இந்த படம் ஆங்கில படம் மல்டிபிளிசிட்டி(1996) படத்தின் தமிழாக்கம். வழக்கம் போல வசனத்திற்கு வசனம், காட்சிக்கு காட்சி அப்படியே தமிழில் எழுதி இருக்கிறார்கள் அவ்வளவு தான்.
இதில் சுச்சாதாவை வேறு துணைக்கு அழைத்தும்கொண்டார்கள். இந்த கதையை அவர் 1996ல் வார இதழ்ழில் வெளியிட்டதற்கான ஆதாரங்களையும் மக்கள் வெளியிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.
சங்கர் வழக்கம் போல் ஒரு கல்லூரி அதிலே நாயகனின் நெருங்கிய நண்பருக்கு இடம் கிடைக்கவில்லை என்று கொள்ளை அடிப்பதும், இல்லை அரசியலில் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதுமாக காட்டி நாயகனும் அவர்களைவிட ஒரு பெரிய கொள்ளைகாரனாக மாறுவது, இல்லை மிக பெரிய ஊழல்களை எல்லாம் விட்டு விட்டு ஒரு குண்டூசி தவறுக்கு தலையை எண்ணை சட்டியில் வறுத்து கபாப்பு போடும் படமாக எடுக்காமல் மிகவும் வித்தியாசமாக ஒரு கதையில் எடுக்கிறார் என்றால் என்ன பொருள்.
அது அவருடைய சொந்த சரக்கு இல்லை என்றது தான்.
சமீப காலமாக மிக பெரிய பொருட்செலவில் தமிழில் நிறைய திருடப்பட்ட படங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது. கமலகாசனில் இருந்து இரசினி வரை ஒருவரும் விதிவிலக்கு இல்லை.
கமலுக்கு சில் பேக்டர்(Chill Factor) தசாவதாரமாக வந்த போதே அப்போ இரசினிக்கு என்ன என்ற கேள்வி தோன்றியது. அது எந்திரன் என்று இப்போது தெளிவாத தெரிகின்றது.
மல்டிபிளிசிட்டியின் கதை இது தான். நாயகன் ஒரு கட்டிடம் கட்டித்தரும் ஒப்பந்தகாரன். அவனுக்கு மனைவி மக்கள் என்று வாழும் நடுத்தர குடும்பம். என்றைக்காவது சொந்தமாக தொழில் தொடங்கி முதளாலியாக வாழும் வரை கடினமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று அன்றாடம் கடுமையாக உழைக்கும் ஒரு உழைப்பாளி.
படத்தின் முதல் காட்சிகளில் இவைகளை விளக்கிவிட்டு அவனுக்கு மனைவியையோ அல்லது குழந்தைகளையோ கவனிக்க நேரம் இல்லாமல் தவிக்கும் காட்சியில் மனைவியிடம் வரும் வாக்கு வாதத்தில் அவர்களின் மணவாழ்க்கை முடிவை தேடி போகும் நிலைக்கு வரும் எந்திரனில் அதே காட்சிகளை புதிய மனிதாவில் தொடங்கி காதல் இரத்து என்று முடித்து இருப்பார்கள்.
அடுத்து இப்படி நேரம் இன்றிதவிக்கும் இவனுக்கு இவனை அப்படியே இவனது உருவத்தில் குளோனிங்கு முறையில் இன்னும் ஒருவனை உருவாக்கி வேலைக்கு குளோனிங்கு என்றும் மனைவிக்கு நாயகன், என்றும் கதை நகரத்தொடங்கும். இங்கே எந்திரனில், குளோனிங்கு வேலையில் செய்துகாட்டும் சுறு சுறுப்பும் நேர்த்தியையும், மனைவியிடம் நாயகன் வேலைகளை பகிர்ந்து கொள்ளும் காட்சிகளை இங்கே சிட்டி ஐசுவர்யாவின் மகிழ்வில்லத்தில் எல்லா வேலைகளையும் நொடியில் முடித்து அசத்துவதாக காட்சி அமைத்து இருப்பார்கள்.
ஒரு கால கட்டத்தில் ஒரு குளோனிங்கு பற்றவில்லை என்று துவங்கி பற்பல குளோனிங்குள் என்று ஆங்கிலத்தில் கதை நகர்ந்தாலும் அந்த எல்ல குளோனிங்குகளுக்கும் நாயகன் விதிக்கும் ஒரே விலக்கு தனது மனைவியிடம் ஒருவரும் நெருங்கக்கூடாது என்றது தான்.
அங்கே தான் கதையில் மெல்ல சிக்கல் துவங்கிறது. நாயகன் இல்லாத நேரத்தில் அவனவனும் உருவ ஒற்றுமையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் விளையாடு. இதை தமிழிலே எடுக்க முடியுமா அதனால் அதையே கதையின் முழு திருப்பமாக அமைகிறார்கள்.
ஆங்கிலத்தில் அந்த அளவிற்கு கதை செல்லும் போது நாயகனின் தவறான நேர திட்டமிடுதலில் வரும் தவறில் அவனுக்கு வேலை போகிறது. தமிழிலோ அவனது இயந்திரனை அறிவியல் கழகம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.
இவைகளுக்கு இடையில் நாயகி ஆங்கில கதையில் மறுபடியும் வேலைக்கு செல்வதும் அந்த வேளைகளில் நாயகன் குழந்தைகளையும் தொழிலையும் சமாளிக்கும் காட்சிகளை தான் ஐசுவர்யா பரிட்சை எழுதும் காட்சிகளாகவும், வில்லன்களை எதிர்கொள்ளும் காட்சிகளாகவும் காட்டியுள்ளார்கள்.
இந்த அளவிற்கு ஆங்கிலத்தில் கதை ஆபாசமாக வந்தபிறகு அந்த குளோனிங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது தனது அன்பின் மொத்த உருவமாக மதிக்கும் அந்த பெண்மணி விரும்பும் ஒரு கனவு வீட்டை வடிவமைத்து கட்டி அவளுக்கு பரிசாக கொடுக்குமாறு நாயகனிடம் சொல்லிவிட்டு விலகிக்கொண்டு இடெக்குசாசுல் ஒரு தொழில் தொடங்கி வாழத்துவங்கியதாக கதையை முடிப்பார்கள்.
ஆங்கில கதையில் ஆபாசமாக வந்தாலும் அன்பினை முன்னிறுத்தி மனைவிக்கு அன்பை காட்டும் விதத்தில் அருமையாக கதையை முடித்திருப்பார்கள்.
இது வரையில் தமிழில் திரைக்கதை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் ஒரு தெளிவா ஒரு ஓட்டமாக ஓடும் எந்திரனில்.
ஏன் ஏற்கனவே இருக்கும் திரைக்கதையை அப்படிய ஈ அடிச்சான் பிரதி எடுத்து தமிழில் சொல்வது என்ன அவ்வளவு கடினமா என்ன.
இதற்கு மேல் கதை தீர்ந்துவிட்டது இன்னமும் ஒரு ஒன்னறை மணி நேரம் கதை போகவேண்டும் என்ன செய்ய என்று கையை பிசைந்து கொண்டு எந்த ஒரு கற்பனையும் இல்லாது இரமநாராயணன் பாணியில் பாம்பு, யானை, குரங்கு அம்மன் சிலைக்கு பால் குளியல், பூசை , கற்பூரம் காட்டுதல், என்று இரண்டாம் பாதில் காதில் காளிப்பூவை சொருகி இருக்கிறார் சங்கர்.
இந்த காளிப்பூ சொருகலுக்கு 170 கோடி உரூபாய்க்கள் சொலவு என்றும் இன்னமும் இரண்டு காளிப்பூகளை சொருகுகிறார் சங்கர்.
இந்த அழகில் சுச்சாதாவையும் சங்கரையும் ஐன்சுடைன் அளவுக்கு புகழ்வது மட்டும் அல்லாது கடவுளாக கோவில்கட்டி கும்பிடவேண்டும் என்ற அளவிற்கு பரப்புரை வேறு.
இரகுமானின் பாடல்கள் புது இரகமாக இருந்தாலும் சிவாச்சி பட பாடலில் வரும் வருத்தம் இந்த படத்தில் இருக்கிறது. இத்த பாடல்களை திரும்பபாடும் அளவிற்கு வார்த்தை வீச்சுகள் இல்லை. பேசாமல் இனிமேல் நல்ல கவிஞராக தேடினால் பாடல்களாவது தப்பும் இல்லை சங்கரின் படங்கள் நேராக குப்பைக்கு போவது உறுதி.
இந்த படத்தில் இரசினியும் ஐசுவர்யாவும் எதற்கு நடிக்க வேண்டும் பேசாமல் இரண்டு புதுமுக நடிகர்களையும், இடையே அர்சுனை அழைத்து கொஞ்சம் வசனமும் சண்டைகளும் வைத்து இருந்தலே போது அதை விடுத்து....இரசினிக்கும் ஐசுவர்யாவிற்கும் ஒரு படம் வீண்.
ஒன்று கமலும் இரவிக்குமாரும் சேர்ந்து நேர்த்தியாக பிரதி எடுப்பதை போல் எடுக்கவேண்டும். இல்லை சொந்த சரக்கை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இரசினி இல்லாமல் இனி சங்கர் படம் எடுத்தால் ஒருவரும் வாங்க மாட்டார்கள் அது உறுதி.
10 இலட்சம் முன்பணம் கொடுத்து படம் வெளியிட்ட திரையரங்குகள் எல்லாம் அந்த 10 இலட்சம் கூட இன்னமும் வந்தாக தெரியவில்லை. இதிலே இமாலய வெற்றி, வசூலை குவிக்கும் காவியம் என்ற ஏகவசனங்கள் வேறு.......
கடவுள் தான் காப்பாற்றனும் தமிழ் இரசிக பெருமக்களை.......