ஜூலை 6, தினமலர் வலைதளத்தில் இப்படி ஒரு தலைப்பு "கூட்டு!" அதன் கீழே செய்திக்கு தலைப்பாக "பார்லிமென்டு கூட்டத்தை உடனே கூட்டு!*மன்மோகன் சிங்குக்கு அத்வானி கண்டிப்பு" என்று செய்தி அறிவித்து இருக்கிறது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினமலர் தனது தரத்திலிருந்து கீழே வீழ்ந்துகொண்டே வருவதை அனைவரும் கவனித்து வரும் ஒன்று தான் என்றாலும். ஒரு எதிர்கட்சி தலைவர் நாட்டின் தலைவரை பார்த்து கூட்டு என்று ஒருமையில் விளிக்க வாய்பே இல்லை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அத்வானி இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ அல்லது இன்னம் என்ன என்ன மொழி அவருக்கு தெரியுமோ அந்த மொழிகளில் எல்லாம் செய்தி அறிவித்திருந்தாலும் இப்படி ஒருமையில் விளிக்கும் அளவிற்கு தரம் குறைந்தவர் அல்ல. இருப்பினும் இப்படி குரும்பு தனமாகவும், பொறுப்பற்ற போக்கிலும் தினமலர் ஒருமையில் நாட்டின் தலைவரை விளித்து எழுதுவதின் நோக்கம் என்ன.
எதோ ஒரு செய்தி ஒரு மூலையில் வந்த செய்தி ஆசிரியரின் கவனத்துக்கோ அல்லது அடுத்தவரின் கவனத்துக்குகோ வராமல் இருந்துவிட்டது என்று சொல்லமுடியாத நிலையில் தினமலர். தலைப்புகளைக்கூட கவனிக்காமலா ஆசிரியர் செய்தியை வெளியிட சொல்வார் என்று அனைவரும் கேட்பது காதில் விழாமல் இல்லை.
இப்படி எல்லாம் தரக்குறைவாக எழுதுவதால் தினமலரின் தரம் தான் குறையுமே தவிர, அத்வானி அவர்களின் மதிப்போ அல்லது மன்மோகன் சிங் அவர்களின் மதிப்போ குறைய போவது இல்லை. கற்றுக்கொள்வாரா டி.வி.இராமசுப்பையர், நாளைக்கு இவரையும் சொன்னான், வந்தான், போனான், கேட்டான் என்று ஒருமையில் எழுதி இப்ப என்ன வந்துவிட்டது என்று கேட்டாலும் கேட்க்கும் இவரது தினமலர் குழு.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago