Saturday, February 7, 2009

பயங்கரவாதமும் விடுதலை புலிகளும்

விடுதலை புலிகள், இன்றைக்கு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டு இருக்கும் சொற்கள் என்று சொல்லலாம்.

புலிகளது பெயரை கேட்டாலே உடனே பயங்கரவாதம் என்று எவரும் சொல்லத்தயங்குவது இல்லை தான். அதுவும் பெயருக்கு சொல்வது இல்லை, மாற்றாக சிவப்பு நிறத்தில் இரத்த கறைபடிந்த சோகம் நிறைந்த பல படங்களை காட்டியும். தனது எழுத்துக்களுக்கு பலம் சேர்க்கும் விதமாக கதையுடன் கூடிய ஆவணமாக அவர்கள் வெளியிடத்தவறியது இல்லை.

அப்படி சிவப்பு நிறம் கொண்ட படங்களை சந்தோசிவன்(தீவிரவாதி) காட்டிய போதும் சரி, சோசுவா(ஆணிவேர்) காட்டிய போதும் சரி. மக்களின் மனதில் நிலைத்து நிற்பது எல்லாம் அந்த சிவப்பு நிறம் ஒன்று தான்.

ஆனால் காட்டுவது என்னவோ மக்களை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் இவர்கள். முதலாவது காட்டிய இரத்த சிகப்பு என்னவோ தமிழரது என்று இருந்தாலும். விரயமாகவும் தேவையே இல்லாமல் அந்த இரத்தம் சிந்தப்பட்டதாக காட்டினார் சந்தோசுசிவன். தேவையே இல்லாமல் தமிழன் இரத்தம் சிந்துவதாக காட்டுவார் சேசுவா சான் ஆணிவேரில்.

இவர்கள் இயக்குனர்கள் தான் இப்படி என்றால், செய்தித்தாள்கள் அதற்கும் மேல் ஒரு படிமேல் சென்று. நாளாந்தமும் சிவப்பு நிறப்படங்களை வெளியிட தவறுவது இல்லை.

இந்த படங்களையும் இந்த செய்திகளையும் காட்டி காட்டி, மக்களின் மனதில் காய்ப்புகளையே உருவாக்கிவிட்டனர் இந்த இரண்டு துறையினரும். ஒரு முறை ஒரு காய்ப்பு வந்தால் அந்த இடத்தில் இன்னும் இரு முள் ஏறினால் கூட வலிக்காது. அந்த அளவிற்கு காய்ப்புகளை ஏற்படுதினார்கள் என்றால் அது மிகையாகாது.

பொது மக்களின் மனதில் எப்பவும் ஒரு குழப்பம் இருக்கும். அது எந்த இரத்த படங்களுக்கு அதிக அனுதாபம் கொள்வது என்று. அவர்களுக்கு தெரிந்த ஒரே நீதி இரத்தம் சிந்த கூடாது என்றது மட்டும் தான். அதுவும் சரியான கருத்துதான். எதற்காக அந்த மனிதர்கள் இறக்கவேண்டும். அதும் இப்படி ஒரு கோரச்சாவு.

இப்படி எத்தணையோ நிகழ்வுகளை காட்டாக காட்டி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி எழுதும் கால் காலமும் பக்கங்களும் கூட போதாது எழுத.......

பொதுவானதொரு நீதியை சொல்பவர்கள் எல்லாம், அந்த சாவின் கொடூரத்தை தவிர்தால் என்ன?. எந்த ஒரு மனம் உள்ள மனிதானாக இருந்தாலும் சொல்வது இதுவாத்தான் இருக்கும்.

அவர்கள் சொல்வது சரியே என்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் நிலைதான் இன்று எங்கும். எந்த நாடாக இருந்தாலும் சரி எந்த இனமாக இருந்தாலும் சரி.

என்ன உரிமை இருக்கிறது இவர்களுக்கு அவர்களது உயிரை குடிப்பதற்கு. யார் கொடுத்தார் அந்த அதிகாரத்தை அவர்களுக்கு என்று மனம் கொதிக்காமல் இல்லை தான்.

தனக்கு அந்த சித்தாந்தம் பிடிக்கவில்லை, அதான் அதை சொல்பவனை கொல். தனக்கு அந்த மனிதன் நடத்தையில் நம்பிக்கை இல்லை கொல் அவனை. இப்படி தான் எத்தணை எத்தணை கொலைகள். எண்ணிக்கையில் கொண்டால் நம்மாள் எண்ணி மாளாது என்று தான் சொல்லவேண்டும்.

புலிகளை பொறுத்தவரையில் அரசு செய்வது அரச பயங்கரவாதம்(இதில் கொலை கொள்ளையும் அடக்கம்). அரசை பொறுத்தவரையில் புலிகள் செய்வது பயங்கரவாதம். ஆக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பயங்கரவாதம் புரிவதில் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டியுள்ளார்கள் என்று தான் பொருள்படுக்கிறது.

எதிரிக்கு என்று எந்த ஒரு கருணையும் யாரும் கொண்டது இல்லை ஏசுவை உட்பட. இது வராலாறு சொல்லும் உண்மை.

உலகுக்கே ஒழுக்கம் கற்றுக்கொடுத்த ரோமாபுரியாக இருந்தாலும் சரி அல்லது தமிழகம் ஆனாலும் சரி. இன்று வரை மனிதர்கள் கடைபிடித்து வரும் நிலை அது தான்.

ஒவ்வொரு முறையும் இந்த இரத்தம் படிந்த கதையையோ கற்பணைகளையோ கேட்க்கவோ பார்க்கவோ நடந்தால், மனதில் நினைத்துக்கொள்வது எல்லாம். இந்த நிலைக்கு எப்போது தான் தீர்வுகள் வருமோ... என்றைக்கு தான் இவைகள் எல்லாம் முடிவுக்கு வருமோ என்ற எண்ணம் அனைவருக்கும் வருவது இயல்பே.

பிரமதேசாவிற்கு பிறகு புலிகளினால் இதுவரையில் யாரும் படுகொலை செய்யப்பட்டதாக அறியப்படவில்லை. அதுவும் பிரமதேசா என்ன என்ன அட்டூளியங்கள் செய்தார் என்று தனியாக ஒரு விளக்கம் ஒன்றும் கொடுக்கவேண்டியது இல்லை. அவரது கோடூரங்களின் முடிவு அவருக்கு பொருந்தும் என்று தான் கொள்ளவேண்டும்.

அவருக்கு பிறகு தனது தரப்பில் எண்ணற்ற சேதங்கள் தோன்றிய பின்பும், இது வரையில் படுகொலைகளை நாடாமல் இருப்பதில் இருந்தே புலிகளின் மேல் மதிப்பு வருவதில் ஆச்சர்யம் இல்லை தான்.

மாற்றாக சிங்களத்தின் இரணுவம், அப்பாவி மக்களை கொன்று குவிப்பதிலேயே முனைப்பாக காட்டி வந்துள்ளார்கள் என்றதிற்கு காட்டுகள் ஏராளம் உண்டு.

மக்களே இங்கே சிந்திக்க வேண்டியது ஒரே ஒரு சின்ன செய்திதான். சிந்தித்து பருங்கள். ஒருவேளை இந்த மகிந்தவோ, அல்லது துரோகி கருணாவோ, அல்லது பிள்ளையானோ அல்லது சரத்தோ அல்லது ....... இப்படி பட்டவர்கள் இல்லாமல் இருந்து இருந்தால். முத்துகுமாரையோ அல்லது மற்ற மக்களையோ இது வரையி பலி கொடுத்திருக்க மாட்டோம்.

தன்மோல் படிந்துள்ள பயங்கரவாதி பட்டத்தை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் புலிகள். அரசியல் நெருக்கடி. அதே சமயத்தில் பயந்தாங்கோலிகள் இந்த இராணுவம் என்ற பழி சொல் அவர்களது மேல். அவரவர் தனது பங்கிற்கு தங்களது கொலைகளை நீதி படுத்தினாலும், கொலைகள் கொலைகளே.

புலிகள் யாரை நம்பவைபதற்கு இந்த பாடு படவேண்டும். இதனால் என்ன இலாபம் அவர்களுக்கு என்று பார்ப்பதைவிட. அவர்களுக்கு என்ன நட்டம் என்று பார்த்தால் தன் ஏராளம் என்று தெரியவரும்.

தங்களின் மேல் இப்படி ஒரு நடவடிக்கை தான் மேற்கொள்வார் மகிந்தர் என்று கணித்து செயல்பட்டு இருந்தால் இன்றக்கு மகிந்தர் தமிழில் பேசி இருக்கவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டு இருக்காது தான்.

கருணாவும், பிள்ளையானும் தன்னோடு எதிரியாக ஆனதனால் அவர்கள் இல்லாது செய்து இருந்தால் இப்போது இந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள் புலிகள்.

புலிகளின் கைகளை கட்டி போட்டது யார், என்ன காரணம் விரைவில் தெரியவரும் என்று நம்புவோகமாக. தனி ஈழம் வெல்லட்டும், தமிழர் தாயகம் மலரட்டும். வாழ்த்துகள்.........

9 comments:

Anonymous said...

//பிரமதேசாவிற்கு பிறகு புலிகளினால் இதுவரையில் யாரும் படுகொலை செய்யப்பட்டதாக அறியப்படவில்லை. அதுவும் பிரமதேசா என்ன என்ன அட்டூளியங்கள் செய்தார் என்று தனியாக ஒரு விளக்கம் ஒன்றும் கொடுக்கவேண்டியது இல்லை//

பல முறை முயற்சித்து இருக்கிறார்கள். பெரும்பாலும் தோல்வி. லட்சுமண் கதிர்காமர் இயற்கையாக மரணமடவில்லை என்பதும் புலிகளால் கொல்லப் பட்டார் என்பதும் ஊலகுக்கே தெர்யும். அதன் பின்னும் பல அமைச்சர்களை தற்கொலைப் பிரிவினர் கொல்ல முயன்றிருக்கிறார்கள். பட்டியல் வேண்டுமா?

அரசியல் அறிவி சிறிதும் இல்லாத ஒரு பதிவு.

( இந்த பின்னூட்டம் வெளியிடப்படுமா? )

Anonymous said...

பிள்ளையானும் கருணாவும் தமிழர்கள் பிரபாகரனைப் போல. அவர்களை என்ன காரணத்திற்காக துரோகிகள் என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ளலாமா?

(இந்த பின்னூட்டமும் வெளியிடப் படுமா? :) )

Anonymous said...

Dear panimalar,
You must undestand the meaning of terrorism between TAMIL TIGERS and srilankan govt,srilankan govt killing the eelam peoples deliberately rather fight with TIGERS,because they can't fight with alone..now fighting with indian govt assist, other side is TIGERS THEY ARE FIGHTING WITH THE srilankan army to protect our peoples that also killing,it doesn't mean that is terrorism. Please don't anything without meaning to fill the page.
PUSHPARAJAH
ON BEHALF OF THE EELAM TAMILS

')) said...

இராணும் நிகழ்த்திவரும் படுகொலைகள் தான் ஏராளமாக நடக்கிறது. கடைசியாக நடந்த செய்தியாளர் உட்பட. ஆனால் பழியோ புலிகளின் மேல்.

')) said...

தனது குடும்பத்தின் தொழில் இரகசியங்களை வெளிப்படுத்தும் பிள்ளைகளை கூட துரோகிகள் என்று தான் சொல்வார்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

')) said...

புஷ்பராஜா, புலிகளை பயங்கரவாதியாக சொல்கிறார்கள் என்று தான் குறிப்பிடுகிறேன்.

Anonymous said...

முழுவதும் தவறான தகவல் தந்துள்ளீர்கள்.
-பிரமதேசா என்ன என்ன அட்டூளியங்கள் செய்தார் என்று தனியாக ஒரு விளக்கம் ஒன்றும் கொடுக்கவேண்டியது இல்லை.-
அப்படி நீங்கள் சொல்லும் பிரமதேசாவுடன் கை கோர்த்தவர்கள் தான் புலிகள்.
பிரமதாசாவிற்கு பின்பு புலிகள் கொன்ற தமிழர்கள் எராளம்.
புலிகள் நடத்தும் இந்த யுத்தத்தினால் பண இலாபம் தான் புலிகளுக்கு அழிவு முழுவதும் இலங்கை தமிழர்க்கு.

')) said...

பனிமலர்,
முதல் தடவையாகத் தான் வந்துள்ளேன். உங்கள் எழுத்தில் சில விடயங்களை மேலோட்டமாகவும், நடு நிலை என்ற எண்ணத்தில் சில குழப்பங்களையும் கட்டுரையை வாசிக்கும் போது ஏற்பட்டது. துணிந்து உங்கள் கருத்தை ஆணித்தரமாக எழுதுங்கள். பயங்கரவாதம் என்பது ஆளுபவர் அடக்குபவரை கையாள பயன்படுத்தும் உலகப் புது மொழி

Anonymous said...

சரத் பொன்சகோ கொலை முயற்சி செய்தது யார்?

கருணா அம்மான் விலகும்போது புலி அமைப்பு மிரட்டத்தானே செய்தது. அரசியல் முதிர்ச்சி இருந்தால், கருணாவின் விலகலை சனநாயக முறைப்படி கையாண்டு பல கறைகளை கழுவியிருக்கலாம்.

ஒரு அறிவிப்பு. ஒரே ஒரு அறிவிப்பு. ‘நாங்கள் ராசீவ் காந்தியை கொலை செய்யவில்லை’ என்று சொல்லட்டுமே? சொல்ல மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை புலிகளை எதிர்ப்பவர்களை தாங்கள் என்ன செய்தோம் என்ற வரலாறு முக்கியம்.

புலிகளின் அதிகார வெறியை நீங்கள் நியாயப்படுத்தலாம். ஆனால் அதுதான் ஈழத் தமிழர்களை இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்.