Friday, December 21, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா -7

ஆக ஆட்சி, அதிகாரம் இவைகளில் இருப்பவர்கள் மற்றவர்களை திறமையாக வேலை வாங்க வேண்டும். அது மட்டும் அல்லாது எப்படி பட்ட நிலைமை வந்தாலும் அந்த நிகழ்வுகளுக்கு தகுந்தது போல் செயல்பட்டு நிலைமையை சீர் செய்யவேண்டும். அந்த நீண்ட பட்டியலை பார்கையில், இப்படி ஒரு அமைப்பு ஏன் தோன்றியது என்ற காரணத்தை புறம்தள்ள வேண்டியதில்லை.

பொதுவாக ஆளுபவருக்கும் ஆளப்படுபவருக்கும் உள்ள ஆளுமை எவ்வளவு என்று பார்ப்போம்.

ஆளப்படுபவன் விரும்பும் வரையில் தான் ஆளுபவரின் ஆளுமை அவரிடம் செல்லும். ஆளப்படுபவனுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டும் அவ்வளவு தான் தவிற வேறு விதியே இல்லை என்றெல்லாம் இல்லை. எந்த ஒரு மக்களாட்சி நாட்டிலும் இப்படி தான். மக்களாட்சி முறை மனிதனின் தனி சுதந்திரத்தை போற்றி பாதுகாப்பது இப்படி தான்.

ஒரு குமுகாயமோ அல்லது நாடோ, இந்த தனி மனிதர்களின் தொகுப்பு. அப்படி இருக்கும் போது, அத்தனை மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்வது இயலாவது காரியம். ஆதலால், பெரும்பான்மை மக்கள் என்ன விரும்புகிறார்களோ அவைகளை பொதுக்கொள்கையாக கொள்ளுவது செயலாக்கத்துக்கு வந்தது.

பின்னாளில் இதுவே, ஒரு கட்சியின் விருப்பத்தை எதிரொலிக்கும் ஆட்சியாகவும் மாற்றம் பெற்றவரையிலும் சரி. ஆனால் தற்பொழுது உலக அளவில், தனது விருப்பம்மாக மட்டும் இருந்தால் போதாது இந்த ஆட்சி அதிகாரம். மாறாக தனக்கு பிடிக்காதவைகளுக்கு எதிராகவும் வேண்டும் என்று வந்து நிற்கிறது. உதாரணமாக இலங்கையை எடுத்துக்கொள்வோம், இந்தியாவை தாரளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்னம் சில விளக்கங்க்களுக்கு பிறகு இந்தியாவை பார்ப்போம்.

தனது மக்களுக்குத்தான் எல்லாம் என்று நின்று இருந்தால் பரவாயில்லை. ஆனால் எல்லாம் எனக்குமட்டும் தான், தன்னை தவிற பிறகு யாருக்கும் எதுவும் கிடைத்து விடக்கூடாது என்ற பொழுதில் அல்லவா ஆயுத போராட்டம் வரை அவர்களை செயலாற்ற வைத்துள்ளது.

ஆட்சியும் அதிகாரமும் எதற்காக, குமுகாயத்தில் இருக்கும் மக்களின் நலங்களையும், பாதுகாப்பையும் உறுதி படுத்துவதும். அந்த மக்களின் முன்னேற்றத்தையும் வளர்த்து, முன்னால் இருந்ததை விட அதிகம் முன்னேரிய மக்களை அந்த குமுகாயத்தில் விட்டு செல்வது தான் ஒரு ஆட்சியின் கடமை.

இதை ஒரு குடும்பம் கொண்டு விளக்கினால் நன்றாக இருக்கும். ஒரு கூலித்தொழிளர் குடும்பத்தில், அவர் அவரது பிள்ளைகளை கட்டாயம் தன்னை போல ஒரு தொழிளாலியாக வரவேண்டும் என்று நினைக்க மாட்டார். மாறாக தனக்கு மேல் பணியாற்றும் அலுவராகவாது பிள்ளை வரவேண்டும் என்று. திட்டமிட்டு பொருள் சேகரித்து, தேடித்தேடி அனைத்தை பிடித்து பிள்ளைகளை வளர்த்து எடுத்து. தனது அந்திம காலத்தில், தான் நட்ட மரம், இன்று காயும் கனியுமாக இருப்பதை பார்த்து கொண்டாடிவிட்டல்லவா செல்வார்.

இது எந்த பொருளாதாரத்தில் இருக்கும் குடும்பத்திற்கும் பொருந்தும். ஒரு குடும்பத்திலேயே இத்தகைய முன்னேற்றங்களை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் என்றால். ஒரு ஒட்டு மொத்த குமுகாயத்தையும் ஆளுவோருக்கு எவ்வளவு கடமைகள் இருக்கும். தனது ஒரு வருவாயை மட்டுமே வைத்து இவ்வளவு முன்னேற்றத்தை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் என்றால். ஒரு நாட்டினுடைய வருமானத்தை கொண்டு என்ன எல்லாம் சாதித்து காட்டமுடியும்.

சொல்லப்போனால், நாட்டின் ஒவ்வோரு மனிதன் ஈட்டும் பொருள் அரசாங்கத்தின் வருவாயே. அந்த மொத்த வருவாயையும் கொண்டு அரசு இயந்திரத்தை நடத்தி மீதம் இருக்கும் பொருளில் மக்களுக்கு வேண்டிய திட்டங்களை கொண்டு, பெற்ற பொருளை மக்களுக்கே திரும்ப கொடுத்து இன்னமு அதிகமாக அவர்களை பொருளீட்ட வைத்து. முதலில் கிடைத்ததைவிட அதிக வருவாயை கிடைக்க செய்வது யார் ஆட்சியில் இருந்தாலும் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்று.

ஆனால் இன்றைக்கு என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது...........

தொடரும்........

0 comments: