Monday, November 25, 2013

இரண்டாம் உலகம் -- திரைவிமர்சனம்

செல்வராகவனின் படம் பார்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை விதைத்து செல்லும் விதமாக இருந்த காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது போலும்.

படத்தின் துவக்கத்தில் இருந்த ஒரு தெளிவும் தொடரும் இடையிலேயே காணாமல் போய் படம் பார்பவர்களின் ஊகங்களுக்கு விட்டு விட்டது எந்த ஒரு இயக்குனருக்கும் அழகில்லை.

பார்க்கும் இடங்களெல்லாம் உன்னை போல் பாவை தெரியுதடி என்று ஒரு விளையாட்டாக சொன்னார்கள் என்று பார்த்தால் அதையே கதையாக்கி சகிக்க முடியவில்லை.

முதல் பாதி படம் முடிந்ததும் இரண்டாம் பாதியில் அவள் என்ன ஆனாள் என்று சொல்வார்கள் என்று பார்த்தால் பாவமாக முடித்து இருக்கிறார்கள் அதுவும் சகிக்க முடியாதவிதமாக இருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் காதலை எப்படி கற்றுக்கொடுத்தான் அவளும் எப்படி கற்றாள் என்ன கற்றாள் என்றால் வெட்கப்படுவதும் அவனை தேடுவதும் தான் காதல் என்று சொல்லி செல்கிறார் இயக்குனர்.

எப்படி இருந்த செல்வராகவன் இவர், ரெயின்போ காலனியில் அது என்ன காதல் எந்த வகை என்ன காதல் என்று எல்லாம் விளக்கம் சொல்லவில்லை என்றாலும் அந்த காதல் பார்க்க அழகாக இருந்தது. இந்த இரண்டாம் உலக காதல்கள் இரண்டுமே சகிக்கவில்லை.

படத்தின் துவக்கதி இருந்து திணரல், நாயகன் அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதன். சரி, அப்பாவால் தனியாக எதையும் செய்துகொள்ள முடியாது. பிறகு எப்படி விட்டு விட்டு சமூச சேவைக்கு அவனுக்கு நேரம் கிடைகிறது பதில் இல்லை......

ஒரு அழகான பெண் தன்னை விரும்புவதாக சொல்லும்பட்சத்தில் குறைந்தது ஒரு ஆச்சரியாமாவது அவனுக்கு வந்து இருக்க வேண்டும் அவனோ தாலின்ன என்னன்னு தெரியாத சின்ன தம்பியாக நடந்துகொள்ளவது இரசிக்கும் படியாக இல்லை.

இரண்டாம் பாதியில் தற்பொழுது வரும் மொழிமாற்று படங்களை பார்த்தது போல் இருக்கிறது. அதுவும் அந்த கொடூரமான அந்த சிங்கம் நாயகனை முதல் தடவையாக அடிக்கவே 10 நிமிடங்கள் எடுத்துகொள்கிறது ஏன் என்று இயக்குனர் தான் சொல்லனும்.

இரண்டாம் பாதியில் இவ்வளவு திணரல் ஏற்பட்டால் அதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது படத்தை எங்கு இருந்தோ எடுத்து தழுவி இருக்க வேண்டும். அப்படி தழுவும் போது மூலக்கதையின் தாக்கத்தில் தொடர்வது கடினமே. அப்படி பல் திணரல்களை கண்கூடாக கண்டு இருக்கிறோம் உதாரணமாக கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம், சமர் 500ரை தழுவி எடுத்தபடம். ஆனால் மூலப்படத்தில் இல்லாத எந்த கதைபகுதி என்று கடைசியில் வரும் காட்சியாகிய நாயகன் நாயகி திருமணம் மாற்றி அமைக்கும் காட்சி. மூலத்தில் நாயகி வேறு ஒருவரை மணப்பார், நாயகனோ அடுத்து ஒரு வேலைக்கு சென்று அங்கே சந்திக்கும் வேறு ஒரு பெண்ணுடன் வெளியில் செல்வதாக முடித்து இருப்பார்கள். இந்த காட்சியை மட்டுமே மாற்றி அமைத்ததில் எந்தனை விதமான திணரல்கள் வந்துள்ளது என்று படம் பார்த்தவர்களுக்கு புரியும்.

அது போல இரண்டாம் பாதி முழுக்க வசனத்திற்கு வசனம், காட்சிக்கு காட்சி தொடர்பே இல்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகின்றது. பார்போம் இணையத்தில் யாராவது வெளியிடுகிறார்களா என்று........

பின்னணி இசையில் இரண்டாம் பாதியில் நாயகியை ஆர்யா திரும்பவும் பார்க்கும் காட்சியில் பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் இராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ பாடல் அப்படியே ஒலிக்கப்படுவதும் பின்னர் வரும் காட்சியில் இளையராசாவின் How to Name itம் வருவது ஏனோ என்று இயக்குனர் தான் சொல்ல வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவனில் நடந்த தவறை திருத்தி கொண்டு இருப்பார் என்று தான் எதிர்பார்தேன், பாவம் அதைவிட மிகவும் மோசமான நிலைக்கு வந்துள்ளார் செல்வராகவன்.

ஒரு நல்ல கதையாசிரியரை பிடியுங்கள் பிரச்சனைகள் முடிந்து போகும்..........

0 comments: