Tuesday, February 13, 2018

குசராத்து முதல்வராக தமிழிசை சௌந்தர்ராசன் நியமிக்கபடவுள்ளார்

நிர்மலா சீத்தாராமன் தமிழக முதல்வராக நியமிக்கபடவுள்ள நிலையில், தமிழிசை சௌந்தர்ராசன் ஏமாற்றம் அடையாமல் இருக்கும் பொருட்டு குசராத்தின் முதல்வராக நியமிக்கபடவுள்ளதாக பாசக தெரிவித்துள்ளது.

ஏன் குசராத்து முதல்வராக, தமிழகத்துக்கே முதல்வராக கொண்டு வரவேண்டியது தானே என்று கேட்டதிற்கு. தமிழகத்தில் இருக்கும் பாசக மக்கள் அனைவரையும் குசராத்துக்கு குடியேற்றுவதும், தமிழகத்தில் கிடைக்காத அரசியல் பதவிகளை அவர்களுக்கு குசராத்தில் கொடுத்து அழகு பார்க்க இருப்பதாகவும் பாசக தெரிவித்துள்ளது.

எச்ச சர்மாவுக்கு என்ன பதவி என்று கேட்டதிற்கு, அவருக்கு இந்திய இராணுவ துறையில் இணையமச்சர் பணியும், குசராத்து, இராட்சதானம், பஞ்சாப்பு, காசுமீரம் வரையில் உள்ள எலையை தமிழக சங்க பரிவார மக்களை கொண்டு வந்து நிறுத்தி பாக்கிட்தானத்து எல்லையை காக்கும் பணியையும் சேர்த்து வழங்க இருப்பதாகவும் பாசக தெரிவித்துள்ளது.

 நேப்பாளம், வங்காளம் எல்லைகளை என்ன செய்வீர்கள் என்று கேட்டதிற்கு, தமிழகத்தில் பாசக சார்பாக தொகவில் விவாதங்களில் ஈடுபட்டுவரும் வானதி சீறீனிவாசன், கேடி ராகவன், நாராயணன், இராம சுப்பிரமணியம் ஆகியோரை நேப்பாளம், வங்காளம் எல்லைகளை காக்க தமிழகத்தின் சங்க பரிவார இயக்க பகுத்தறிவாளர்களையும், தமிழையும் பக்தியையும் ஒரு சேர வளர்த்த திருவல்லிபுத்தூர் மற்றும் தமிழகத்தில் வாழும் 'இந்துக்களையும்' அழைத்துக்கொண்டு சென்று நேப்பாளம், வங்கம் எல்லைகளை காக்கும் பணியிலும் ஈடுபடுத்தவும் உள்ளதாக பாசக தெரிவித்துள்ளது.

இந்த எல்லை பாதுகாவலுக்கு செல்லும் தமிழக சங்க பரிவார பகுத்தறிவாளர்களுக்கும் தமிழ்காவலர்களுக்கும் 'இந்துக்களுக்கும்' பிரதான் மந்திரி மூத்திர யோசனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ60,000 சம்பளமாகவும், 2 கிலோ தாமரை பக்கோடாவும், பக்கோடா பட்சட்டில் அறிவித்த 10 கோடி மக்களுக்கு வழங்க இருக்கும் பிரான் மந்திரி இன்சூரன்சு யோசனா திட்டத்தினை இந்த தமிழக பகுத்தறிவாளர்களுக்கு கொடுத்து பாதுகாக்கப்படும் என்றும் பாசக தெரிவித்து இருக்கிறது.

மேலும் இந்த மாதிரியான வேலைகள் வேண்டும் என்று நினைக்கும் மக்கள் மோகன் பகாவத்தை அனுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைக்கு ஆள் எடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் நோக்குடன் தமிழகத்தில் ஊர் ஊருக்கு கோமிய மையங்களை திறக்கவும் பாசக நடவடிக்கை எடுத்துள்ளது என்று கோமிய துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக பாசக தெரிவிக்கின்றது.

0 comments: