுவ சிறையில் அடைக்கிறது அரசு.

10 ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு வெளிவந்த அந்த தளபதி, ஆய்வாளர்களின் கணிப்பு பிழைக்கு எனக்கு 10 அண்டு சிறையா என்று அரசை பழிவாங்கும் செயலாக, தனது பழைய சாக்களோடு சென்று அந்த வைரசு குண்டை கைபற்றி தீவிரவாத நாடுகளுக்கு விற்று பழிதீர்த்துகொள்ள் செல்கிறார். அப்படி செய்யப்போவதாக முன்கூட்டியே அந்த ஆராச்சியாளரைசந்தித்து சூளுரைத்தும் அவர் அரசாங்கத்திற்கு சொல்லாமல் விட்டது ஏனோ என்று அந்த ஆங்கில படத்தில் விளக்கம் இல்லை.

பின்பு வைரசு குண்டு கொள்ளையில் குண்டடி பட்ட ஆராச்சியாளர் தன்னுடன் வழக்கமாக மீன் பிடிக்கும் இளைஞனிடம் சென்று அந்த வைரசு உள்ள பெட்டகத்தை கொடுத்துவிட்டு அடுத்த மானிலத்தில் உள்ள இராணுவ ஆராச்சியக்கத்தில் சேர்த்துவிடவும் என்று சொல்லி இறக்கிறார். குறுப்பாக இந்த பெட்டகம் 50 பாரன் வெப்பத்து வந்துவிட்டல் இறுகிய நிலையில் இருக்கும் வைரசுகள் வெளியேறி எல்லோரையும் கொன்றுவிடும். ஆகவே கவனமாக கையாளவும் என்று அறிவுறுத்தி சொல்வார்.


இதைத்தான் தசாவதாரத்தில் கமலகாசன் மூச்சிக்கு முன்ணூறு தடவை அந்த வைலை திறக்க கூடாது, அது வெப்பமாக கூடாது என்று படம் முழுக்க சொல்லிக்கொண்டே வருவார். ஒரு கட்டத்தில் இந்த ஆங்கில படத்தில் வெப்பமானியை கொண்டு வெப்பம் பார்த்து இன்னமும் கொஞ்சம் பனிக்கட்டிகள் வேண்டும் என்று சொல்வதை அப்படியே ஆற்று மணலில் புதைத்துவிட்டு கடைக்கு சென்று பனிகட்டிகளை வாங்கிவருவதாக படமாக்கி இருப்பார்கள் தமிழில்.


பிறகு இந்த வைரசு பெட்டகத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞன் கிளம்பும் தருவாயில், அந்த தளபதியும் அவனது சகாக்களும் அந்த கடைவரையில் வந்து சோதனையிட்டு செல்லும் போது அங்கே ஒரு ஐசு கிரீம் விற்கும் வண்டி வருகிறது. அந்த வண்டியை ஓட்டிவரும் கருப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த வண்டியை கடத்தி வந்து இருப்பார். அவரும் இந்த மீன் பிடியாளரும் சேர்ந்து வைரசு பெட்டகத்துடன் அந்த வண்டியில் சத்தம் இல்லாமல் தப்பிப்பார்கள்.


இவர்கள் தப்பிப்பதை தெரிந்துகொண்ட தளபதி அந்த ஓட்ட வண்டியை 4 நவீன இரக வண்டிகள் கொண்டும் சென்று பிடிக்க முடியாமல் பின்னாலே துரத்திகொண்டு ஓடுவார். அந்த தளபதியுடன் மல்லிகா சராவத்து போல் ஒருவரும் வருவார், தசாவதாரத்தில் தேவையே இல்லாமல் மல்லிகா இடம் பெறுவது இப்படிதான்.


தசவாதாரத்தில் கமலும் அசினும் சேர்ந்து தப்பித்து ஓடும் காட்சிகள் அனைத்தும் இந்த காட்சிகளில் பார்க்கலாம். படத்தில் அசின் எதற்கு வருகிறார் ஏன் பெருமாலே பெருமாலே என்று மட்டுமே சொல்லி கமலோடே அலைகிறார் என்று காரணம் கேட்போருக்கு இது தான் விடை. அந்த படத்தில் இருவர் தப்பி ஓடுவார்கள் தமிழில் அப்படி இருவர் வேண்டும் என்றால் மறுபடியும் அர்சுனை குருதிபுனலில் சேர்த்துகொண்டதை போல் செய்ய வேண்டும் அதற்கு பதில் அசினை போட்டுவிட்டால் வேலை மிச்சம். நல்ல திரைக்கதை நுட்பம் இல்லையா.


இப்படி தப்பி ஓடும் வழியில் ஒருவரின் வண்டியும் மோதி வண்டி கவிழும், இது தான் தசாவதாரத்தில் அந்த நெட்டை கமல் தோன்றும் காட்சி. பிறகு அவரிடம் இருந்து படகை பறித்துகொண்டு மிகவும் ஆழத்தில் ஓடும் ஆற்றில் குதிப்பார்கள் இருவரும். தசாவாதாரத்தில் இரயில் வண்டியில் இருந்து ஏன் ஆற்றில் குதிகிறார்கள் என்று இதை பார்த்தால் புரியும்.


இப்படி ஒருவழியாக அந்த தளபதி அந்த பெட்டகத்தை இவர்கள் இருவருடனும் கைபற்றுவான். பிறகு அவர்களை கொண்டே தீவிரவாத நாடுகளுக்கு அந்த வைரசை ஏவி வித்தை காட்ட முற்பட அந்த மீன் பிடியாளனின் முன்யோசனையால் அது தவிர்கபட. பிறகு அந்த பெட்டகத்துடன் ஒரு குகைவழி பாதையில் பிடிபடுகிறார்கள் இருவரும்.


அங்கேயும் அந்த தளபதி வந்து அந்த வைரசை அமெரிக்க மக்கள் மீது ஏவியாவது தனது வெறியை தீர்த்துகொள்ள நினைக்க, அங்கே அந்த குகைவழி பாதையோடு அந்த வைசரை புதைகிறது அமெரிக்க இராணுவம். அங்கே கடைசி காட்சியில் ஒரு இராணுவ உலங்கு தாக்குதல் வண்டியில் வந்து தாக்கி குகை பாதையை தகர்ப்பார்கள் இங்கேயும் தம்மிழில் தேவையே இல்லாமல் ஒரு உலங்கு வண்டியில் வந்து அந்த வண்டியின் சத்தத்தில் உள்ளே இருப்பவர்கள்ளுள் நடக்கும் உரையாடல்கள் கூட கேட்க்கது என்று அவர்களுக்கு பேசிக்கொள்ள கருவிகள் உண்டு. ஆனால் அங்கே இருந்து கமல் அந்த வைசரை ஒப்படைக்கும் படி சொல்லி சுனாமியோடும் கதை முடியும்.




10 கமல் வேடங்களை இப்படி தான் பிடித்து இருகிறார்கள்.


1) அந்த மீன் பிடி இளைஞன்


2) அந்த கருப்பர் இன இளைஞன், இவர் ஆங்கிலத்தில் பேசும் வசனங்களை பூவராகவனான கமல் பேசும் வசனங்களாக வரும்.


3) அந்த இராணுவ தளபதி வில்லன்


4) அந்த ஆராசியாளனாக ( தமிழில் ஆராச்சியாளனே மீன் பிடியானின் பாத்திரத்தையும் செய்தி இருப்பார்)


மேலே சொன்ன பாத்திரங்கள் நம்மை பாதிகாமல் போனதற்கு காரணம் அவர்கள் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து எடுத்து கையாணடதால், பூவராகவனை தவிர, அந்த அராச்சியாளனாக வரும் இளைஞாக வரும் கமல் உட்பட.


மற்ற பாத்திரங்கள் இவர்களால் படைக்கப்பட்டதால், நாயுடு கமல் முதல் அந்த வயதான பாட்டியின் வேடம் வரை மனதில் நிற்கிறது. இந்த பூச்சுகள் தெரியாமல் இருக்கவும், பாத்திரங்களை 10ஆக மாற்றவும் அந்த 12ஆம் நூற்றாண்டு காட்சிகள். ஒரு வகையில் விளம்பரத்திற்காக கூட இருக்கலாம்.


கதை இப்படி இருக்க பாவம் பாரதிராசா அவர் பாடுக்கு என்ன என்னவோ உளரிக்கொண்டே இருக்கிறார் இன்னமும் பாவம்.