இங்கே தான இருந்தது எங்கே போனது, நீங்க பார்தீங்களா. இப்போ நான் என்ன செய்வேன் எப்படி மற்ற வேலைகளை எல்லாம் செய்வேன். இந்த குண்டூசி மட்டும் கிடைக்கவில்லை என்றால் என் வாழ்க்கை என்னா ஆவது......
ஒரு வேளை அந்த குண்டூசியை பாக்கிஸ்தானுக்கு கடத்திக்கொண்டு போய் இருப்பாங்களோ, இல்லை ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி இருப்பாங்களோ....இல்லை பாக்கிஸ்தான் காஷ்மீரில் கடத்திக்கொண்டு போய் இருப்பாங்களோ..........
இந்த குண்டூசியை கண்டுப்பிடித்து கொடுக்க சொல்லி போலீஸிடம் சொல்லலாமா இல்லை இந்திய இராணுவத்திடம் சொல்லலாமா இல்லை இந்தியாவின் உளவு துறை இராவிடம் சொல்லி கண்டுப்பிடித்து தர சொன்னால் சரியாக இருக்கும்மா.....யார் துரிதமாக கண்டுப்பிடித்து தருவார்கள்......
ஒரு வேளை நாமளே கண்டுப்பிடித்துவிடலாம் என்றால் எனக்கு இருக்கும் வேலைகளின் நடுவில் இந்த குண்டூசியை தேட நேரம் இருக்கும்மா...சரி மாலை வேலை முடிந்து வந்ததும் இந்த குண்டூசியை தேடலாமா ஆனா நான் இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போய்வர வேண்டி இருக்கும்மே வந்த பிறகு அந்த குண்டூசியை தேடி கண்டுபிடிப்போமா இல்ல ஒரே அடியாக சனி ஞாயிறில் தேடுவோமா.....
ஒரு ஆளா தேடினால் இப்படி தான் தாமதம் ஆகும் நமக்கு தெரிந்த வாட்ஸப் குழுக்களில் சொல்லி தேட சொன்னால் அவர் அவருக்கு கிடைக்கும் நேரத்தில் தேடிக்கொண்டு வந்துவிட்டாலும் விடுவார்கள்....முதலில் நமக்கு தெரிந்த வாட்ஸப் குழுக்களுக்கு எல்லாம் அந்த குண்டூசி தொலைந்த இடம் நேரம் மற்றும் அந்த குண்டூசியின் அடையாளம் எல்லாம் தெளிவாக எழுதி அனுப்பிவோம்.....
ஆனா நேற்று இந்தியாவின் சீன எல்லையில் ஏதோ பிரச்சனைகள் சீனாவுடன் உருவாகியுள்ளதாக அல்லவா செய்திகளில் சொன்னார்கள். இந்த நிலையில் என்னுடைய காணாமல் போன குண்டூசியை கண்டுபிடித்து கொடுக்கும் அவகாசம் எல்லாம் இந்த காவல் துறைகோ இல்லை பாதுகாப்பு படைகளுக்குக்கோ இருக்கும்மா என்ன....
நாட்டின் எல்லையில் பிரச்சனை இருந்தா என்ன இல்லை என்றால் என்ன, என்னுடைய குண்டூசி தானே முக்கியம். அந்த குண்டூசி இல்லாமல் என்னால் எந்த வேலையையும் பார்க்கவே முடியாது ஆக எனது குண்டூசியை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று நாம் மாநில அரசை கேட்போம். அப்படி கண்டுபிடிக்க அவர்களால் முடியவில்லை என்றால் ஒன்றிய அரசை கேட்ப்போம். அப்படி அவர்களும் குண்டூசியை கண்டுப்பிடிக்க முடியாமல் போனால் உளவுத்துறையை நாடுவதை தவிர நமக்கு வேற வழியே கிடையாது.....