Wednesday, June 17, 2009

தமிழகத்து மக்கள் எல்லாம் இந்திய நாட்டு மக்கள் இல்லை போலும், -- சரியாக சொன்னார் மன்மோகன் சிங்கு.



2009 சூன் 16ஆம் நாள் இந்திய மற்றும் தமிழக செய்திதாள்களின் முதல் பக்கத்தில் வந்த செய்தி இது. " பயங்கரவாதம் கூடாது -- பாக்கிட்த்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை".

உருசியாவில் நடைபெற்ற சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் போது சந்தித்து கொண்ட பாக்கிட்த்தானத்தின் அதிபரிடம் முதன்மை அமைச்சர் மன்மோகன் கூறியதாக வெளியான செய்தி இது.

அதுவும் எப்படி தெரியுமா சொன்னாராம் மன்மோகன் சர்தாரியிடம் "தனக்கு நாட்டுமக்கள் கொடுத்துள்ள கட்டளை இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை பாக்கிட்த்தானம் அனுமதிக்கக்கூடாது என்பதை திட்டவட்டமாக கூறுவதே" என்று சொன்னதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த செய்தியை முதலில் பார்க்கும் போது, தலைமை அமைச்சர் இந்த செய்தியை சொன்னதும் அதிபர் அப்படியே கையை கட்டிக்கொண்டு ஐயா இல்லை ஐயா நாங்கள் எல்லாம் அப்படி செய்வது இல்லை ஐயா. எங்க பெயரை கெடுக்க யாரோ அப்படி எல்லாம் சொல்லுராங்கையா என்று அதிபர் கெஞ்சியதை போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் விதமாக இந்த செய்தி தோன்றும்.

ஆனால் தமிழகத்து தமிழர்களுக்கு இந்த செய்தி மூலம் தலைமை அமைச்சர் சொன்ன செய்தி என்ன. "இலங்கை ஒரு இறைமை பெற்ற நாடு, அந்த நாட்டை இதை செய் அதை செய் என்று எல்லாம் எதுவும் சொல்ல முடியாது" என்று சொன்ன இதே தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கு தான் இன்றைக்கு பாக்கிட்த்தானத்திற்கு எச்சரிக்கை விடுகிறார்.

அது மட்டுமா அப்படி எச்சரிக்கை விடுவது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாம். அப்படி என்றால், ஈழத்தமிழர்களை காக்கவேண்டும் என்று கெஞ்சினோமே, உயிர்களை கொடுத்தோமே, நாங்கள் எல்லாம். நாங்கள் எல்லாம் என்ன இந்திய நாட்டின் மக்கள் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா மன்மோகன் சிங்கு.

அல்லது பாக்கிட்த்தானம் ஒரு இறைமை இல்லா நாடாக எப்போதில் இருந்து மாறியது என்றாவது தெரியபடுத்துகிறீர்களா. இந்தியாவோடு இருந்தும் அனாதைகள் என்று சொல்லாமல் உணர்த்தியமைக்கு மிக்க நன்றி உங்களுக்கு. தமிழகம் இனியாவது சிந்திக்குமா………..

Saturday, June 6, 2009

இந்தியா எல்லாம் ஒரு நாடா? அதற்கு என்ன தகுதி இருக்கிறது எங்களை கட்டுப்படுத்த!!!!

http://www.defence.lk/new.asp?fname=20090601_07

“According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.

To India we say that not only will there be no devolution of any sort because it is the necessary and sufficient step to separation but also the Indo Lanka Accord forced on us by India will be annulled and thrown out so that we could cleanse this land of the last vestige of Indian hegemony. You created the LTTE with the intention of annexing our land. We liquidated what you created. You can annex the moon much easier than that. We thank India for not voting against us at the UNHRC. We attribute it to the wisdom of that very harmless and soft spoken intellectual Dr.Manmohan Singh. There are many in India who would have loved to vote against us but if that happened, India would have found it very uncomfortable to live anywhere in Asia in particular at her present location with her neighbours. She will then have to move the entire Indian sub continent to a location near America where she would be under the protection of American hegemony. That probably is why Japan decided to abstain though she was originally for voting against Sri Lanka

L. Jayasooriya “

மேலே சொன்ன தளத்தில் இந்தியாவை தலைப்பிலே சொன்னதோடு மட்டும் நில்லாது. அப்படி எங்களை ஆதரிக்காமல் ஐ நாவில் எதிர்க்க நினைத்து இருந்தால். இந்த இடத்தைவிட்டே காலி செய்துக்கொண்டு அமெரிக்காவுக்கு அருகில் சென்று இருக்கவேண்டியது தான் என்றும் சொல்லி இருக்கிறது சிங்களம்.

இதற்கு என்ன பொருள், பாக்கிட்த்தானம், சீனா, சிங்களம் என்ற மூன்று நாடும் இந்தியாவை அழித்துவிடும் என்று மிரட்டும் விதமாக அவர்களது பேச்சு இருக்கிறது. அந்த திமிர் பேச்சு இடத்தை காலி செய்துகொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு சென்று உள்ளது என்றால் பாருங்கள்.

இந்தியாவை பொருத்த வரை இந்த மாதிரியான திமிர் பேச்சுக்கள் புதிதல்ல. பாக்கிட்த்தானம் பேசாத பேச்சா. இத்தணைக்கும் 3 முறை இந்தியாவிடம் அடி வாங்கி ஒருவருக்கும் தெரியாமல் அழுத்த நாடுதான் அது. இருந்தாலும் அவர்கள் ஆக்ராவில் வந்து பேசிச்சென்ற பேச்சுக்களை இன்றைக்கும் செய்திகளில் படிக்கும் போது இந்தியாவை பற்றிய மதிப்பு இந்தியர்களுக்கு குறைவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்.

இந்தியாவை போல் இராணுவம், வான் படை, கடற்படை என்று இருக்கும் நாடாக பாக்கிட்த்தானம் இருந்தாலும். அந்த நாட்டை ஒரு நாடாக ஒருவரும் மதிப்பது இல்லை தான். காரணம் பாருங்கள் இப்போது சம்பந்தமே இல்லாமல் தாலிபான் பாக்கிட்த்தானத்தை மிரட்டுகிறது.

அமெரிக்காவில கூப்பிடாங்கோ ஆப்பிரிகாவுல கூப்பிட்டாங்கோ என்று இந்தியாவிடம் அழக்கு காண்பித்த நாட்டிற்கு, ஒரு முகவரி இல்லாத தீவிரவாத கூட்டம் சவால் விடுகிறது. எங்களின் கோரிக்கைகளை நிராகரித்தால் நாட்டையே சூரையாடுவோம் என்று மிரட்டுகிறது.

அவர்கள் போட்ட போட்டில் ஆடிப்போய் அய்யோ அப்பா என்று அலர, காப்பாற்ற அமெரிக்கா விரைந்து சென்று தாலிபான்களை அடித்து விரட்டிக்கொண்டு இருக்கின்றது.

இந்தியாவை பற்றியும், இந்தியாவோடு தன்னை ஒப்பிட்டால் தான் தான் பெரியவன் என்றும் சொல்லிவந்த நாடு. உலகில் இந்தியாவை கீழ்த்தரமாக வர்ணிப்பதில் அந்த நாட்டிற்கு அப்படி ஒரு இன்பம். அந்த விமர்சனங்களை படிப்பதில் அந்த நாட்டவர்களுக்கும் அவ்வளவு இன்பம்.

இப்படி தான் சுதந்தரம் அடைந்ததில் இருந்து பேசி வந்தது அந்த நாடு. ஆனால் இன்றைய நிலைமை என்ன. காசுமீர பள்ளத்தாக்கில் வந்த பூகம்பத்தில் புதைந்த மக்களையும் உடமைகளையும் மீட்க்க இந்தியாவின் நுட்ப்பமும் படைபலமும் அவர்களுக்கு தேவைப்பட்டது. அடுத்தவர்கள் நாட்டை சூரையாடுவேன் என்று சொன்னதும் காலில் விழுந்து கெஞ்சுவதை பார்த்த அமெரிக்கா, இப்படியே விட்டால் கையில் இருக்கும் அணுகுண்டுகளை தீவிரவாதிகளிடம் விற்றுவிட்டு கொள்ளை போனது என்று கள்ளகணக்கு காட்டும் என்ற அச்சத்தில் தனது படையை அனுப்பி அடித்து நொருக்கித்தான் பாக்கிட்த்தானத்தை காப்பாற்றிவருகிறது.

இந்த கேள்விகளை இந்தியா இப்போது பாக்கிட்த்தானத்திடம் கேட்டால் என்ன சொல்லும் என்று கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். உலகத்தின் முன் முழு அம்மணமாக ஓடவிட்ட அவமானம் அவர்களுக்கு. வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை. அய்யோ பாவம் இந்த கதியத்த நாடு தான் இந்தனை வாய் வார்த்தைகள் பேசியதா என்றும் நினைத்தால் சின்ன பிள்ளை கையில் இருக்கும் கண்ணடி குண்டை காட்டி வீரம் பேசுமே அது தான் நினைவுக்கு வந்து போகிறது.

இத்தணை பலம் பொருந்திய நாடாக இருந்த நாட்டின் நிலைமையே இப்படி. இதனுடன் ஒப்பிட்டால் சிங்களம் என்ன ஒரு சுண்டைகாய் என்று சொல்லாமா.

30 வருடமாக சொந்தமாக ஒரு வருமானம் கிடையாது. நாட்டில் அதிபர் கட்டும் அடுத்தவேளை உள்ளாடை கூட அடுத்தவன் கொடுக்கும் பணத்தில் வாங்கி உடுத்துவது. நாட்டில் உள்ள போராளிகளுக்கு பயந்து 40,000 வீரர்கள் இராணுவத்தை விட்டு ஒரே நாளில் ஓடிய நாடு. அப்படி ஓடும் வீரர்களுக்கு பழிகொடுக்க மனித வளம் பற்றாகுறையால் இயந்தரங்களின் துணையை நாடிய நாடு.

இன்றைக்கு சீனம், இந்தியா, பாக்கிட்த்தானம், அமெரிக்கா, சப்பான் நாடுகள் கொடுக்கும் பணத்தை நிறுத்தினால். அடுத்த நாள் உணவிற்கே மனித நரகறிதான் உணவு என்ற நிலையில் இருக்கும் பிச்சைகார நாடு இந்த சிங்களம்.

பொருள் கொடுக்கும் அத்தணை நாட்டிற்கும் சிங்களத்தையும் ஈழத்தையும் விலைபேசி கொடுத்துவிட்டு பொருள் வாங்கி வயிறு வளர்க்கும் நாடு இந்த சிங்களம். நாடு முழுவதும் சிங்கள சோம்பேறிகளை வைத்துக்கொண்டு. எந்த ஒரு படிப்போ வேலையோ செய்யமுடியாத சோம்பேறிகள் தான் எல்லா இடத்திலும் முதலாளிகளாக இருக்கவேண்டும். என்னதான் படித்தாலும் உழைத்தாலும், உடல் உழைப்பும் கூலியும் தவிர வேறு எதுவும் கிடையாது என்று தமிழர்களை துன்புறுத்தும் நாடு இந்த சிங்களம்.

சிங்களத்தோடு ஒப்பிடும் போது தாய்லாந்து நாடு எல்லாம் கூட தனது திறமையில் இன்றைகு அமெரிக்காவின் அலுவலக வேலைகளை தாய்லாந்திலேயே இருந்து செய்துக்கொடுக்கின்றது. இன்றைக்கு இந்தியாவிற்கு அடுத்த மனிதவள நாடாக அந்த சிறிய நாடு திகழும் இடத்திற்கு கூட இந்த சிங்களம் வளரவில்லை.

21 ஆம் நூற்றாண்டில் மனித அறிவின் வளர்ச்சிக்கு கொஞ்சமும் பொருந்தாத சாதியத்தை கையில் பிடித்துக்கொண்டு, அதன் அடிப்படையில் இலட்சக்கணக்கில் மக்களை மாகொலை செய்யும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது சிங்களத்தின் கொடூர மனம்.

சாதியம் வளர்ப்பது, அடுத்தவனது உழைப்பை திருடுவது. அப்படியேனும் கேள்வி கேட்டால், கேட்டவனை இல்லாமல் செய்வது என்று அடாவடியாகவே வளர்ந்த சிங்களத்திற்கு, போராளிகள் தக்க பதிலடிகளை கொடுத்துவந்தார்கள்.

இன்றைக்கு இத்தணை எகத்தாளம் பேசும் சிங்களம் புலி என்ற சொல்லையே அதனது அகாரதியில் இருந்து எடுத்து இருந்த தொடை நடுங்கி தான் இன்றை இந்தியாவை பார்த்து குலைக்கின்றது.

போதை தலைக்கு ஏறியவனை என்ன சொன்னாலும் அடிவாங்கி கீழே விழும்வரையில் அவனது வாயும் செய்கைகளும் ஓயாதது தான். இது சாராணமாக அனைவரும் பார்க்க கூடிய ஒன்று தான். இதில் சிங்களம் மட்டும் விதிவிலக்கா என்ன.

இந்த பிச்சைகார போக்கிரி நாடு போதையில் உளறுவதற்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியத்தில் இந்தியா இல்லை என்றாலும். இந்தியாவின் அயலூரவு அமைச்சு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது தான் இதில் வேடிக்கை.

வெறும் துறைமுகத்தை மட்டுமே சொத்தாக கொண்ட இந்த நாட்டின் கொட்டத்தை சேது கால்வாய் திட்டத்தை கொண்டே திவாலாக்கிவிடலாம். அது மட்டும் அல்லாது, தூத்துகுடி துறைமுகத்தில் இருந்து அன்றாடம் செல்லும் வெங்காயம் உருளைகிழங்கு மற்றும் மற்ற விளைச்சல் பொருட்களை முடக்கினாலேயே அவர்கள் பாடு பாக்கிட்த்தானம் போடும் பிச்சை வேடத்தைவிட மோசமாக போகும். அனேகமாக சிங்களம் அனைவரும் திரும்பி அசாமுக்கே வந்துவிடுகிறோம் எங்களுக்கு அகதி தகுதிகள் கொடுங்கள் என்று பிச்சை கேட்க்கும் நிலையில் இருக்கும் இந்த சிங்களம் தான் இப்படி பேச்சு பேசி அலைகிறது.

புலிகளின் பெயரை சொல்லியும், தமிழர்களின் பெயரை சொல்லி இதுவரையில் பிச்சை கேட்டு வந்த இந்த பிச்சைகார போக்கிரி சிங்களத்திற்கு இனி யார் எல்லாம் பிச்சை போடுகிறார்கள் என்று பார்போம். அப்படியே பிச்சை கிடைத்தாலும் அந்த பிச்சையை வைத்து அதிக நாட்களுக்கு காலம் தள்ள முடியாது. காரணம் இதுவரையிலும் ஆயுதங்கள் தான் பிச்சையாக வந்தது. பொருட்க்களாக இல்லை, அப்படியே சந்தையில் சிங்களத்திற்கு அளித்துவந்த சிறப்பு அலுகைகள் எல்லாம் பின்வாங்கப்படும் பின்னாளில். இப்போது தான் எந்த சண்டையும் இல்லையே பிறகு எதற்கு சலுகை எல்லாம் என்று அல்லவா கேட்க்கும் உலகம்.

என்ன காரணத்திற்காக இந்தியா இத்தணை தமிழர்களை கொள்ளை கொடுத்ததோ தெரியாது. ஆனால் அது கொடுத்த கொள்ளைக்கு மயான பூசை கட்டாயம் உண்டு. அந்த பூசைகள் வரும் போது தமிழகத்திலோ அல்லது வேறு நாட்டில் வாழும் தமிழர்களோ கவலை கூடப்படப்போவது இல்லை. என்னை பற்றி கவலை கொள்ளாத நாட்டை பற்றி எங்களுக்கு என்ன பெரிய அக்கரை வந்துவிடப்போகிறது.

தென் ஆசிய வரலாற்றிலேயே வங்க பிரிவினைக்கு பிறகு இவ்வளவு மக்களை காவு கொண்டது இந்த சிங்களம் தான். இன்னமும் தெளிவாக சொல்லப்போனால் இட்லருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது சிங்களம். அந்த கொடூர நாட்டினை ஒதுக்குவோம், அவர்களை இந்த கொடூர செயல்களை நம்மால் முடிந்த அளவிற்கு உலகிற்கு எடுத்துரைப்போம். இயூதர்களை கொன்ற செர்மனியை இன்றைக்கும் உலகம் வெறுப்பது போல், சிங்களத்தை பற்றிய அறிவினை உலகுக்கு வழங்குவோம் வாரீர்............