அதிமுக தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் போலும். யாரை கேட்டாலும் பிறகு அந்த குடும்ப அரசியலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டாமா என்று கேட்கிறார்கள்.
சரி குடும்ப அரசியல் இல்லாமல் போனால் மன்னார்குடி அரசியல். என்ன பெரிதாக மக்களுக்கு மாற்றம் வந்துவிட போகிறது. இன்றைகு குடி ஒரு பெரிய பிரச்சனை என்றும் அதன் பொருட்டாவது குடும்ப அரசியலை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றது அவர்களது விருப்பம்.
டாசுமார்க்கை இவ்வளவு பெரிய நிறுவனமாக மன்னார்குடி குடும்பம் அல்லவா ஆக்கியது.
அன்றைக்கு மன்னார்குடி குடும்பம் தொடங்கிய சாராய தொழில் இன்றைக்கும் ஆட்சியில் இல்லை என்றாலும் அமோகமாக அல்லவா நடக்கிறது. அந்த அளவிற்கு கட்சி பேதம் இல்லாமல் தொழில் செய்யும் கசப்பு மருந்து கட்சி தான் திமுகவின் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகிறதா....
மன்னார்குடி குடும்பகும் பெரியகுளம் குடும்பமும் சென்றமுறை அடித்த கொட்டம் இருக்கிறதே அப்பா என்ன கொடுமை. உதாரணத்திற்கு நினைவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றை சொல்வோம்.
படித்த பட்டதாரிகளும் மற்ற அனைத்து படிப்பு நிலைகளிலும் என்றைக்காவது அரசு பணி கிடைக்காதா என்று அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கும் பட்டதாரிகளை அதுவும் பெண் பிள்ளைகளை டாசுமார்க்கு ஊத்திக்கொடுக்கும் வேலைக்கு அனுப்ப அரசு ஆணை அனுப்பினார்களே அதை மக்கள் மறந்துவிட்டார்கள் போலும்............
இந்த செய்கையின் மூலம் அதிமுக என்ன சொல்கிறது, நீங்கள் எல்லாம் படித்து என்ன செய்ய போகிறீர்கள் டாசுமார்க்கில் ஊத்திக்கொடுக்கத்தான் இந்த படிப்பு எல்லாம் உதவும் என்று நடுத்தர வர்கத்தையே அல்லவா கேலி செய்த்தார்கள். என்ன ஒரு அகங்காரமான செயல் அந்த செயல். இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலில் இருந்து விடிவு கொடுக்கப்போகிறதாம்.
மன்னார்குடி குடும்பம் இந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள தொழில்களை வாங்கிப்போடுவதில் மும்முரமாக இருந்தது. தங்கும் விடுதிகள் முதல் அந்த அந்த இடங்களில் என்ன என்ன தொழில் நல்ல நிலைக்கு நிலைத்து இருக்குமோ அந்த மாதிரியான தொழில்களை வாங்கிப்போட்டுள்ளது. இத்த செயலுக்காக நடராசனுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய அணியே வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
அதுவும் எப்படி தமிழகத்தில் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து அந்த பணத்தை அமெரிக்காவில் கொண்டு கொட்டும் இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகின்றதாமாம்.
திமுக குடும்பம் தான் குடும்பமாம் மன்னார்குடி குடும்பம் பெரியகுளம் குடும்பம் எல்லாம் குடும்பம் இல்லையாம் செயலலிதா சொல்கிறார், மன்னார்குடி குடும்பம், குடும்பம் குடும்பமாக அந்த கூட்டத்தில் உட்கார்ந்துக்கொண்டு அதையும் கைகொட்டி இரசித்து கை தட்டுகிறது. என்ன நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு.
சென்றமுறை அதிமுக வந்ததும் திமுக கசானாவை காலி செய்துவிட்டு தான் சென்றது. ஆகவே எல்லோரும் கசப்பு மருந்து சாப்பிடுங்கள் என்று நடுத்தர மக்களின் பணிக்கொடையிலே கைவத்து அதிலே எலிகாப்டர் ஏறி கை அசைத்து நன்றி என்று சொல்லி ஐதிராபாத்திற்கும் கொடா நாட்டிற்கும் மாறி மாறி ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார் இந்த கும்பகர்ணியம்மா.
இந்த முறை இமாலய இலவசங்களை கொடுத்து கசானா மட்டும் இல்லை உலக வங்கிக்கு தமிழகத்தையே விற்று விட்டார்கள் அதனால் வெறும் கசப்பு மருந்து மட்டும் போதாது, இனி தமிழகத்தில் அதுவும் நடுத்தர வர்கத்தினர் ஒரு வரும் சாப்பாடு கூட சாப்பிடாமல் 365 நாளும் விரதம் இருக்கவேண்டும் என்று கட்டளை இடுவார். பிறகு மிச்சமாகும் அந்த காசுகளை கொண்டு மன்னார்குடி குடும்பம் டாசுமார்க்கை தொடர்ந்து தமிழகம் எங்கும் நிர்வாண நடன அரங்குகளை தொடங்கி அதற்கு அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை பணியமர்த்தும். கேட்டால் ஏன் அது எல்லாம் வேலை இல்லையா என்று நக்கலாக வேறு கேட்ப்பார்கள் மன்னார்குடி குடும்பமும் பெரியகுளம் குடும்பமும்.
ஆட்சி என்றால் என்ன என்றே தெரியாவர் எல்லாம் அதிமுகவின் பொது செயலர், அவர்களின் அரசில் திட்டங்களை எல்லாம் தீட்ட தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்கள் சி.பொன்னையனை போல. இந்த கூட்டம் வந்து அங்கே அமர்ந்ததும் இந்திர குமாரி வகையராக்களும், கராத்தே தியாகராசன்களும் தான் தினமும் களமாடுவார்கள்.
செயலலிதா ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடப்பார், மன்னார்குடியும் பெரியகுளமும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தமிழகத்தை ஏற்றுமதி செய்துக்கொண்டு இருக்கும். தமிழகத்தில் இப்போது மனை நிலங்கள் எல்லாம் நல்லவிலைக்கு ஏற்றம் கொண்டுள்ளது. அதனால் அந்த மனைகளை மக்களிடம் இருந்து அடித்து பிடுக்கும் வேலையை முதல் முதலே மன்னார்குடி குடும்பம் இறங்கும். கொடு இல்லை என்றால் வீட்டிற்கு வண்டி வரும் என்று மிரட்டி வெறும் 1000 ரூபாய்களுக்கு விற்றதாக சொல்லி எழுதிவாங்குவார்கள்.
ஏன் என்று கேட்டால் வக்கீல் விசயனை 10 போர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலே விரட்டி விரட்டி வெட்டினார்களே அதுபோல வெட்டுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.
தப்பி தவறி மத்திய அரசுக்கு சொல்வோம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்று சொல்லிக்கொண்டு வந்தால் மணிசங்கர் ஐயரை வண்டியிலே ஓட ஓட விரட்டி வெட்டினார்களே அது போல அழகாக போட்டு தள்ளுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.
இது எல்லாம் சரியாக வராது என்று ஆளுனரிடம் செல்லலாம் என்று சென்றால், அங்கே என்னை மான பங்கபடுத்தினார்கள் என்று மன்னார்குடி குடும்பம் ஒரு பெரிய கூட்டத்தை அழைத்துவந்து வழக்கு போட்டு அந்த ஆளுனரை வீட்டிற்கு அனுப்பிவிட்டி பாத்திமா பீவிவை மறுபடியும் கொண்டு வந்து வையுங்கள் என்று மத்திய அரசுக்கு ஆணை அனுப்புவார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தண்ணீர் பஞ்சம் வரும், அப்படி இந்த முறையும் வந்தால் எடியூரப்பா ஒரு ஏமாற்றுகாரன் அச்சுதன் ஒரு அசட்டு பேர்வழி என்று ஏகவசனம் பேசி இன்னமும் பஞ்சம் தலைவிரித்தாட வழி வகுப்பார்.
சென்ற முறை பனிக்கர் வெறும் யானைக்கு மட்டும் தான் புணர்வு யாகம் நடத்தவேண்டும் என்று சொன்னார். இந்த முறை ஆடு கோழியில் இருந்து டைனோசரசு வரை எல்லாம் முது மலை காட்டுக்குள் அசுவமேத யாகமே நடக்கும்.
சந்திரலேகா முதத்தில் அமிலத்தை ஊற்றி சிபிக்கு நிறுவனத்தை அமுக்க நினைத்ததை போல் இந்த முறை யார் யாருக்கு எல்லாம் அமில மழையோ கடவுளுக்கோ வெளிச்சம். ச்டெர்லைட் நிறுவனம் ஏற்கனவே வைக்கோவுக்கு அமிலம் ஊற்ற தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்னமுன் எந்தனையை தமிழகம் பார்க்க போகின்றதோ.......
இதை எல்லாம் தப்பு என்று யாராவது சொல்லி ஊர்வலம் அது இது என்று நடத்தினால் சென்னையில் திமுக பேரணியில் பத்திரிக்கை நண்பர்கள் கதறிய கதறல் நினைவில் இல்லையா உங்களுக்கு எல்லாம். இந்த மன்னார்குடி குடும்ப அரசியல் தான் திமுக குடும்ப அரசியலுக்கு மாற்றாம் மக்கள் நினைகிறார்களாம். பாவம் இவர்களுக்கு எல்லாம் இவைகள் யாவும் மறந்து விட்டது போலும்.
என்ன கேட்டால் அந்த அந்த ஊரில் நிற்கு சுயேச்சை மக்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எந்த கட்சியும் எங்களுக்கு வேண்டாம் என்று தெளிவாக சொல்ல வேண்டும். அப்படி பெருவாரியாக சுயேட்சைகளே வெற்றிபெறும் கால் இந்த அறிவுகெட்ட அரசியல் வாதிகள் கொஞ்சமாவது மக்களை பார்த்து பயம் கொள்வார்கள். இல்லையேல் கசப்பு மருந்த நமக்கு கொடுத்துவிட்டு நன்றாக பட்டை நாமத்தை சாத்திவிட்டு மன்னார்குடி அமெரிக்காவிலும் குடும்ப அரசியல் சிங்கப்பூரிலும் சென்று மறைவார்கள்..............
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago