Wednesday, December 12, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா-2

சட்டமும், காவல்துறையும் இந்த மாதிரியான வன்முறையாளர்களை அடக்க முடியாத அளவிற்கு என்ன பெரிய வீரர்களா அவர்கள். ஒரு பகுதிக்கு என்று இருக்கும் காவலர்களது எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து செயலாற்றும் போது நாடுமுழுவதும் உள்ள சந்து பொந்துகள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே உளவு பெறவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனும் அந்த படைக்கு உண்டு.

இவைகளை போல நாட்டை விட்டே ஓடினாலும் இண்டர் போல் அமைப்புகள் மூலம் வலைவீசும் வலியும் அவர்களுக்கு உண்டு. இராணுவம் நாட்டை சுற்றியும், காவலர்கள் நாட்டின் உள்ளேயும் என்று அவர்களது படையணிகளுக்கு ஈடாக செயல்படக்கூடியவர்கள்.

பார்வைக்கு எளிதாகவும், அடுத்தவர்களை எளிதில் பேசவைக்கும் அவர்களது திறனும் அவர்களுக்கு என்று மட்டுமே இருக்கும் தனி திறன்கள். இவை எல்லாவற்றையும் விட அவர்களுக்குள் இருக்கும் அந்து உள் உந்துதல். பார்க்கும் விடயங்களை கொண்டு முன்னால் கொண்ட விடயங்க்களோடு எளிதில் தொடர்புபடுத்தி கோர்வையாக்கி அனுமானம் பெரும் விதமே தனி, அதற்கு எல்லாம் கவிஞர்களை மிஞ்சிய கற்பனை திறனும் ஆற்றலும் வேண்டும் அவர்களைப்போல்.

இப்படி தனி தகுதிகளும் திறமைகளும் உள்ளடக்கிய காவலர்களை, ஊடகங்களும் சரி, அரசியல் கட்சிக்களும் சரி கோமாளியாக பொதுமக்களுக்கு சித்தரித்து காட்டுவது தான் மிகவும் வேதனையான விதயம்.

பொதுவாக திரையில் காட்டும் காட்சி இது, காவலர்கள் வருவார்கள். கையூட்டு பெறும் பொருட்டு கைகட்டி நிற்பார்கள். அவர்கள் வீசும் வசவுகளையும் ஏச்சு பேச்சுகளையும் கடமையே என்று கேட்டுவிட்டு, விட்டேறியும் பொருளை எடுத்துக்கொண்டு செல்வதாக காட்டினார்கள், காட்டுகிறார்கள், காட்டுவார்கள். உதாரணத்திற்கு தற்பொழுது வெளியாகி படமான மறுதமலை படத்தை எடுத்துக்கொள்ளலாம். வடிவேலு கொண்டுள்ள பாத்திரம் ஒரு பிச்சைகாரனுக்கு ஈடாக சித்தரிக்கபட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஆனால் உண்மை நிலைமை வேறு. காவலர்கள் மட்டும் சற்று கண் அயர்ந்தால் போதும் ஒரு இரவிலே ஊரே தலைகீழாக மாறும் நிலைமை தான் இன்று நாட்டில் இருக்கின்றது. உதாரணத்திற்கு அண்டை நாடான பாக்கிட்தான், இந்தியாவிலே குழப்பம் விளைய வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கள்ள பணத்தாள்களை துரோகிகளது துணையுடன் நாட்டிலே புளங்கவிட்டது. இந்திய காவல்துறையின் செயல்பாடால் விரைவில் அந்த துரோகிகள் அடையாள படுத்தப்பட்டு, கள்ள தாளின் புழக்கம் அழிக்கப்பட்டது. நாடு முழுவதும் பரவிய அந்த புற்று நோயை கண்டு நீக்கியவர்கள் அவர்கள். இதில் அனைத்து மா நிலத்து காவலர்களும் அடங்குவர்.

இப்படி பட்ட ஒரு பெரும் படையணியை கோமாளியாகவும், கேளிக்குறிய ஒரு கருவாகவும், பொருளாகவும் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன ஊடகத்துக்கு......

தொடரும்........

0 comments: