Saturday, December 15, 2007

சத்தம் போடாதே

நம்பிக்கை தோற்றுவிக்கும் விதமான ஒரு கதையை படமாக கொடுத்த வசந்துவிற்கு வாழ்த்துகள். துவக்கம் முதல் ஒரு இருகமாக செல்லும் படம் பிருத்துவிராசன் வருகைக்கு பிறகு முன்னே பார்த்தவைகள் மறந்தே போகின்றது. கேரளத்து நடினாக இருந்தாலும் தமிழ் நகைசுவையில் விளையாடுகிறார் மனிதன்.

திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு குறை எனக்கு இருப்பதாக தெரியவந்து, அவர் என்னை ஒதுக்கி இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் என்ற வசனதில் அந்த பாத்திரத்தின் பண்பை விளக்கிவிடுகிறார் இயக்குனர்.

தோற்றத்திற்கும் நடத்தைக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல் கனவனை கொண்டு அழகாக உணர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் கோர்வையாக பொய் மேல் பொய் சொல்வதும், 6 மாத காலம் கடந்தாக காட்டுவது நம்பும்படியா இல்லை.

பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் பாடலை தவிற்து, பின்னனி இசையோ, மற்ற பாடலோ மனதிலே நிற்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி படங்க்களுக்கு பின்னனி இசை எவ்வளவு அவசியம் என்று அடுத்தவர் சொல்லி தெரியும் நிலையில் யுவனோ, வசந்தோ இல்லை. இருப்பினும் இப்படி கோட்டை விட்டிருப்பது அவர்களுகு தான் குறையே தவிற நமக்கு அல்ல. இராம் படத்தில் இருக்கும் பின்னனியில் ஒரு 20 சதவிகதமாக கொடுத்து இருக்கலாம்........

பானுவின் வீட்டாறாக வருவோரும், இன்ன பிற கலைஞர்களை விரல் விட்டு கணகெடுத்து விடலாம். தேவைக்கு அதிகமான அரங்க அமைபோ, வீரம் காட்டும் விதமாக ஏக வசனமோ, கோடிகளில் அட்டை பெட்டி குப்பைகளை கொட்டி அதன் நடுவே ஒரு 100 ஆட்க்களை ஆட வைத்து பின்னனியில் வயிற்று வலியில் இரகுமான் கதறும் மற்றும் முக்கும் பாடல்கள் போல் இல்லாமல். அழகாக அளவாக படம் எடுத்தமைக்கு வசந்துவிற்கு பாராட்டுக்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் தனி மனித தாக்குதலோ, தனி மனித குறைகளை கேளி செய்யும் விதமாக இல்லாமல். நகைச்சுவையில் பானு சிரிக்கும் போது நமக்கும் சிரிப்பு வருவது இயக்குனரின் இன்னும் ஒரு தனி சிறப்பு.

வெற்றிக்கு பிறகு எத்தணையோ வீர வசனங்களை நாயகன் பேசி இருக்க வேண்டிய இடங்களில் ஒரு புன்னகையோடு நிறுத்தும் தைரியம் வசந்துக்கு மட்டுமே. இதிலே பாலசந்தரரை நினைவூட்டுகிறார் நமக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

படத்தில் இருக்கும் பலம் நல்லவை தான் வெற்றிகொள்ளும், பலவீனம் தனது குறைகளை எவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்தாலும் யாரிடமும் சொல்ல கூடாது போலும் என்று காட்டி இருப்பது. தவிற்து இருக்கலாம் இதையும் அந்த கடைசி காட்சியையும். குணா, சேது, பிதாமகன் இப்படி கதைகளை போட்டு குழப்பிக்கொண்டார் போலும்.

வாழ்த்துகள் வசந்து, உங்களிடம் இன்னமும் இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம். கொடுத்து அசத்துங்கள்...

0 comments: