Thursday, December 26, 2024

திருமாவளவனுக்கு அரசியல் பலம் எல்லாம் இல்லை என்று தான் சொன்னார்கள்

திமுகவை பதவில் இருந்தும் மக்கள் மனதில் இருந்தும் அகற்றவேண்டும் என்று துடிக்கின்றது பாஜகவும் அதன் பால் ஈர்ப்புக்கொண்ட கூலி எட்டப்ப கூட்டமும்.

என்ன செய்யலாம் என்று அதிமுகவை விலைக்கு வாங்கியதில் இருந்து முயன்று கொண்டு இருக்கிறது பாஜக. விலைக்கு வாங்கிய பின் அதிமுகவில் பொம்மைகளை பதவியில் அமர்த்தி அவர்கள் பாஜகவின் தமிழ்நாட்டு பாஜக பொம்மை தலைமைகளின் ஆணைகளுக்கு அடிப்பணியும் படி ஆணையிட்டது. முதலில் மறைமுகமாக இருந்த இந்த ஒப்பந்தத்தை மக்களின் முன் அரங்கேற்றி தான் தான் அந்த கட்சியின் உண்மை முதலாளி என்று காட்டவும் முற்பட்டது. அதை தொடர்ந்து தமிழ்நாடு கொடுத்த மூக்குடைப்பில் இருந்து இது வரை மீளாத பாஜக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்மாக விடாமல் இன்று முயன்றுக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த முயற்சிகளில் பாஜக கற்றுணர்ந்த பாடம் திமுகவின் கூட்டணியை அழித்தால் மட்டும்மே அவர்களை பலவீனப்படுத்த முடியும், மற்றப்படி கட்சியினர் மீதோ அல்லது கட்சியின் மீதோ கையை பிடிச்சு இழுத்தான் என்ற தொனியில் பாஜக தொடுத்த வழக்குகள் எல்லாம் பிசு பிசுத்த நிலையில். கூட்டணியின் மேல் தனது பார்வையை திருப்பி இருக்கிறது.

மறைமுகமாக திருமாவளவனின் மீது அவதூறுகளையும் பாஜகவின் நேரடி மற்றும் கூலி எட்டப்பன்களையும் விட்டு திட்ட ஆரம்பித்தும் பார்த்தது அதுவும் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூட சில நேரங்களில் இலவச அறிவுரைகளையும் வழங்கியது.

பிறகு நடிகர் விஜய்யை வைத்து ரம்மியாட்டம் ஆடியது பாஜக, அதை தொடர்ந்து பின்னர் மறுபடியும் திமுக கூட்டணி உடையும் என்று காத்திருந்தது நரி கணக்காக.

அதையும் தொடர்ந்து ஒன்றுமே நடக்காத நிலையில் இப்பொழுது பாமகவை அனுப்பி திமுகவில் சேர்ந்து கொள்கிறோம் என்று அறிக்கை விட வைத்து இருக்கிறது. இப்படி ஒரு அறிக்கை ஏன் இப்பொழுது....அரசியல் தெரிந்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்கும் திருமாவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என்று. ஆக திமுகவின் கூட்டணியை குழப்ப பாஜக எடுத்து இருக்கும் இன்றைய ஆயுதம் பாமக என்னும் கூலி எட்டப்ப படைகளில் ஒன்று......

அன்று தமிழிசை சௌந்தராஜன் சொல்லும் போது நாம் எல்லாம் சிரித்தோம்

தரமான நல்ல மருத்துவர்களை உருவாக்குவது தான் எங்களின் நோக்கமே தவிர மருத்துவ கல்வியில் தடைகளை உண்டு செய்வது இல்லை என்று மேடைக்கு மேடை தமிழிசை முழங்கும் போது எல்லாம் நாம் எள்ளி நகையாடினோம்....

புதியக் கல்வி கொள்கை என்று பாஜக அரசு வரிந்துக்கட்டி கொண்டு வரும் போதும் இதையே தான் பாஜகவின் கூலி எட்டப்பன்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கூலிக்கு தகுந்தார் போல் கூவினார்கள் வித விதமாக.

இன்று மருத்துவத்தில் துவங்கும் இந்த செயல் படிப்படியா மக்களின் கல்வியையே பரிக்கும் என்று நாங்கள் எல்லாம் எச்சரிக்கை விடுத்த போது எங்களை போன்றோரை கிண்டலும் கேலியும்மாகத் தான் பார்த்தார்கள்...பேசினார்கள்.

முதலில் மருத்துவம் பிறகு பொறியியல் அதை தொடர்ந்து சட்டம் என்றும், அதன் பிறகு எல்லா தர்ப்பட்ட படிப்புகளுக்கும் இந்த நுழைவுத்தேர்வை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று பாஜக அரசு நிறைவேற்றியது. அன்று துவங்கிய அழிப்பு இன்று 3வது வகுப்பிலிம் அப்படியே தப்பித்தால் அடுத்து 8வதிலும் படிப்பு முழுமையாக அடிப்பட்டு போகும் படி ஒரு பொறியை வடிவமைத்து இருக்கிறது பாஜக.

3வதில் எத்தனை பிள்ளை கொடுக்கும் வீட்டுப்பாடம் முதல் வகுப்பிலும் பாஜக விவரிக்கும் அளவிற்கு செயற்பாட்டில் இருக்கிறார்கள். அந்த வயதில் மழலையும் சொன்னதை சொல்லும்மாம் கிளிப்பிள்ளை என்ற நிலையில் இருக்கும் குழந்தைகளிடம் என்ன எதிர்ப்பார்க்க சொல்கின்றது இந்த பாஜக அரசு. 3வது படிக்கும் பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்ததை திருப்பி ஒப்பிக்கும் திற‌னா இல்லை எப்படி சொல்ல வேண்டும் இல்லை பாடவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை அப்படியே திரும்ப செய்துக்காட்டும் திற‌மையையா......

எப்படி எல்லாம் இந்த பாஜக மக்களின் வாழ்கையில் விளையாண்டுக் கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் தான் புரியும்.

முதலில் உயர்க்கல்வியில் கொடுக்கப்பட்ட உதவித் தொகையை படிப்படியாக குறைக்க துவங்கியது. அதுவும் முதலில் பட்டியலின பழங்குடியினரில் துவங்கியது...காரணம் அவர்களுக்காக யாரும் வரிந்துக்கட்டிக் கொண்டு வரமாட்டார்கள் என்றது அவர்களது கணக்கு....ஆனால் ஒரு சிறு எதிர்ப்பு மட்டும் எல்லா பக்கங்களிலும் எழுந்து ஓய்ந்த நிலையில் சத்தமே இல்லாமல் அனைவருக்கும் என்று அதை விரிவாக்கியது...ஒது முதல் முடக்கம்...

எடுத்த எடுப்பிலேயே பட்ட படிப்பிலோ அல்லது அடிப்படைப் படிப்பிலோ கையை வைத்தால் மக்கள் விழித்து கொள்வார்கள் என்ற முன்னெச்சரிக்கை, நரித்தனம் தான் வேற என்ன.

பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் எட்டாக்கனியாக ஆக்கியபிறகு குலத்தொழிலை செய்ய சொல்லி கூவியது பாஜக....தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்கள் எல்லாம் செயல்படுத்த துவங்கியும் ஆன நிலையில் இப்போது பட்டப்படிப்பை எட்டிப்பிடிக்கவே கூடாது என்று இப்படி பள்ளியிலே குழந்தைகளை முடக்கி கூலி தொழிலுக்கு பழக்க திட்டம் வகுத்து செயலும் ஆக்கி இருக்கிறது பாஜக.

இனி என்ன நடக்கும் அடம் பிடிக்கும் மாநிலங்களின் கல்வி சான்றிதழ்கள் இனி செல்லாது என்று ஒரு சட்டம் கொண்டு வந்து தரைமட்டம்மாக்கும்.

அதன் பிறகு ஆளே இல்லாத வகுப்பில் தான் தான் முதல் மாணவன் என்ற அவர்களின் பழைய வரலாற்றில் அவர்களின் புதிய ஆட்களின் பெயர்களை பட்டியலிட துவங்கும்.