Friday, August 6, 2010

கொடுமையான முதலாளிகளின் உலகம் - இவ்வளவு மோசமாக

உலகில் எந்த நாடாக இருந்தாலும் அதில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று உழைப்பை உருவாக்கும் பிரிவு மற்றொன்று உழைப்பை கொடுக்கும் பிரிவு. இந்த இரண்டும் சேர்ந்தது தான் நாடாக இருக்கும்.

இந்த வகையில் தடையில்லாத வேலைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பது முதலாளிகளாகவும், தடையில்லா உழைப்பினை வழங்குவது உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

உழைப்பிற்கு ஏற்ற ஊழியம் உழைப்பாளியின் மகிழ்ச்சி, முதலுக்கு ஏற்ற இலாபம் முதலாளியின் மகிழ்ச்சி. இதில் எந்த இடத்தில் குறைவு வந்தாலும் மன உளைச்சளில் தான் முடியும்.

இலாபம் குறையும் போதெல்லாம் உழைப்பளிகளின் மேல் எரிந்து விழுவதை முதலாளிகளும், இலாபம் வந்தும் இலாப பங்கோ அல்லது சம்பள உயர்வோ தரமால் இருக்கும் நிலை வந்தால் உழைப்பாளிகள் முதலாளிகளின் மேல் வம்புக்கு பாய்வதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இத்தனை ஆண்டு காலம் இப்படி தான் இருந்து வந்த இந்த உலகம் மெல்ல மெல்ல வென்னிசு நகர வியாபார தளமாக மாற்றம் கொண்டு வருகிறது சமீபமாக.

முதலாளிகள் இப்போது ஒரு கோட்பாடை கடைபிடிக்க வேண்டும் என்று அறியுறுத்த பட்டதாகவும். அப்படி இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவணங்களிலும் கடைபிடித்ததில் அதிக இலாபகரமாக தொழில்கள் நடப்பதாகவும் இப்போது அமெரிக்க முதலாளிகள் கதைகட்ட துவங்கியிள்ளார்கள்.

இடொயோடோ(TOYOTA) நிறுவணம் அனைவருக்கும் தெரிந்த சப்பானிய நிறுவணம். அவர்கள் தான் முதலில் இந்த சிக்கன கோட்பாடை கடைபிடிக்க துவங்கி உலகில் தன்னிறில்லா இலாபம் ஈட்டியதாக சொன்னார்கள் சென்ற ஆண்டு வரை.

அப்படி என்ன கோட்பாடுகளை அவர்கள் கடைபிடிக்கிறார்கள் என்று பார்ப்போம். அந்த கோட்பாடின் பெயர் இலீன்(LEAN).

அந்த கோட்பாட்டின் படி வேலைபார்க்கும் வேலையாட்கள் கொஞ்சம் நேரம் கூட வேலையில்லாமல் வேறு எதுவும் பார்க்கவிடாமல் வேலையில் மூழ்க வைக்கு ஒரு திட்டம்.

கிட்ட தட்ட மார்டன் இடைம்சு(Morden Times) என்று சார்லி சாப்லின் எடுத்த படத்தில் அவர் வேலை செய்யும் தொழிழகத்தில் அவர் படும் பாட்டை காட்டுவார்களே அது மாதிரி.

மேலோட்டமாக பார்த்தால் சும்மா இருக்கிற சமயத்தில் வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் உழைப்பதில் அப்படி என்ன சிரமம் என்று தான் கேட்டக தோன்றும்.

இங்கே தான் முதலாளிகளின் புத்திசாலித்தனம் ஒளிந்துக்கொண்டு இருக்கிறது.

முதலில் தகவல் தொடர்பு(IT) நிறுவணங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு விளக்கினால் நன்றாக புரியும் என்று நினைக்கின்றேன்.

ஒரு சேவையாற்றும் நிறுவணம் தான் பிரதினித்துவம் வகிக்கும் நிறுவணத்தின் வேலைகளை எல்லாம் முடிப்பதற்கு எத்தனை வேலையாட்கள் தேவைபடும் என்று கணக்கிட்டு அத்துனை ஆட்களுக்கு உண்டான பணத்தை இத்தனை தவனையில் தருவதாக ஒப்பந்தம் எழுதுவார்கள்.

அந்த திட்டத்தில் சொன்னது போல் அந்த அளவிற்கு ஆட்களை வேலையில் அமர்த்தி மின்னஞ்சல் முதல் அலைபேசிவரையில் கணக்கில் எழுதப்படும். இந்த அத்தனை இத்தியாதிக்கும் பணம் பற்றாகுறைக்கு அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய வரியிலும் செலவுக்கான கணக்காக காட்டவும்படும்.

இந்த சேவை நிறுவணங்கள் ஒப்புக்கொண்டதை போல் அமெரிக்க நிறுவணங்கள் 2 வருடங்கள் ஆகக்கூடிய வேலைகளை 6 மாத காலங்களிலே அருமையாக செய்துகொடுப்பதாக கதைகளை சொல்லி ஒப்பந்தகளை பெறுவார்கள்.

இதே வேளையில் மற்றும் ஒரு 5 அல்லது 6 நிறுவணங்களிடமும் இதே கால கட்டத்தில் அவர்களும் சேவைகளை செய்வதாக சொல்லி இதே போல் பணத்திற்கான ஒப்பந்தங்களை எழுதி வாங்கிக்கொள்வார்கள்.

இப்போது ஒரு முதலில் வந்த பணத்தைவிட அவர்களுக்கு 5 அல்லது 6 மடங்கு பணம் வருவதற்கான வழிகளை அவர்கள் செயல்படுத்தியாகிவிட்டது.

ஆனால் அந்த 5 அல்லது 6 மடங்கு வேலைகளை செய்ய ஆட்களை இவர்கள் நியமிப்பது இல்லை. பதிலாக வேலையாட்களின் வேலைகளுக்கு இடையே இருக்கும் சிறு சிறு நேரங்களை கூட வீண் ஆக்காமல் மற்ற நிறுவணங்களை வேலைகளை செய்யுமாறு வற்புறுத்துவார்கள்.

இதற்கு எப்படி இவ்வளவு வேலைகளை செய்ய முடியும் என்று கேட்டால், அந்த வேலைகளில் உள்ள இடைவெளியில் சும்மாத்தானே இருக்கிறாய் என்று சொல்ல எல்லா வகையான அறிக்கைகளை தயாரிக்கவும் வெளியிடவும் இந்த ஆலோசனை நிறுவணங்கள் கருவிகளையும் யுக்திகளையும் வழங்கிவருகிறது.

இந்த கணக்கு எப்படி என்றால், ஒரு கட்டு நாத்து நடுவதற்கு 10 நிமிடங்கள் என்றால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்றால் 48 கட்டுக்கள் நட்டு இருக்க வேண்டுமே எப்படி 30 கட்டுக்கள் என்று கேட்க்கும் கேள்வியை போன்று.

இதை சொல்லும் ஆலோசனை நிறுவணங்களுக்கு நாத்து நடுவதில் அனுபவமோ அல்லது திறமையோ இல்லாமல் இருந்தாலும், (8*60)/10 என்ற கணக்கு மட்டுமே போட தெரிந்தால் போதும் என்று நினைப்பவர்களால் எழுதும் தீர்மானங்களில் என்ன ஞாயத்தை எதிர்பார்க்க முடியும்.

இன்னமும் அப்பட்டமாக சொல்வதென்றால், எதிராளி படையில் இருப்பவர் 1000 பேர் என்றால் நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் ஒரு அடியில் 100 பேரை தாக்கும் வல்லமை உண்டு என்றால் 1000 பேருக்கு எதிராக 10 பேர் போதுமே என்று சொல்லும் கணக்குகள் இவை.

இந்த 10 பேரில் ஒரு வரை கொன்றால் கூட 100 பேர் முன்னேறி மற்ற 9 பேரை கொல்வது மிக மிக எளிமை என்று படிக்காதவருக்கு கூட தெரியும் உண்மை. இந்த படித்த முதலாளிகளுக்கு புரியாமல் போனதன் மர்மம் என்ன.

740 மில்லியன் இடாலர்கள் இலாபம் சம்பாதித்த நிறுவணங்கள் தங்களின் இலாபம் 740*6 ஆக உயர வேண்டும் என்ற வேகம் இல்லை வெறி பிடித்து அலைகிறது.

இந்த வெறி என்னமோ ஒரு சில நிறுவணங்கள் என்று இல்லை அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சேவை நிறுவணங்களும் வந்துள்ளது தான் கொடுமை.

இந்த வெறிக்கு துணை போகக்கூடாது என்று உழைக்கும் கூட்டம் நினைத்தாலும் தேசிமக்களது ஆசிர்வதத்துடம் அப்பட்டமாக இன்றைக்கு அமோகமாக நிறைவேறிக்கொண்டு வருகிறது.

தொழிலாளர் சங்கங்கள் எப்போது எல்லாம் பலவீனம் அடைகிறதோ அப்போது எல்லாம் இப்படி பட்ட பகல் கொள்ளைகள் நடப்பது சாத்தியம்.

வேலையே இல்லை என்று இருக்கும் இந்த சூழலில் என்ன வேலை கிடத்தாலும் பரவாயில்லை சம்பளம் கிடைத்தால் போது என்று இருக்கும் மக்களின் உழைப்பை வேட்டையாக கிளம்பிவிட்டது இந்த முதளாலிகளின் உலகம்.

இந்த கொடுமைகள் இந்தியாவில் அரகேறிய பிறகே அமெரிக்காவில் அரங்கேறுகிறது என்றது தான் கொடுமையிலும் கொடுமை.......

0 comments: