Thursday, December 26, 2024

திருமாவளவனுக்கு அரசியல் பலம் எல்லாம் இல்லை என்று தான் சொன்னார்கள்

திமுகவை பதவில் இருந்தும் மக்கள் மனதில் இருந்தும் அகற்றவேண்டும் என்று துடிக்கின்றது பாஜகவும் அதன் பால் ஈர்ப்புக்கொண்ட கூலி எட்டப்ப கூட்டமும்.

என்ன செய்யலாம் என்று அதிமுகவை விலைக்கு வாங்கியதில் இருந்து முயன்று கொண்டு இருக்கிறது பாஜக. விலைக்கு வாங்கிய பின் அதிமுகவில் பொம்மைகளை பதவியில் அமர்த்தி அவர்கள் பாஜகவின் தமிழ்நாட்டு பாஜக பொம்மை தலைமைகளின் ஆணைகளுக்கு அடிப்பணியும் படி ஆணையிட்டது. முதலில் மறைமுகமாக இருந்த இந்த ஒப்பந்தத்தை மக்களின் முன் அரங்கேற்றி தான் தான் அந்த கட்சியின் உண்மை முதலாளி என்று காட்டவும் முற்பட்டது. அதை தொடர்ந்து தமிழ்நாடு கொடுத்த மூக்குடைப்பில் இருந்து இது வரை மீளாத பாஜக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்மாக விடாமல் இன்று முயன்றுக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த முயற்சிகளில் பாஜக கற்றுணர்ந்த பாடம் திமுகவின் கூட்டணியை அழித்தால் மட்டும்மே அவர்களை பலவீனப்படுத்த முடியும், மற்றப்படி கட்சியினர் மீதோ அல்லது கட்சியின் மீதோ கையை பிடிச்சு இழுத்தான் என்ற தொனியில் பாஜக தொடுத்த வழக்குகள் எல்லாம் பிசு பிசுத்த நிலையில். கூட்டணியின் மேல் தனது பார்வையை திருப்பி இருக்கிறது.

மறைமுகமாக திருமாவளவனின் மீது அவதூறுகளையும் பாஜகவின் நேரடி மற்றும் கூலி எட்டப்பன்களையும் விட்டு திட்ட ஆரம்பித்தும் பார்த்தது அதுவும் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூட சில நேரங்களில் இலவச அறிவுரைகளையும் வழங்கியது.

பிறகு நடிகர் விஜய்யை வைத்து ரம்மியாட்டம் ஆடியது பாஜக, அதை தொடர்ந்து பின்னர் மறுபடியும் திமுக கூட்டணி உடையும் என்று காத்திருந்தது நரி கணக்காக.

அதையும் தொடர்ந்து ஒன்றுமே நடக்காத நிலையில் இப்பொழுது பாமகவை அனுப்பி திமுகவில் சேர்ந்து கொள்கிறோம் என்று அறிக்கை விட வைத்து இருக்கிறது. இப்படி ஒரு அறிக்கை ஏன் இப்பொழுது....அரசியல் தெரிந்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்கும் திருமாவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என்று. ஆக திமுகவின் கூட்டணியை குழப்ப பாஜக எடுத்து இருக்கும் இன்றைய ஆயுதம் பாமக என்னும் கூலி எட்டப்ப படைகளில் ஒன்று......

0 comments: