Thursday, February 22, 2018

பாசக சொன்ன அந்த மாற்றமும் கமலின் மநீம சொல்லும் மாற்றங்களும் என்ன

2014ல் இந்திய நாட்டை காப்பற்றி மீட்டு எடுக்கவு, உலக அரங்கில் வல்லரசாக இந்தியாவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதாக சூளுரைத்தது பாசக.

2014ல் பொது தேர்தலில் அந்த தேவைக்கான மாற்றங்கள் எவைகள் என்றும் பட்டியலிட்டது.

அந்த பட்டியலில் முதலிடம் பிடித்த செய்திகள் நாட்டில் மக்களின் பணத்தையும் வளத்தையும் எப்படி காங்கிரசு பறித்து ஒரு சில செல்வந்தர்களிடம் கொடுத்ததும் அதற்கு கையூட்டாக பெற்றுக்கொண்ட செல்வங்களை அயல் நாடுகளில் பதுக்கி இந்தியாவிற்கு எந்த வித நம்மை பெற்றுவிடாத விதம் பதுக்கப்பட்டுள்ளது என்று வசனங்களை விதைத்தும் அதன்பால் கிடைக்கப்பெறும் பணத்தை ஒவ்வொரு இந்தியருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தது.

மேற் சொன்ன செயல்களை செய்துவிட்டு தான் மற்றவைகள் என்று முழங்கிய பாசகவை நம்பி அந்த மாற்றங்கள் இன்றைய தேவைகள் என்று எண்ணிய இந்தியர்கள் குறிப்பாக ஏழை மக்கள் தங்களின் வங்கி கணக்கில் நாளை அரசு கொடுக்க போகும் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 இலட்சம் பணமும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அதுவும் மைய அரசு வேலை என்ற வசனங்களை நம்பியும் வாக்களித்தார்கள்.

பாசக பேசிய அந்த மாற்றங்கள் இன்று மாய மாற்றங்களாக மறைந்து இந்த 4 ஆண்டுகளில் அந்த பாசக அரசு நிகழ்த்தி இருக்கும் கொடுமைகளை என்ன என்ன என்று விரிவாக பார்ப்போம்.

தனக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த அந்த ஏழைகள், ஒன்றுமே வேண்டாம் நாங்கள் படித்து முன்னேறி கொள்கின்றோம் என்று இருந்த கல்வித்துறையில் இனி யார் யார் எல்லாம் எந்த எந்த படிப்புகள் படிக்க வேண்டும் என்றதை நாங்கள் தீர்மானித்து சொல்கின்றோம். வெறுமனே அரசு பள்ளிகளிலோ அல்லது எந்த வித குடும்ப பின்னணியோ இல்லாத குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து பெரிய வேலைகளுக்கு எல்லாம் செல்லும் வேலை எல்லாம் இனிமே நடக்காது என்று நாடு முழுவதும் நீட்டு தேர்வை அமெரிக்க நிறுவனத்தை நடத்த சொல்லி அதில் பெரும் செல்வம் படைத்த மக்கள் படிக்கும் பயிற்சி மையங்களில்(மய்யம்களில் இல்லை) படிப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி.

அப்போ இது வரையில் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவர்கள் ஆனது எல்லாம் என்ன என்று கேட்டதற்கு அந்த காலம் எல்லாம் இனிமேல் கிடையாது, கல்வி அதுவும் மருத்துவம் இனி ஏழைகளுக்கு கிடைக்காத கனி என்று பறித்த மாற்றம் தான் நடந்தது.

மருத்துவம் தவிர மற்ற படிப்புகள் படித்து நாட்டில் கிடைக்கும் வேலைகளை ஊர் விட்டு ஊர் வந்து ஆண்ணும் பெண்ணும் எந்த வித்தியாசமும் இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இந்தியாவின் எந்த ஒரு ஊருக்கும் சென்று வேலை பார்த்து வந்தார்கள். அப்படி இருக்கும் மக்களின் அன்றாட தேவைகளாக இருந்த உணவு ஒரு அடிப்படை தேவை.

கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறிக்கொண்டு இருந்த உணவு சென்ற ஆண்டு கொண்டு வந்த ஒரே வரிவிதிப்பு என்ற பெயரில் ரூ100க்கு சாப்பிட்டால் ரூ130 வசூலிக்க படுகின்றது. இது என்ன ஐயா பகல் கொல்லையாக இருக்கின்றது என்ற கேள்விக்கு இந்த வரி விதிப்பினால் மக்கள் வாங்கும் பொருட்களின் விலை அதளபாதாள விலைக்கு கிடைக்கும் என்று கட்டியம் கூறி நடைமுறைபடுத்த பட்ட வரிவிதிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ ஏழை மக்களே. பழையபடி மக்கள் வீட்டில் இருந்து மத்திய உணவை கட்டிக்கொண்டும் செல்லும் செயலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். செல்வந்தர்களுக்கு ரூ130, ரூ100ம் ஒன்று தான் என்றதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

இத்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் நாங்கள் சுதந்திரமாக எங்க நேரத்திற்கு கிளம்பி வேலைக்கோ கல்லூரிகளுக்கோ சென்று கொள்கின்றோம் என்று ஒவ்வொரு ஏழை மக்களும் தங்கள் வீட்டின் பெண்களு சிறிய வண்டிகளை வாங்கி கொடுத்து நிம்மதியாக இருந்தார்கள். இன்று பெட்ரோல் விலையை இமாயலய உயரத்திற்கு ஏற்றி நாங்கள் என்ன செய்ய சர்வ தேச சந்தையின் விலை ஏற்றத்தை நாங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று கைவிரிக்கின்றது. அப்போ இது வரையில் இப்படி நிலைமை இல்லையே இப்போது மட்டும் ஏன்ற கேள்வியை முன் வைக்க அதற்கு இது வரையில் 60 ஆண்டுகாலம் பதவியில் இருந்த காங்கிரசு தான் காரணம் என்று சொல்லி ஒன்றும் செய்வதற்கு இல்லை இனி உங்கள் வீட்டு பெண்களை அரசு பேருந்துக்களை பயன் படுத்த சொல்லுங்கள் என்று சொல்லி சிரிக்கின்றது.

காங்கிரசு காலத்தில் பெட்ரோலிய பொருட்களில் அடிப்படை தேவைகளுக்கு இல்லாமல் சொகுசு தேவைகளுக்கு என்ற பயன்படுத்தும் பொருட்களின் மேல் விதித்து இருந்த வரியில் கிடைத்த பணத்தை ஒரு சேமிப்பு கணக்கில் சேர்த்து வந்தார்கள். அந்த பணத்திற்கு கிடைக்கும் வட்டியில் அவ்வப்போது ஏற்படும் கச்சா எண்ணையின் சர்வதேச விலை மாற்றம் நாட்டில் ஏழை மக்கள் பயன் பாட்டில் இருக்கும் டீசல் மண்ணெணையில் விலையை சரி செய்துக்கொண்டு இருந்தார்கள். இந்த சரி செய்யல் நடவடிக்கையால் நாட்டில் வளர்ந்து வந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் வானுயர எகிராமல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

வாசிபாய் அரசு பதவி ஏற்றதும் தங்ககர சாலை என்று ஒன்றை நிறுவினார்கள், கேட்டதற்கு இந்த சாலைகள் அமைந்தால் இந்தியாவின் எதிர்காலத்தில் எல்லா பொருட்களின் விலைகளும் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டு ஏழை எளிய மக்கள் பெரும் பயனை அடைவார்கள் என்று ஆரூடம் கூறினார்கள். அந்த சாலைகளை அமைக்க இந்த பெட்ரோலிய சேமிப்பு பணம் பயன்படுத்தபட்டதன் விளைவு இன்றைக்கு எங்கள் வீட்டு பெண்கள் மறுபடியும் அரசு பேருந்துகளின் தயவில் பயணம் மேற்கொண்டு படிக்கவும் வேலைகும் செல்லும் நிலைக்கு தள்ளி இருக்கிறார்கள். இன்றும் இந்த விலை எல்லாம் ஒரு விலையா என்று அலட்டிக்கொள்ளாமல் செல்லும் செல்வந்தர்களையும் பார்கின்றோம்.

ஒரு பேட்டியில் எச்ச சர்மா சொல்கிறார், நான் ஏறி செல்லும் விமானத்தில் என்னைவிட உயர்ந்த விலையில் ஒரு பொதுவுடமை கட்சியின் தலைவர் செல்கிறார் என்ன எகத்தாளம் இருக்கும் என்று வெளிப்படையாகவே சொன்னார், பேட்டி தொகா பதிவு உடியுபில் கிடைக்கிறது தேடி பார்க்கவும்.

ஆதார எண் இல்லாதவர்களை சாக சொல்லுங்கள் என்று இன்றைக்கு சொல்கிறார்கள் பாசகவினர், ஏன் என்று கேட்டதற்கு இந்த எண் இல்லை என்றால் நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் மலிந்துவிடும் என்று வீர வசனம் பேசினார்கள். ஆனால் இன்றோ இந்த எண் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் எந்த சுவடுமே இல்லாமல் சுருட்டிய பணத்தோடு குடும்பம் குடும்பமாக செல்வந்தர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி செல்வதும் அதற்கு காரணம் காங்கிரசு தான் என்றும் இன்று பாசக சொல்லும் மாற்றங்களையும் பார்த்து வருகின்றோம்.

யார் யார் எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த எந்த மதங்கள் எல்லாம் இருக்க வேண்டும். எந்த எந்த மக்கள் எல்லாம் என்ன என்ன படிக்க வேண்டும். எங்கே எப்படி வாழ வேண்டும் என்ற மாற்றதில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பாசக.

இவைகள் வெளியில் தெரிபவைகள் மட்டுமே இன்னும் வெளியில் தெரியாத மாற்றங்கள் புதைந்துகிடக்கிறது அவைகளை நாம் பார்க்கும் போது இனி இந்தியாவில் நாம் எல்லாம் அகதிகளா என்று அதிரும் வகையில் தான் அவைகள் இருக்கும்.

நேற்றைக்கு மநீமவை தொடங்கி வைத்து கமலும் இப்படி ஒரு பிரச்சாரத்தை தான் முன்னெடுத்து பேசி இருக்கிறார்.

கமலின் மாற்றம் இந்த பாசகவின் மாற்றத்தின் நீட்சி என்றது மக்களுக்கு நன்றாக தெரிந்தாலும் மௌனமாக இருப்பவர்களும். இல்லை கமல் கொண்டு வரும் மாற்றம் தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்று வாதிடுவதையும் பார்க்கும் போது பகீர் என்று இருக்கிறது.

ஏழை எளியவர்களுக்கு மக்களாக பிறந்து கடினமாக உழைத்து படித்து பட்டம் வாங்கிய மக்களை இன்றைக்கு பக்கோட விற்க போ என்று சொன்ன பாசகவின் வசனத்தை கமலின் மநீம நாளை தமிழக மக்களை நோக்கு இன்னும் துல்லியமாக சொல்லும் என்றது உறுதி.

இப்படி பட்ட மாய மாற்றம் என்ற சொற்களை நம்பி ஏமாறாதீர்கள் மக்களே, உங்களின் அடுத்த தலைமுறையை இந்த பாதாள படுகுழியில் நீங்களே தள்ளிவிடாதீர்கள்.

1 comments:

Anonymous said...

First change ur DP. if we fight between us brahmins will continue the game in different names ( Bjp, Indutuva, kamal , Rajini etc..)