பொதுவாக செயலலிதாவின் நடவடிக்கைகளிலோ, அரசியல் அறிக்கைகளிலோ, அல்லது அரசியல் மற்றும் தனிபட்ட நடத்தைகளை கவனித்தோமானால் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான். அப்படியே ஏதோனும் நடவடிக்கை அல்லது அறிக்கையோ வந்தாலும், அது பொதுவாக அடுத்தவர் மேல் ஏவும் தனிப்பட்ட தாக்குதலாகத்தான் இருந்திருக்கிறது இன்றும் அப்படி தான் தொடர்ந்தும் கொண்டு இருக்கின்றது. இதை அம்மையாரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை கேட்டால் மறுக்காமல் ஆமாம் என்று தலையாட்டுவதை பொதுவாக காணமுடியும்.
பொய்யும் புனை சுருட்டுகளை அள்ளிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே. சென்றமுறை ஆட்சிக்கு வந்த உடனே பெட்டகத்தில் பொருளே இல்லை என்றும் அதனால் எந்த ஒரு திட்டத்தையும் திட்டமிடவோ அல்லது செயல்படுத்தவோ முடியாதது மட்டும் இல்லாமல், அரசு இயந்திரத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்ககூட பணம் இல்லை என்று சொன்னதோடு மட்டும் நிற்காமல். பணிவிடைபெறும் மக்களின் பணத்தையும் கொடுக்கமுடியாது என்று சொன்னவர்கள், பின்னாளில் வந்த எதிர்ப்புக்கு அஞ்சி தவணையாக கொடுப்பதாக செயற்படுத்தினார்கள்.
பணிவிடைபெறும் மனிதன் 58 ஆண்டுகால உழைப்பிற்கு பிறகு அவரது பணிக்காலம் முழுவதும் குருவியாக சேர்த்துவைத்த பொருளை அவரே எடுக்க முடியாது என்று சொன்னால் அந்த வயதான மனிதன் எங்கே போவான். அதுவும் இந்த நாள் முதல் அடுத்த முதல் தேதிகளில் இனிமேல் சம்பளம் என்று ஒன்று வராது என்று ஆன பிறகு இப்படி ஒரு இடியை அவரது தலையில் இறக்கினால் அந்த வயதான காலத்தில் அவரது மனதும் அவரது குடும்பத்தினரது மனதும் எப்படி இருக்கும். அடுத்த மாத உணவுக்கு என்ன செய்வோம் என்று வருந்திய மனங்கள் என்ன பாடு பட்டு இருக்கும்.
இவைகளுக்கு அம்மையார் சொன்ன ஒரே காரணம் பெட்டகத்தில் பொருள் இல்லை!!!!. எனக்கு தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த ஒரு காலத்திலும் நடக்காத ஒரு செயல் இது. எப்பேர் பட்ட நிலைவந்தாலும் பணிகொடை பணத்தில் கையை வைக்கூடாது. அப்படியே ஒருவர் எடுக்க நினைத்தாலும், தன்னுடைய பணத்திற்கு தானே வட்டி கொடுத்தான் எடுக்கவேண்டும் என்ற விதிகளையும் விதித்து, அந்த வட்டியையும் வாங்கி அவருகே கொடுத்துவந்த அமைப்பில், பணமே இல்லை என்று சொல்ல இவருக்கு என்ன தைரியம் இருந்திருக்கவேண்டும்.
இது போல் எத்தனையோ உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். அதைவிட சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அவர் முதல்வராக இருந்த 2 முறையும் அரசு இயங்காத அரசாகத்தான் இருந்தது. அப்படி இயங்கும் போதெல்லாம், அவரின் தனிபட்ட பழிவாங்கலுக்கும். அவரது உறவுகளும், ஒட்டு குழுவும் கொள்ளை அடிப்பதற்கு என்று தான் இயங்கியது. இல்லை என்று ஆதாரங்களோடு மறுக்க யாரால் முடியும். இப்படி செயல்படவே முடியாமலும் தெரியாமலும் அவதிபட்டதை பார்த்தமக்கள் அவரை சென்றமுறை பேசாமல் சென்று ஓய்வெடுங்கள் என்று வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அப்போது ஓடி ஒளிந்துகொண்டவர் தான், ஐதராபத்திலும், கொடையிலும், சிறுதாவூர் என்றும் இடம் மாறி மாறி ஓய்வெடுத்து வெறுத்து போனவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று அழையா விருந்தாளியாக பதவியேற்பு நிகழ்சிகளுக்கு போவது. போன கையோடு, நீங்கள் கூப்பிடாமல் நானே வந்தேனே அது போல் இல்லை என்றாலும் நான் கூப்பிடதாகவாது எங்கள் வீட்டுக்கு வந்து போங்கள் என்று சொல்லி மோடியின் தயவிலாவது தனக்கு விளம்பரம் கிடைக்கிறதா என்று தேடும் வேலை தான் இப்போது அம்மையாருக்கு. அப்படியும் விளம்பரம் கிடைக்கவில்லை என்றால். மோடி எங்களது வீட்டில் விருந்துக்காக அழைத்தபோது வந்தவர் என்னிடம் தவறாக நடக்கமுயற்சித்தார் என்றும் சொல்லுவார். அவர் எதிர்பார்த்த விளம்பரம் கிடைக்கவில்லை, தேர்தல் கூட்டணிகள் பாதகமாக அமைந்தால் அம்மையாரின் கண்ணிரையும் கம்பலையும் பார்க்கதானே போகிறோம். பாவம் மோடி, தலை உருளாமல் இருந்தால் சரிதான்.
இப்படி விளம்பரம் தேடவேண்டிய அவசியத்தில் இருக்கும் அவர்தான், ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு வந்தவர் பேராசிரியரை வம்புக்கு இழுத்திருக்கிறார். ஒரு மனிதன் ஆசானாக ஒரு நாள் பணியாற்றினாலும் சரி, 1, 2 வகுப்பு ஆசானாக இருந்தாலும் சரி. மாணவனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் வந்த பின்னும் கூட, எங்கேனும் ஆசானை பார்த்தால் அன்றைக்கு வகுப்பறையில் காட்டிய பணிவோடு ஐயா என்று கேட்க்கும் அதே பணிவோடு பேசுவது தான் வழமை. இது ஆசானுக்கு மனிதகுலம் வழங்கும் மரியாதை, அங்கிகாரம், பெருமை.
இதில் அம்மையாருக்கு என்ன உருத்தலோ தெரியவில்லை. முன்னாள், இன்னாள், உதவி பேராசிரியர் என்று என்ன என்னவெல்லாம் சொல்லி கேவலமாக பேசவேண்டுமோ அவை எல்லாம் பேசி சட்டசபையிலே குழப்பங்களை விளைவித்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியும் அதன் ஆசான்களும் தமிழுக்கும், தமிழர்களது உணர்வுகளுக்கும் என்ன என்ன செய்திருக்கிறார்கள் என்று மறுபடியும் ஒரு விளக்கம் சொல்லிதான் மக்களுக்கும் புரிய வைக்கவேண்டும் என்று இல்லை. சுருக்கமாக பச்சையப்பன் கல்லூரி படிக்கட்டு கூட பைந்தமிழ் பாடும் என்று சொல்லுவார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் காலம் தொட்டு அரசியலில் இருக்கும் அவர், இதுவரையில் ஆட்சியில் இருக்கும் காலம் வரையில் கல்வி அமைச்சராக இருந்து நிறைவாக பணியாற்றியவர். இந்த வயதிலும் ஓய்வு வேண்டும் என்று உடல் கெஞ்சும் காலத்திலும் அரசு பணிகளை ஏற்று பணியாற்றுவதை பார்த்தால், நின்றால் வலிக்குது, உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவிலை. மாடிப்படி ஏறமுடியவில்லை என்ற நிலைமையில் உள்ள்வர்களுக்கு கொஞ்சம் பொறாமை வருவது இயற்கைதான். அதற்காக இப்படியா ஒருவர் பேசுவது வகை தொகை இல்லாமல், வயது வித்தியாசம் கூட பார்க்காமல்.
2 முறை முதல்வராக இருந்தபோதும், முன்னாள் அரசு வைத்திருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது, வரவு செலவு திட்டங்களை ஈ அடித்தான் பிரதி எடுப்பது. இவைகளை பற்றி எல்லாம் எங்கே விவாதத்தில் சொல்லிவிடுவார்களோ என்று, ஆளுனரை ஆங்கிலத்தில் படிக்கவைத்து திசைதிருப்புவது என்று இருந்த அம்மையார் சொல்கிறார் இப்படி. இது எப்படி தெரியுமா இருக்கிறது, தெருவில் செல்லும் ஒருவரை கைகாட்டி அவருக்கு முற்றிலும் அறிமுகம் இல்லதவரிடம் அங்கே போகிறாரே அவர் கெட்டவர் என்று சொல்லுவார்களே அதை போல. இவரும் ஏன் என்று கேட்க்க மாட்டார், ஏன் என்றால் இவருக்கு அவரை தெரியாது, அதனால் அவசியம் இல்லை. ஆனால் பின்னாளில் வேறு எங்காவது பார்க்க நேர்ந்தால் அங்கே இவருக்கு தெரிந்தவரிடம் சொல்வார் அதே வசனங்களை இவருடைய நண்பர் சொன்னார் என்றும் அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்றும்.
பிறகு, ஈரை பேனாக்கி, பேனை பேயாக்கி அல்லவா செய்தி பரவும். அப்படி ஆகட்டும் என்று ஆதாரமே இல்லாமல், நடுவணரசுக்காக உரிமைகளை விட்டு கொடுக்கிறது என்றும். தமிழகம் வன்முறை பூமியாக மாறிவிட்டது என்றும். ஆட்சி நடத்தும் உரிமையை அரசு இழந்துவிட்டது என்றும், உடனே அரசை கலைக்கவேண்டும் என்று வயிற்று வலியில் இஞ்சி மறப்பா விற்பவனைபோல் கூவிவிட்டு சென்றுள்ளார். ஒரு வேளை மோடி தமிழகம் வந்து சென்றதை தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் தமிழகத்தில் நடைபெறுகின்றது என்று சொல்கிறாரோ என்னவோ.
வழி தெரியாமல் தடுமாறும் கப்பல் என்று தன்னையும் தன்னை சுற்றி திரியும் கூட்டத்தை தான் சுயவிமர்சணம் செய்துள்ளார் போலும் இலைமறை காய் போல். தன்னால் தான் எல்லாம் என்று சொல்லித்திரிந்த காலம் போய் இப்போது மோடியை காட்டிதான் விளம்பரம் பெறவேண்டும் என்ற நிலைக்கு அவர் வந்திருப்பதை பார்த்தல் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
11 years ago

