Tuesday, December 25, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 8

அரசு, அதிகாரம் என்று வந்தால் இருப்பதை காப்பது, வருவதை எதிர்கொள்வது மற்றும் எதிர்காலத்தை மனதில் கொண்டு வளர்சிதிட்டங்களில் ஈடுபடுது தான் முதலானதாகவும் முறையானதாகவும் பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த பழி தீர்க்கும் வழக்கம் எங்கே இருந்து இத மனித இனத்தில் தொற்றி இருக்கும்.

குடும்பத்துகுள்ளாகவே பார்த்தாலும் கூட அனைவரும் ஒரு மனதாய் சித்திபதும் இல்லை. அனைவரது முயற்சியும் ஒரே நோக்கத்திலோ அல்லது ஒரே தண்மையாகவும் இருப்பதில்லை.

கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவதை போல், பானையிலே பங்கு வச்சா பூனைகளும் சொந்தமடா, சோதனையில் பங்கு வச்சா சொந்தமெல்லாம் தூரமடா என்ற வழக்கு தான் நினைவில் வருகிறது. மனிதனாய் பிறந்த அனைவருக்கும் அவன் விரும்புகிறானோ இல்லையோ அவனுக்கு என்று கடமைகள் அவனுடனே பிறந்துவிடுகிறது.

அந்த கடமைகளை எவ்வளவு தூரம் நிறைவேற்றுகிறார்களோ அவ்வளவு முக்கத்துவம் பெறுவார்கள் அவர்களது குடும்பத்தில். தலைபிள்ளை தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று சொல்லி அவனிடமே எல்லாவற்றையும் எதிர்பார்ப்பது நமது இந்தியர்களுக்கு பழகிபோன ஒன்று. அப்படி அவனும் அவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கருதி, எல்லா வகையான கடமைக்கும் தன்னை ஆட்படுத்திகொண்டு செவ்வனே செய்து முடிப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

அப்படி தலைபிள்ளை சரியாக தலை எடுக்கமுடியாத போது அடுத்து யார் பொறுப்பாக இருக்கிறார்களோ அவர்களிடன் அந்த கடமைகள் செல்வதையும் பார்த்துக்கொண்டு தான் வருகின்றோம். அப்படி தன்னையும் மீறி தனது பதவி செல்கிறதே என்று எந்த குடும்பதிலாவது தலைபிள்ளைகள் சண்டைக்கு நிற்பதில்லை. அங்கே அவனால் முடியாத போது அடுத்தவனிடம் பதவி செல்வதை இவன் ஏற்றுக்கொள்வது அதற்கு காரணம்.

இந்த நிலைக்கும், ஆட்சி, அதிகாரம் இவைகளிலும் பதவி இடம் மாறுவதும் அப்படியே. பொதுவில் வேறு எந்த மாற்றமும் இருக்க முடியாது. இன்றைக்கும் கூட அண்ணன் தம்பி சண்டையில் அண்ணம் பக்கம் இவ்வளவும், தம்பியின் பக்கம் இவ்வளவும் என்று கொல்லப்படுவதையும் தான் பார்க்கிறோம். காரணம், தனக்குத்தான் பதவியும் பட்டமும் வரவேண்டும் என்று உரிமை கொண்டாடுவதுடன் நில்லாமல். அதை எதிர்க யாரும் இருக்கக்கூட கூடாது என்று செயல்படுவது தான் காரணம்.

இந்த நிகழ்வைத்தான் தேவர் மகன் திரைபடத்தில் அருமையாக படம் பிடித்து காட்டி இருப்பார்கள். ஊரே மதிகின்றது என்றால் மதிக்கும் படி இருக்கவேண்டும். அப்படி எதுமே செய்யமுடியாது, ஆனால் என்னை தான் அனைவரும் போற்றவும் பாராட்டவும் வேண்டும் என்றால் எப்படி.

தான் தேடும் பதவியின் கடமையறிந்து அவைகளில் பழக்கம் பெற்று அனுபவசாலி ஆன பிறகு போட்டி இட்டால் யார் வேண்டாம் என்று சொல்லப்போகிறர்கள். அதை விடுத்து, எடுத்தேன் கவிழ்தேன் என்று நான் தான், தான் என்றும் அறிக்கை விடுவதும். பணத்தை இறைத்து சாட்சிகளையும், வாக்குகளையும் விளைக்கு வாங்கியும் பதவிக்கு என்று வந்து நிற்போரை என்ன என்று சொல்லவது.

அப்படி கள்ளத்தணமாக பதவிக்கு வரும் நபரால் நாட்டுக்குத்தான் என்ன நன்மை விளைய போகுது. போன ஆட்சியர், கருவூலத்தை காலி செய்துவிட்டு போய்விட்டனர் அதனால் எல்லோரும் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு அலையுங்கள். இதை என்னை தேர்ந்தெடுத்தர்கான கசப்பு மருந்தாக நினைத்து கொள்ளுங்கள் என்று புலம்புவதையும் பார்த்து வருகிறோம். முதல் 4 ஆண்டுகளில் எதையுமே செய்யாமால், வருகின்ற பொருள் செலவே ஆகிவிடக்கூடாது என்று இருந்த அரசு. பிறகு வந்த ஓராண்டில் 4 ஆண்டு சேமிப்பையும் கொட்டி கவிழ்த்ததுடன், வந்த தேர்தலில் பொய்யும் புரட்டும் ஆக புலம்பி தீர்த்ததையும் பார்க்க முடிந்தது.

ஆக மொத்தம் திறமையும், உழைப்பும் இல்லாத இடத்தில் தான் இந்த வித காழ்ப்புகளும், வன்முறைகளும் பிறக்கிறது என்று கொள்வோமா.

இப்படி பதவிகளும் பட்டங்களும் பெறும் மக்களால் எப்படி முறையாக நடந்துகொள்ள முடியும். என்ன செய்யவேண்டும் என்றே தெரியாது பிறகு எப்படி அரசு நடத்துவார்கள். நீட்டும் இடங்க்களில் பச்சை மையில் கையொப்பம் மட்டும் இட்டால் மாட்டும் போதுமா. எதற்காக என்றாவது குறைந்த பட்சம் தெரியவேண்டாம்.

இப்படி குறுக்குவழியில் வரும் அனைவரும் தான் வந்த பாதை போல் வேறு எவரும் வந்துவிட கூடாது என்று எச்சரிக்கையாக இந்த தாக்குதல்களை எடுக்கிறார்கள். இவைகளை ஒரு வரியில் சொன்னால் முடியாது. விளக்கமாக தருகிறேன்.

தொடரும்...................

0 comments: