இளையராசாவின் இசைக்கு இந்த விருது, அதுவும் ஒருவரும் எனது பங்கு என்று உரிமை கோராத அளவிற்கு ஒரு விருது. அவர் எழுதிய இசைக்கு இந்த விருது என்று அளித்துள்ளாதார்கள் இந்த விருதை.
இராசாவிற்கு இது பெரிய செய்தியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எல்லாம் இது பெரியது தான்.
ஒரு ஒரு தனி மனித சாதணை, நான்காவது முறையாக அவர் வாங்கும் விருது அதுவும் இத்தனை ஆண்டுகால உழைபிற்கு பிறகும் இத்தனை இசை அமைப்பாளர்கள் மத்தியில் தான் இன்னமும் அதே வேகத்தில் இசையை அளிக்க முடியும் என்று அனைவருக்கும் சொல்லும் செயல் அல்லவோ இது.
இராசாவின் வரலாறை புரட்டி பார்த்தால், அவர் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து அவருடன் வளர்ந்த கலைஞர்கள் எல்லாம் தங்களின் பங்களிப்பு போதும் என்று இருக்கும் இந்த கால கட்டத்திலும் என்னால் எப்பவும் அற்புதமான படைப்புகளை கொடுக்கமுடியும் என்ற அவரது ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் உலகுக்கு சொல்லும் விருது அல்லவா இது.
என்ன ஒரே ஒரு குறை அந்த விருது தமிழ் படத்திற்கு கிடைக்காமல் மலையாள படத்திற்கு கிடைத்து இருக்கிறதே என்ற குறை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
பழசிராசா படத்திற்கு விமர்சனம் எழுதும் போது எனது விமர்சனம் இது தான். படத்தில் எல்லா இடத்திலும் பழசிராசாவும் இளையராசாவும் தான் நிறைந்து இருக்கிறார்கள் என்றது தான்.
இளையராசாவே சொன்னது போல் பெரிய பெரிய செய்திகளாக எனக்கு செல்ல தெரியவில்லை என்றாலும். அந்த படத்தை இவர்கள் இருவரும் ஆக்கிரமித்து தான் இருந்தார்கள்.
செயமோகன் அவர்களின் வசனங்களிலும் சரி. பழசியின் நடவடிக்கைகளும் சரி சராசரி மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்டு எதுவும் படத்தில் செய்யவும் இல்லை, பேசவும் இல்லை.
ஆனால் இராசாவின் இசைவீச்சு படத்தின் பாடல்களில் இருந்து காட்சிக்கு காட்சி நம்மை நகர்த்திக்கொண்டே வந்தது நாம் அனைவரும் கவனிக்காமலே நடக்கும் செயலாக அல்லவா அமைந்து இருந்தது.
இந்த காலத்தில் இப்படி ஒரு வரலாற்று படம் எல்லாம் சாத்தியமா என்று இருந்த நிலைபோக, இப்படி என்ன இன்னமும் பழமை வாய்ந்த படங்களையும் கூட எங்களால் படைக்கமுடியும் என்று காட்டிய காவிமாக அல்லவா இந்த படம் அமைந்தது.
இராசாவை பாராட்ட வார்த்தைகளை இனிமேல் கவிஞர்கள் கொடுத்தால் தான் உண்டு, அத்தனை வார்த்தைகளையும் அவர் எப்பவோ வாங்கிக்கொண்டு விட்டார்.
ஆகவே அவரை பாராட்டுவோம் என்று சொல்வதைவிட அவரது தனியாத அந்த இசை அறிவை இன்னமும் அதிகமாக எங்களுக்காக கொடுக்கும் படி வேண்டிக்கொள்வோம்.
இசையும் இராசாவும் என்று இளமை, அவ்வளவு தான் வேறு என்ன சொல்ல.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago