ஒரு காலத்தில் வடக்கதிய மக்கள் சொல்லும் வாசகம் இது, தமிழ் நாட்டிலே இளநீர் விற்பவர் கூட ஆங்கிலம் பேசுகிறார் அதுவும் அழகாக பேசுகிறார் என்று சொல்வார்கள்.
தமிழே தெரியாமல் தமிழகத்தில் ஆண்டுகளாக தங்கி வாழ்கையை ஓட்ட முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறது. இது தென்னகத்தில் இருக்கும் அத்தனை மாநிலங்களுக்கும் பொருந்தும். பெங்களூருவில் கன்னடம் தெரியவில்லை என்றாலும் இரண்டு முறை அவர்கள் சொல்லும் போதே அது என்னவாக இருக்கும் என்று புரியும். தெலுகு கொஞ்சம் கடினம் இருந்தாலும் கேட்டு புரிந்துக்கொள்ளலாம். மலையாளம் அப்படியே எந்த மொழிமாற்றமும் இல்லாமல் புரியும் தென்னகத்தாருக்கு.
ஆனால் வடக்கில் இருந்து வருபவரும் அதே பாணியில் தென்னகத்து மொழிகள் அனைத்தையும் அதே போல் புரிந்துக்கொள்வதும் ஆச்சர்யமாக இருக்கிறது.
திரும்ப பேச தெரியவில்லை என்றாலும் தலையை ஆட்டி சமாளிப்பார்கள். தமிழ் பேசுகின்றேன் என்று மேலையில் சிலர் நாடகம் ஆடுவது போல் எல்லாம் நடிப்பது இல்லை அவர்கள், உண்மையிலே ஆர்வமாக தெரிந்துகொண்டு சொல்லும் ஒரு சில வார்த்தைகளால் பேசி செல்வார்கள்.
கல்லூரிகளில் தமிழ் தெரியாமல் வந்து சேரும் பிள்ளைகள் 4 ஆண்டுகள் கழித்து செல்லும் போது ஓர் அளவிற்கு தமிழ் பேச பழகி இருப்பார்கள்.
ஆனால் வடக்க படிக்க போகும் தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு மொழி இடர்பாடுகள். அதுவும் இந்தி தெரியவில்லை என்று ஒரு பட்ட மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களின் தற்கொலைகளை புரிந்துகொள்ளவே முடியவில்லை. எனக்கு தெரிந்து கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் வகுப்பு எடுப்பார்கள், சென்னையில் இருந்து செல்லும் விமானத்தில் வம்படியாக இந்தியில் மட்டுமே தான் பேச வேண்டும் என்று போட்ட வாய் மொழி உத்தரவு போல் எதுவும் செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
அப்படி யாரோடு எல்லாம் இந்தியில் இவர்களால் பேச முடியவில்லை என்று இந்த அவமானமபடுக்கிறார்கள். பயிற்று மொழி ஆங்கிலம், பரீட்சை எழுதும் மொழியும் ஆங்கிலம். அங்கே நிறைய தமிழ் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களோடு, எல்லா இடங்களுக்கும் போகவர என்று துவங்கினால் பழகி போகும் பிறகு இவர்களே ஆயிரம் போருக்கு வழி சொல்வார்கள். பிறகு எங்கே முளைக்கிறது இந்த தற்கொலைகள்.
அப்படி என்ன தான் பேச முடியாமல் போய் இவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கப்பா...............

6 comments:
Test
why are you screening and approving comments? will you approve only the comments you like?
அதுதான் தமிழ் நாடு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற மனப்பான்மை பிறப்பிலேயே கொண்ட தமிழர்கள், பிற மாநிலத்தவர் பிற மத்தினர் என்று பேதம் பார்க்கத்தெரியாதவர்கள். மார்வாரிகளும், சவுராட்டிரர்களும், தெலுங்கர்களும் , முஸ்லீம்களும் அனைவருமே சொல்லுகின்றனர், பாதுகாப்புடன் வாழ ஒரே இடம் தமிழ்நாடு என்று. மொழி தெரியலை என்பதற்காக பிற மாநிலத்தவரை தமிழர்கள் ஒதுக்கி வைப்பதில்லை, அப்படி ஒரு சகோதரத்துவம் மற்றும் நட்பு பொங்க பழகுவர்.
ஆனால் மற்ற மாநிலங்களைப்பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. மதராசி என்றாலே அவன் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. திட்டம்போட்டு மூலைக்குத்தள்ளி , தனிமைப்படுத்தி கொல்லாமல் விடமாட்டார்கள்.
The4y did not commit suicide they get killed by mafias. Doctors for many, many years went and study in north, they never complained and commit suicide. Why now and why only Tamils?
நண்பர் கென்னடி எனக்கும் அந்த சந்தேகம் உண்டு, ஆனால் தற்கொலைக்கு தள்ளும் நிலைக்கு தள்ளும் அந்த மொழி தெரியா அவமானம் என்ன என்று தான் தெரியவில்லை...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பர் உசிலை தென்னகத்தில் அந்த நிலை இல்லை, பெங்களுருவிலோ அல்லது மற்ற தென்னக மா நிலங்களில் அந்த நிலை இல்லை. வடக்கத்திய மக்களுக்கு நம்மோடு ஆங்கிலத்தில் அவர்களுக்கு பேச சோம்பேரி தனம் அவ்வளவு தான். தேவை என்றால் ஆங்கிலத்திலும் பேசுவார்கள். ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்று தமிழர்கள் தள்ளி நிற்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். எனக்கு தெரிந்த வரையில் சரளமாக இந்தி பேசவும் எழுதவும் கற்றுகொண்ட தமிழர்களை ஏறாளமாக பார்க்கலாம். அதே சமயம் தன்னை தமிழர் என்று காட்டிக்கொள்ளவே தயங்கும் மக்களையும் அவர்களுக்குள் பார்க்கமுடிவதும் சோகமே. ஒரு கேள்வியை கூட சரியாக கேட்க்க முடியாத மொழி இந்தி சாப்டாச்சா என்று சாதாரணமாக தமிழில் விளிப்பது போல் இந்தியில் இல்லை சாப்டாசி என்று கேட்டு சாப்டாசி என்று பதிலுரைக்கும் மொழி அது. இந்தி நண்பர்களிடம் கேளுங்கள் அசட்டு சிரிப்புடன் ஒத்துக்கொள்வார்கள்.........
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, எனது தளம் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகும் தளம் அதனால் பின்னூட்டங்களை பகுத்து தான் வெளியிடமுடியும்.........
Post a Comment