Sunday, February 4, 2018

பாசக பாராளுமன்ற தேர்தல் தாயாரிப்பில் இப்பவே இறங்கிவிட்டது - தமிழர்களே பலியாகாதீர்கள்

பக்கோடா பட்சட் வெளியானதும் காரசாரமாக போராட்டங்கள் வெடிக்கும் அதை வைத்து மெல்ல வருகின்ற பாராளுமன்ற தயாரிப்புகளில் துவங்கலாம் என்று கணக்கு போட்டு பக்கோடா பட்சட்டை வெளியிட்டது பாசக. ஆனால் நடந்ததோ தலைக்கு 15 இலட்சம் தருவதாக சொன்ன வாக்குறுதியை எட்ட இந்த பட்சட்டிலும் ஒரு அறிக்கை கூட இல்லையே என்று அந்த 15 இலட்சத்தை நம்பி வாக்களித்த எளிய மக்கள் தங்களின் செயலுக்காகவும் இப்படி கழுதைக்கு முன்னால் கேரட்டை தொங்கவிட்டு பொதிசுமக்க வைக்கும் கொடூர முதளியை பிரதமராக தேர்ந்தெடுத்துவிட்டோமே என்ற கவலையும் தான் வந்தது.

இந்த அதிர்ச்சியில் இருக்கும் பாசக சுறுசுறுப்பாக அலைக்கற்றை வழக்கையும் பொபோரசு பீரங்கி ஊழலையும் மறுபடியும் விசாரிக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர்களது தலைமை நீதிபதிகள் பதவியில் இருக்கும் காலத்திலேயே பாசகவிற்கு சாதகமாக மாற்றி கொள்ள அடி எடுத்து வைத்து விட்டது.

அது மட்டும் பத்தாது என்று மாநிலவாரியாக என்ன என்ன குழப்பங்களை ஏற்படுத்தி மக்களுக்குள் சண்டை மூட்டி அதையே சாக்காக சொல்லி மாநிலத்திற்கு மாநிலம் கோத்ரா கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக இந்து, மதம், கோவில், பசு, சாதி, மொழி, கிருத்துவர், இசுலாமியர், ஒடுக்கப்பட்டோர், ஏழை, விவசாயி, கூலிகள் என்று தரம் பிரித்து அவர்ரவர் பிரிவில் ஆட்களை அனுப்பி உடனடியாக மாநிலங்கள் தோறும் கலவரத்தை தூண்ட ஆட்கள் பணிக்கப்பட்டு விட்டார்கள்.

இதன் முதல்கட்டமாக இந்துகள் பெயரில் போராட்டங்கள் அறிவிப்பார்கள் உதாரணமாக மதுரையில் மர்மமான முறையில் வந்த தீயை இங்கே எடுத்துக்கொள்ளலாம். அந்த தீ வந்ததும் அடுத்த மதத்துக்காரர்களின் கடைகளினால் தான் தீ என்று பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். இனி மெல்ல இந்து கோவில்களை பழைய முறையில் இந்துக்களின் பொறுப்புகளில் கொடுக்க வேண்டும் என்று ஒரு போராட்டம் துவங்குவார்கள். இதில் முதல் கட்டமாக அந்த 'இந்துகள்' தான் போராடுவார்கள் திரை மறைவில் தமிழர்களை சந்தித்து மதுரை மீனாட்சி உங்களது கடவுள் தானே அந்த கடவுளுக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம் ஆகவே 'இந்துகள்' போராட்டத்தில் தமிழர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் ஆதரவு தேடுவார்கள். தமிழர்களும் அவசரப்பட்டு 'இந்துக்களுடன்' போராட்டத்தில் இணைவார்கள்.

முதல் நாள் போராட்டத்தில் அந்த 'இந்துக்கள்' தமிழர்களை முன் வரிசையில் நிறுத்தி கோசமிட செய்வார்கள் அனைவரும் பார்க்கும் விதமாக. இந்த பாதிப்பில் கூட்டம் அதிகரிக்கும், கணிசமான அளவில் கூட்டம் கூடியதும் மெரினாவில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தமிழர்களை பெண்கள் என்றும் கூட பார்க்காமல் காவலர்களை கொண்டு நொருக்கியது போல் இந்த போராட்டதில் இருக்கும் தமிழர்கள் பகுதியில் 'இந்துகள்' வெடிகுண்டு வெடிக்க செய்வார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பாதுகாக்க சென்ற அந்த அப்பாவி தமிழர்கள் 'இந்துகள்' வைக்க போகும் அந்த வெடிகுண்டிற்கு பலியாவார்கள். அந்த வெடிகுண்டு கலவரம் இசுலாமியர்கள், கிருத்துவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், என்று வகைக்கு ஒரு பொய்யான செய்தியை வாட்சப்பில் படங்களுடன் பரப்பி தமிழனாக இருந்த கட்டாயம் பகிர் என்று சொல்வார்கள்.

பிறகு மெரினாவின் பின்னால் இருந்த குப்பங்களை காவலர்கள் நடத்திய வெறியாட்டம் போல் தமிழகம் முழுவதும் வகை தொகை இல்லாத கலவரத்தை காவலர்களே முன்னின்று நடத்துவார்கள் கோத்ராவில் நடந்த குசராத்து மாடல் கலவரங்கள். இந்த அனைத்து கலவரங்களிலும் தமிழர்கள் அனைவருக்கும் 'இந்துக்கள்' மீது ஒரு கொடூர பயம் மனதில் தொற்றும் வரை பெண்கள் குழந்தைகள் கர்பிணி பெண்கள் என்று பாராமல் தீயில் இட்டு கொளுத்துவது, கர்பத்தில் இருக்கும் குழந்தைகளையும் கத்தி கடப்பாரை கொண்டு வெளியில் எடுத்து அருக்கில் இருக்கும் மக்கள் வெளியே வரவோ போராடவோ இனி சென்மத்திற்கு அச்சம் கொள்ளும் படி கலவரப்படுத்துவார்கள்.

இவை அனைத்திற்கும் அதிமுக பொம்மை அரசு செய்து தருவதாக பேரம் பேசி முடித்தாகிவிட்டது.

ஆகவே பாசகவோ 'இந்துக்களோ' அழைக்கும் எந்தவிதமான போராட்டங்களிலும் தமிழர்கள் கலந்துகொள்ளவோ வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அந்த போராட்டங்களை தொகா நிகழ்சிகளில் கட்டாயம் பாசகவின் தந்தி தொகா கட்டாயம் காட்டும். ஆகவே அதை பார்த்து தெரிந்துகொள்வது தான் பாதுகாப்பு.

மூன்றாவது முனையாக பாக்கிட்தானத்துடனோ அல்லது சீனாவுடனோ ஒரு போர் நிலைக்கு நாட்டை தள்ளுவார்கள். பிறகு வீர வசனங்கள் பேசுவார்கள், துல்லிய தாக்குதலை நடத்தியதாக பாலிஉட்டில் படமாக்கிய காட்சுகளுக்கு ரகுமான் இசையமைக்க மக்களிடம் காட்டி எங்களது துல்லிய தாக்குதல் போல் காங்கிரசால் எல்லாம் நடத்த முடியாது என்று ஊர் ஊராக சென்று அடவுகட்டுவார் மோடி.

 நான்காவது முனையாக எந்த எந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் எல்லாம் பாசகவிற்கு எதிராக பேசினார்களோ அவர்களது மீது கிரிமினல் குற்றசாட்டுகளை சொல்லி வழக்கு தொடுப்பார்கள். சிபிஐ, வருமான வரிதுறை, என்று வித விதமான படையெடுப்புகள் நாடுமுழுவது நடக்கும் உதாரணமாக சிதம்பரம் பணமதிபிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து கடவு சீட்டையும் முடக்கியது போல் நடத்துவார்கள்.

ஐந்தாவது முனையாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து யார் யார் எல்லாம் இனி வாக்களிக்க முடிதவர்கள் என்று ஆக்க ஒரு அவசர சட்டம் கொண்டு வருவார்கள் முத்தலாக்கு சட்டம் கொண்டு வந்தது போல் திடீர் என வரும். காரணம் நாட்டின் பாதுகாப்பிற்காக என்று நீதிமன்றங்களில் சொல்வார்கள். பிறகு அந்த அந்த மக்கள் கூட்டங்கள் வாக்குகள் செல்லாமல் இருக்கும் விதம் ஆதர் எண்ணை முடக்குவார்கள். ஆதார் அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்றும் ஒரு அவசர சட்டம் அதற்கு பின்னாலே வரும்.

பாசகவிற்கு எதிராக பிரச்சாரம் யார் யார் எல்லாம் செய்கிறார்களோ அவர்களை தீவிவாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் என்று பொய் வழக்குகள் போட்டு தேர்தல் முடியும் வரை காவலில் சிறையில் அடைப்பார்கள் திருமுருகன் காந்தியை எந்த காரணமும் இல்லாமல் 6 மாதம் சிறையில் வைத்து இருந்ததை போல். இந்த நடவடிக்கைகளை பார்த்து யாராவது சாலைக்கு வந்து போராடினால் மெரினாவில் அடித்து நொறுக்கியது போல் நொறுக்குவார்கள் தமிழர்களே சாக்கிரதை.

இணையம் வாட்சப்பின் மூலம் செய்திகளை பரப்புவோரின் ஆதார் எண்களை கொண்டு இணைய இணைப்பு மற்றும் தொலைப்பேசி இணைப்புகள் தேர்தல் காலங்கள் முடியும் வரை முடக்கி வைப்பார்கள். இவர்களின் ஆதார் எண்களும் முடக்கப்பட்டுவிடும், வாக்களிக்கவே முடியாமல் போகும்.

பாசகவை எதிர்க்கும் மாநிலங்கள் தமிழகத்தை போல் பக்கோடா பட்சட்டில் வஞ்சித்தது போல் திட்டங்கள் அறிவித்து இருந்தாலும் வெறும் பக்கோடா மட்டும் கொடுக்கபடும்.

எந்த எந்த தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் பாசகவிற்கு எதிராக இயங்குகின்றதோ அவைகளின் மீது தேச துரோக வழக்குகளை பதிவு செய்து ஒளிபரப்பை நிறுத்தி வைக்கும்.

சுறுக்கமாக சொன்னால் ஆங்காங்கே கோத்ரா பணி கலவரங்களை ஏற்படுத்தி நாட்டில் கலவரத்தை கட்டுப்படுத்த குடியரசு தலைவர் தலைமையில் அறிவிக்ப்படாத ஒரு மார்சல் ஆட்சியை நடத்தும்.

பாசக என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும் ஏன் மீண்டு ஆட்சிக்கு கூட வரட்டும், அதற்காக அவசரப்பட்டு அவர்கள் நடத்தும் போராட்டங்களில் கந்துக்கொண்டு உயிரை விட்டு விடாதீர்கள் தமிழர்களே. 'இந்துகள்' நடத்தட்டும் அந்த போராட்டங்களை இது 'இந்துகளின்' போராட்டம். இந்தியர்களின் போராட்டம் அல்ல என்று புரிந்துகொள்ளுங்கள்.

1 comments:

')) said...

வணக்கம்,

தங்களின் வலைப்பக்கத்துக்கு இதுவே என் முதல் வருகை...

குஜராத்தை காட்டி ஜெயித்தவர், குஜராத் பாணி நாடகத்தை நிச்சயம் இந்திய அளவில் நிறைவேற்றுவார் ! நீங்கள் குறிப்பிட்டதை போல நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் பாகிஸ்த்தானுடன் போர் மூ அல்லது இரண்டாவது "எமெர்ஜென்சி" ஏற்படும் !

இந்திரா காலத்து எமர்ஜென்சியை எதிர்க்க ஜெயபிரகாஷ் நாராயணனும் வலுவான பிராந்திய தலைவர்களும் இருந்தார்கள்... இன்று ?

நேரமிருப்பின் எனது "ஒரு நொடி சிந்திப்போம்..." பதிவினை படிக்கவும். என் ஆதங்கம் புரியும் !

தொடருவோம்...
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி